MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Sundal Recipe Ideas : ஒவ்வொரு நாளும் ஒரு சுண்டல்.. நவராத்திரிக்கு தினமும் ஒரு டேஸ்ட், ஒரு ஸ்பெஷல்!

Sundal Recipe Ideas : ஒவ்வொரு நாளும் ஒரு சுண்டல்.. நவராத்திரிக்கு தினமும் ஒரு டேஸ்ட், ஒரு ஸ்பெஷல்!

9 types of sundal recipes : நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒரே சுண்டலை செய்து போரடிக்காமல், தினமும் ஒரு வகை என 9 விதமான சுவையான சுண்டல் செய்யலாம். கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, காராமணி, பட்டாணி முதல் வேர்க்கடலை வரை எளிய ரெசிபி ஐடியாக்கள் இதோ.

3 Min read
Author : Vishnupriya
Published : Oct 07 2026, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
சுண்டல் ஏன் நவராத்திரியில் முக்கியமானது?
Image Credit : Gemini Ai

சுண்டல் ஏன் நவராத்திரியில் முக்கியமானது?

நவராத்திரி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சுண்டல். கொலு காலத்தில் வீடுகளுக்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுண்டல் பிரசாதமாக வழங்குவது தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் ஒரு வழக்கம்.

ஆனால், நவராத்திரி 9 நாட்களும் என்ன சுண்டல் செய்வது என்று யோசிக்கிறீர்களா? தினமும் ஒரே மாதிரியான சுண்டல் செய்து வீட்டில் இருப்பவர்களுக்கும் போரடிக்காமல், கொலு பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்களுக்கும் வித்தியாசமான பிரசாதம் கொடுக்க வேண்டுமா? அப்படியானால் இந்த 9 வகை சுண்டல் ஐடியாக்கள் உங்களுக்கு ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும்.

ஒரே ஒரு பயறு போதும் என்று நினைக்காமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயறு, ஒவ்வொரு சுவை என 9 நாட்களுக்கும் விதவிதமாக சுண்டல் செய்து அசத்தலாம். தேங்காய், மிளகாய், எலுமிச்சை, மசாலா என சுவையிலும் வித்தியாசம் காட்டலாம். பெரிய சமையல் வேலையும் தேவையில்லை. எளிமையான பொருட்களிலேயே சுவையான நவராத்திரி நைவேத்தியத்தை தயார் செய்துவிடலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
நவராத்திரிக்கு 9 வகை சுண்டல்
Image Credit : Pinterest

நவராத்திரிக்கு 9 வகை சுண்டல்

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து மென்மையாக வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும். வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து கிளறி, இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்தால் சுவையான கொண்டைக்கடலை சுண்டல் தயார்.

310
சுண்டல் வகை 2
Image Credit : Pinterest

சுண்டல் வகை 2

கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்

கருப்பு கொண்டைக்கடலை சுண்டல் சத்தானதும், வயிறு நிறைவாக இருக்கச் செய்வதுமான ஒரு சிறந்த தேர்வு.

கருப்பு கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைத்து வேகவைக்க வேண்டும். கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து அதில் கடலை, உப்பு சேர்த்து கிளறவும். இறுதியில் தேங்காய் துருவல் தூவினால் போதும்.

சிறப்பு: தேங்காயுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

410
சுண்டல் வகை 3
Image Credit : Pinterest

சுண்டல் வகை 3

பச்சைப் பயறு சுண்டல்

பச்சைப் பயறை 4 - 6 மணி நேரம் ஊறவைத்து வேகவைக்கவும். கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து பயறை சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, தேங்காய் துருவல் சேர்க்கவும். இறுதியில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் புளிப்பு, காரம் கலந்த நல்ல சுவை கிடைக்கும்.

510
சுண்டல் வகை 4
Image Credit : Pinterest

சுண்டல் வகை 4

காராமணி சுண்டல்

நவராத்திரியில் செய்யக்கூடிய மற்றொரு சூப்பர் ஆப்ஷன் காராமணி சுண்டல்.

காராமணியை நன்றாக ஊறவைத்து வேகவைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த காராமணியை சேர்க்கவும். உப்பு மற்றும் சிறிது பெருங்காயம் சேர்த்து கிளறி, தேங்காய் துருவல் தூவவும்.வித்தியாசமான சுவைக்கு, சிறிதளவு மிளகாய்த்தூள் அல்லது மிளகு-சீரகப் பொடி சேர்க்கலாம்.

610
சுண்டல் வகை 5
Image Credit : Pinterest

சுண்டல் வகை 5

மொச்சை சுண்டல்

மொச்சை சுண்டல் கொலு நேரத்தில் பரிமாற மிகவும் சிறப்பானது. மொச்சையை தேவையான அளவு ஊறவைத்து வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.

மொச்சை, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, இறுதியில் தேங்காய் துருவல் சேர்க்கவும். மொச்சையில் இயற்கையான சுவை இருப்பதால் அதிக மசாலா சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

710
சுண்டல் வகை 6
Image Credit : Pinterest

சுண்டல் வகை 6

பட்டாணி சுண்டல்

பட்டாணி சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் வகையில் இருக்கும்.

உலர்ந்த பட்டாணியை இரவு முழுவதும் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவைக்கவும். கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து பட்டாணியை சேர்க்கவும். இதில் தேங்காய் , எலுமிச்சைச் சாறு சேர்த்தால் சுவை சூப்பராக இருக்கும்.

810
சுண்டல் வகை 7
Image Credit : Pinterest

சுண்டல் வகை 7

வேர்க்கடலை சுண்டல்

பயறு வகைகளைத் தவிர்த்து செய்ய விரும்பினால் வேர்க்கடலை சுண்டல் சிறந்த தேர்வு.

வேர்க்கடலையை சில மணி நேரம் ஊறவைத்து வேகவைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வேர்க்கடலையை சேர்க்கவும். உப்பு சேர்த்து கிளறி, தேங்காய் துருவல் தூவவும்.

குறிப்பு: வேர்க்கடலையை அதிக நேரம் வேகவைக்காமல், நன்றாக வெந்தும் சற்று கடிபதமாகவும் இருக்கும்படி செய்தால் சுவையாக இருக்கும்.

910
சுண்டல் வகை 8
Image Credit : Pinterest

சுண்டல் வகை 8

தட்டைப்பயறு சுண்டல்

தட்டைப்பயறு சுண்டல் நவராத்திரிக்கு கொஞ்சம் வித்தியாசமாக செய்ய நினைப்பவர்களுக்கு ஏற்றது.

தட்டைப்பயறை ஊறவைத்து வேகவைக்கவும். கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து பயறை சேர்க்கவும். உப்பு, பெருங்காயம் சேர்த்து கிளறி, இறுதியில் தேங்காய் துருவல் சேர்க்கவும். தேங்காயுடன் சிறிது பச்சை மிளகாயை அரைத்து சேர்த்தால் வித்தியாசமான கார சுவை கிடைக்கும்.

1010
சுண்டல் வகை 9
Image Credit : Pinterest

சுண்டல் வகை 9

சோயாபீன் சுண்டல்

9 வது நாளுக்கு கொஞ்சம் புதுமையாக சோயாபீன் சுண்டல் செய்து பார்க்கலாம்.

சோயாபீனை நன்றாக ஊறவைத்து வேகவைக்க வேண்டும். பின்னர் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சோயாபீனை சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து கிளறி, இறுதியில் தேங்காய் துருவல் தூவலாம். சோயாபீனின் தனித்துவமான சுவை இருப்பதால், சிறிதளவு மிளகு-சீரகப் பொடி சேர்த்தும் செய்யலாம்.

சுண்டல் செய்யும்போது கவனிக்க வேண்டியவை

  • கடலை, பயறு போன்றவற்றை முன்கூட்டியே ஊறவைத்தால் வேக வைப்பது எளிதாக இருக்கும்.
  • வேகவைக்கும்போது அதிக தண்ணீர் சேர்க்காமல், பயறு நன்றாக வெந்ததும் தண்ணீரை வடித்து பயன்படுத்தலாம்.
  • சுண்டல் குழைந்து போகாமல் மிதமான பதத்தில் வேகவைக்க வேண்டும்.
  • தாளிப்பில் பெருங்காயம் சேர்ப்பது நல்ல மணத்தைக் கொடுக்கும்.
  • தேங்காய் துருவலை கடைசியில் சேர்த்தால் அதன் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
  • எலுமிச்சைச் சாறு சேர்க்கும் சுண்டல்களில், அடுப்பை அணைத்த பிறகு சேர்ப்பது நல்லது.
  • நைவேத்தியத்திற்காக தயாரிக்கும் போது குடும்பத்தின் வழக்கப்படி பொருட்களைத் தேர்வு செய்யலாம்.
  • மேலும், கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, காராமணி, பட்டாணி போன்ற பருப்பு மற்றும் பயறு வகைகள் புரதம், நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Snacks : ஒரே மாவில் 4 வகை பலகாரம்..தீபாவளி சமையலை ஈஸியாக்கும் சூப்பர் ட்ரிக்!
Recommended image2
குடும்பத்துக்கு ஒரு பாலிசி போதுமா, தனித் தனியா எடுக்கணுமா? இந்த 5 விஷயங்களை மொதல்ல தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
பார்த்தாலே எச்சில் ஊறும்... 10 நிமிடத்தில் நாவில் கரையும் செட்டிநாடு சிக்கன் வறுவல்; ஈசி ரெசிபி!
Related Stories
Recommended image1
Diwali Snacks : ஒரே மாவில் 4 வகை பலகாரம்..தீபாவளி சமையலை ஈஸியாக்கும் சூப்பர் ட்ரிக்!
Recommended image2
Fish Ambul Thiyal : ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் சூரை மீன் அம்புல் தீயல்..சுவை அள்ளும் செய்முறை இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved