MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Kulukku Roti: குலுக்கு ரொட்டி..கேழ்வரகு மாவில் இப்படி ஒரு இனிப்பா? கருப்பட்டி, தேங்காய்ப்பால் சேர்த்து செம டேஸ்ட்!

Kulukku Roti: குலுக்கு ரொட்டி..கேழ்வரகு மாவில் இப்படி ஒரு இனிப்பா? கருப்பட்டி, தேங்காய்ப்பால் சேர்த்து செம டேஸ்ட்!

Kulukku Roti: கேழ்வரகு மாவு, கருப்பட்டி, தேங்காய்ப்பால் சேர்த்து சுவையான குலுக்கு ரொட்டி செய்வது எப்படி? தேவையான பொருள்கள், எளிய செய்முறை மற்றும் சுவைக்கான குறிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Vishnupriya
Published : Oct 08 2026, 01:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குலுக்கு ரொட்டி
Image Credit : Gemini Ai

குலுக்கு ரொட்டி

ராகி மாவு வீட்டில் இருக்கிறதா? அப்படின்னா இந்த இனிப்பை கட்டாயம் ஒரு முறை செய்து பாருங்க. வழக்கமாக கேழ்வரகு மாவில் தோசை, களி, அடை என ஒரே மாதிரியான உணவுகளையே செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டீர்களா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில், கேழ்வரகு மாவு, கருப்பட்டி, தேங்காய்ப்பால், நெய் சேர்த்து இந்த சுவையான குலுக்கு ரொட்டியை வீட்டிலேயே எளிதாக செய்து பாருங்கள்.

மென்மையான ராகி உருண்டைகள், மணமணக்கும் கருப்பட்டி பாகு, தேங்காய்ப்பாலின் சுவை என ஒவ்வொரு கடியிலும் அசத்தலான சுவை கிடைக்கும். வழக்கமான இனிப்புகளைத் தாண்டி வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைப்பவர்களுக்கு இந்த குலுக்கு ரொட்டி சூப்பர் சாய்ஸ்.

குலுக்கு ரொட்டி செய்ய தேவையான பொருள்கள்

ராகி உருண்டை செய்ய

கேழ்வரகு மாவு - 1 கப்

உப்பு - ஒரு சிட்டிகை

வெல்லம் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

தண்ணீர் - அரை கப் (மாவு பிசைய)

கருப்பட்டி பாகுக்கு

கருப்பட்டி - 3\4 முதல் 1 கப்

தண்ணீர் - தேவையான அளவு

ஏலக்காய் - 2 அல்லது 3

தேங்காய்ப்பால் - 1 கப்

அலங்கரிக்க

முந்திரி

பாதாம்

திராட்சை

தேங்காய் துருவல் - விருப்பப்பட்டால்

நெய் - தேவையான அளவு

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ராகி மாவை பிசையவும்
Image Credit : Gemini Ai

ராகி மாவை பிசையவும்

  • முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் கேழ்வரகு மாவு எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை உப்பு, சிறிதளவு வெல்லம் மற்றும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.
  • பின்னர் தேவையான அளவு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ளவும்.
  • மாவு மிகவும் தளர்வாகவோ அல்லது மிகவும் கெட்டியாகவோ இருக்கக்கூடாது.
35
ஆவியில் வேகவைக்கவும்
Image Credit : Gemini Ai

ஆவியில் வேகவைக்கவும்

  • பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு பகுதிகளாக எடுத்து, கைகளில் வைத்து நன்றாக உருட்டி சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
  • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தட்டில் ராகி உருண்டைகளை வைத்து சுமார் 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும்.
  • வெந்ததும் உருண்டைகளை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
45
கருப்பட்டி பாகு தயாரிக்கவும்
Image Credit : Gemini Ai

கருப்பட்டி பாகு தயாரிக்கவும்

  • அடுத்து ஒரு வானலில் கருப்பட்டியை போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து காய்ச்சவும். வாசனைக்காக ஏலக்காய் சேர்க்கவும்.
  • கருப்பட்டி பாகு நன்றாக சூடானதும், அதில் தேங்காய்ப்பால் சேர்க்கவும். தேங்காய்ப்பால் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க விடாமல், மிதமான தீயில் கிளறிக் கொண்டிருக்கவும்.
  • இப்போது ஆவியில் வேகவைத்த ராகி உருண்டைகளை கருப்பட்டி தேங்காய்ப்பால் கலவையில் மெதுவாக சேர்க்கவும்.
55
ஏன் இந்த குலுக்கு ரொட்டி வித்தியாசமானது?
Image Credit : Gemini Ai

ஏன் இந்த குலுக்கு ரொட்டி வித்தியாசமானது?

  • உருண்டைகள் உடையாமல் மெதுவாக கிளறி, சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இதனால் கருப்பட்டி பாகும் தேங்காய்ப்பாலும் ராகி உருண்டைகளுக்குள் நன்றாக இறங்கும்.
  • இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை போன்ற நட்ஸ்களை சேர்க்கலாம்.
  • சூடாகவோ அல்லது மிதமான சூட்டிலோ பரிமாறினால் குலுக்கு ரொட்டியின் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

சுவையாக வர சில குறிப்புகள்

  • ராகி மாவை பிசையும்போது தண்ணீரை ஒரே நேரத்தில் ஊற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
  • உருண்டைகளை மிகவும் பெரியதாக பிடிக்க வேண்டாம். சிறிய உருண்டைகள் எளிதாக வேகும்.
  • கருப்பட்டியை நேரடியாக சேர்ப்பதற்குப் பதிலாக கரைத்து வடிகட்டி பயன்படுத்தினால் சுத்தமாக இருக்கும்.
  • தேங்காய்ப்பால் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம். இல்லையென்றால் தேங்காய்ப்பால் திரிந்து போக வாய்ப்பு உள்ளது.
  • கூடுதல் சுவைக்கு சிறிதளவு நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகள் சேர்க்கலாம்.
  • இனிப்பு அதிகம் வேண்டுமென்றால் கருப்பட்டி அளவை சுவைக்கேற்ப அதிகரிக்கலாம்.

ஏன் இந்த குலுக்கு ரொட்டி வித்தியாசமானது?

வழக்கமான ராகி உணவுகளைவிட, இந்த செய்முறையில் ஆவியில் வேகவைத்த ராகி உருண்டைகள், கருப்பட்டி பாகு, தேங்காய்ப்பால், ஏலக்காய் என வித்தியாசமான சுவைக் கூட்டணி கிடைக்கிறது. குறிப்பாக வீட்டில் இருக்கும் கேழ்வரகு மாவை வைத்து புதிதாக ஒரு இனிப்பு செய்ய நினைப்பவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Egg Yolk Benefits: முட்டையோட மஞ்சள் கருவை தூக்கி போடுறீங்களா? இவ்வளவு சத்துகளை மிஸ் பண்றீங்க!
Recommended image2
Leaf Appalam: கேரட், பீட்ரூட்டில் கலர் கலர் இலை அப்பளம்.. இடியாப்பம் மாவில் ஈஸி ரெசிபி!
Recommended image3
செட்டிநாடு டூ ஆந்திரா ஸ்டைல்... 5 காரசார சிக்கன் ரெசிபி; சாதம், பரோட்டா, சப்பாத்திக்கு செம காம்போ!
Related Stories
Recommended image1
cooking oil : எந்த குழம்புக்கு எந்த எண்ணெய்? சமையல் ருசியை மாற்றும் எண்ணெய்களின் சரியான ஜோடி!
Recommended image2
Leaf Appalam: கேரட், பீட்ரூட்டில் கலர் கலர் இலை அப்பளம்.. இடியாப்பம் மாவில் ஈஸி ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved