MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Rambutan Kozhukattai: நாவூறும் சுவையில் ரம்புட்டான் கொழுக்கட்டை.. தேங்காய் பூரணத்துடன் வித்தியாசமான ஸ்நாக்ஸ்!

Rambutan Kozhukattai: நாவூறும் சுவையில் ரம்புட்டான் கொழுக்கட்டை.. தேங்காய் பூரணத்துடன் வித்தியாசமான ஸ்நாக்ஸ்!

Rambutan Kozhukattai : ரம்புட்டான் பழமே இல்லாமல் வித்தியாசமான ரம்புட்டான் கொழுக்கட்டை வீட்டிலேயே செய்வது எப்படி? தேங்காய், நாட்டுச் சர்க்கரை பூரணம், அரிசி மாவு, பாஸ்மதி அரிசி கொண்டு வித்தியாசமான கொழுக்கட்டை செய்யும் முழு செய்முறை இதோ.

2 Min read
Author : Vishnupriya
Published : Oct 09 2026, 07:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ரம்புட்டான் கொழுக்கட்டை
Image Credit : Gemini Ai

ரம்புட்டான் கொழுக்கட்டை

பாரம்பரிய உணவுகளுக்கு எப்போதும் தனிச் சுவையும், அழகும் உண்டு. அந்த வகையில், நமது பாரம்பரிய கொழுக்கட்டைக்கு ஒரு புதுமையான வடிவம் கொடுத்து செய்யப்படும் ஒரு அருமையான சிற்றுண்டி தான் இந்த ரம்புட்டான் கொழுக்கட்டை.

வெளிப்புறத்தில் பாஸ்மதி அரிசியை ஒட்டி வேகவைப்பதால், இது பார்ப்பதற்கு அச்சுஅசலாக ரம்புட்டான் பழத்தைப் போன்றே வித்தியாசமான, கவர்ச்சிகரமான தோற்றத்தைப் பெறுகிறது. உள்ளே சுவையான தேங்காய், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய், பாதாம் மற்றும் முந்திரி கலந்த சத்தான இனிப்புப் பூரணம் நிறைந்துள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் விசித்திரமான தோற்றத்தாலும், நாவூறும் சுவையாலும் கவரக்கூடிய இந்த ரம்புட்டான் கொழுக்கட்டை, மாலை நேர சிற்றுண்டிக்கும், விசேஷ நாட்களுக்கும் ஒரு மிகச்சிறந்த தேர்வாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
தேவையான பொருள்கள்
Image Credit : Gemini Ai

தேவையான பொருள்கள்

பூரணத்திற்கு

துருவிய தேங்காய் - 1 கப்

நாட்டுச் சர்க்கரை - 3\4 கப் முதல் 1 கப் வரை

பாதாம் - 2 டேபிள்ஸ்பூன்

முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1\2 டீஸ்பூன்

கொழுக்கட்டை மாவிற்கு

அரிசி மாவு - 1 கப்

உப்பு - சிறிதளவு

சுடுநீர் - தேவையான அளவு

வெளிப்புறத்தில் ஒட்டுவதற்கு

பாஸ்மதி அரிசி - தேவையான அளவு

38
செய்வது எப்படி? படி 1
Image Credit : Gemini Ai

செய்வது எப்படி? படி 1

பூரணம் தயாரிக்கவும்

முதலில் தேங்காயை உடைத்து துருவி எடுத்துக் கொள்ளவும். கடாயை சூடாக்கி நெய் சேர்த்து, அதில் பொடியாக நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரியைப் போட்டு லேசாக வறுக்கவும்.

பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை உருகி தேங்காயுடன் நன்றாக கலக்கும் வரை கிளறவும்.

அதிகமாக தண்ணீர் பதமாகிவிடாமல், பூரணம் சற்று கெட்டியாகும் வரை வதக்கி இறக்கவும். ஆறியதும் சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

48
படி 2
Image Credit : Gemini Ai

படி 2

பாஸ்மதி அரிசியை தயார் செய்யவும்

பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் ஊறவைக்கவும். குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைத்தால் போதுமானது. பின்னர் தண்ணீரை முழுமையாக வடித்து, அரிசியை தனியாக வைத்துக் கொள்ளவும்.

58
படி 3
Image Credit : Gemini Ai

படி 3

கொழுக்கட்டை மாவு தயாரிக்கவும்

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக் கொண்டு சிறிதளவு உப்பு சேர்க்கவும். அதில் தேவையான அளவு சுடுநீரை சிறிது சிறிதாக ஊற்றி, கட்டிகள் இல்லாமல் மென்மையாக பிசைந்து கொள்ளவும். மாவு கையில் ஒட்டாமல், மென்மையாக இருக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.

68
படி 4
Image Credit : Gemini Ai

படி 4

பூரணத்தை வைத்து உருண்டை பிடிக்கவும்

மாவிலிருந்து சிறிய அளவு எடுத்து கையில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ளவும். நடுவில் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள தேங்காய்–நாட்டுச் சர்க்கரை பூரண உருண்டையை வைத்து, மாவால் பூரணத்தை முழுவதுமாக மூடி உருண்டையாக பிடிக்கவும்.

78
படி 5
Image Credit : Gemini Ai

படி 5

ரம்புட்டான் தோற்றத்தை உருவாக்கவும்

தயாரித்த கொழுக்கட்டை உருண்டையை, ஊறவைத்து தண்ணீர் வடித்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியில் போட்டு மெதுவாக பிரட்டவும்.

அப்போது பாஸ்மதி அரிசி உருண்டையின் வெளிப்புறத்தில் ஒட்டிக் கொள்ளும். இதுதான் கொழுக்கட்டைக்கு ரம்புட்டான் போன்ற வித்தியாசமான தோற்றத்தை கொடுக்கும்.

88
படி 6
Image Credit : Gemini Ai

படி 6

ஆவியில் வேகவைக்கவும்

இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். இட்லித் தட்டில் தயாரித்து வைத்துள்ள ரம்புட்டான் கொழுக்கட்டைகளை வைத்து, மூடி சுமார் 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும்.

வெளிப்புறத்தில் ஒட்டியிருக்கும் அரிசி நன்றாக வெந்து, கொழுக்கட்டை உறுதியானதும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

ரம்புட்டான் கொழுக்கட்டை ரெடி!

தேங்காய், நாட்டுச் சர்க்கரை, முந்திரி, பாதாம் சேர்த்த இனிப்பான பூரணம் உள்ளே இருக்க, வெளியே பாஸ்மதி அரிசி ஒட்டியிருக்கும் இந்த கொழுக்கட்டை பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு வித்தியாசமான வடிவில் கொழுக்கட்டை செய்து கொடுக்க விரும்புபவர்கள் இந்த முறையை முயற்சி செய்து பார்க்கலாம்.

சிறிய குறிப்பு 

  • பாஸ்மதி அரிசியை அதிக நேரம் ஊறவைக்க வேண்டாம்.
  • ஊறிய அரிசியை நன்றாக வடித்த பிறகே உருண்டையில் ஒட்டினால் அரிசி சீராகப் படியும்.
  • பூரணம் அதிக ஈரப்பதமாக இருந்தால் உருண்டை பிடிப்பதும் சிரமமாக இருக்கும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
7 Most Dangerous Foods: சாப்பிடுவது சுகம்.. பறிப்பது நரகம்: ஒரு நொடி பிசகினாலும் உயிருக்கே உலைவைக்கும் 7 விசித்திர உணவுகள்!
Recommended image2
Fish and Curd: மீன் குழம்புடன் தயிர் சாப்பிடலாமா? பலரும் சொல்வது உண்மையா? தெரிஞ்சுக்கோங்க..!
Recommended image3
Butter Chicken : ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்... ஈஸியா வீட்டிலேயே செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
Kulukku Roti: குலுக்கு ரொட்டி..கேழ்வரகு மாவில் இப்படி ஒரு இனிப்பா? கருப்பட்டி, தேங்காய்ப்பால் சேர்த்து செம டேஸ்ட்!
Recommended image2
Sundal Recipe Ideas : ஒவ்வொரு நாளும் ஒரு சுண்டல்.. நவராத்திரிக்கு தினமும் ஒரு டேஸ்ட், ஒரு ஸ்பெஷல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved