- Home
- உடல்நலம்
- உணவு
- Leaf Appalam: கேரட், பீட்ரூட்டில் கலர் கலர் இலை அப்பளம்.. இடியாப்பம் மாவில் ஈஸி ரெசிபி!
Leaf Appalam: கேரட், பீட்ரூட்டில் கலர் கலர் இலை அப்பளம்.. இடியாப்பம் மாவில் ஈஸி ரெசிபி!
Leaf Appalam: இடியாப்பம் மாவில் வீட்டிலேயே கலர் கலர் இலை அப்பளம் செய்வது எப்படி? கேரட், பீட்ரூட் ஜூஸ் சேர்த்து அப்பளம் தயாரிக்கும் எளிய செய்முறை, ஆவி காட்டுவது, வெயிலில் காயவைப்பது உள்ளிட்ட முழு விவரங்களை இந்த் தொகுப்பில் பார்க்கலாம்.
18

Image Credit : Gemini Ai
இடியாப்பம் மாவில் கலர் கலர் இலை அப்பளம்
அப்பளம் செய்ய ஆசை.. ஆனால் உளுந்து, அரிசி மாவு என தனியாக மாவு அரைக்க நேரமில்லையா? வீட்டில் இருக்கும் இடியாப்பம் மாவு இருந்தாலே போதும். அதில் கொஞ்சம் கேரட் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ் சேர்த்து அழகான ஆரஞ்சு, பிங்க் நிற அப்பளங்களையும் செய்யலாம். அதுவும் அச்சு, மெஷின் எதுவும் தேவையில்லை.
இலையில் வேகவைத்து, காயவைத்து எடுத்தால் பாரம்பரிய சுவையுடன் மொறுமொறுப்பான அப்பளம் ரெடி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் இந்த இலை அப்பளத்தை ஒருமுறை செய்து பாருங்கள். கடையில் வாங்கும் அப்பளத்தை மறந்துவிடுவீர்கள்.
தேவையான பொருள்கள்
இடியாப்பம் மாவு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1\2 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
பீட்ரூட் ஜூஸ் - தேவையான அளவு
கேரட் ஜூஸ் - தேவையான அளவ
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
28
Image Credit : Gemini Ai
கேரட், பீட்ரூட் ஜூஸ் தயாரிப்பது
- கேரட்டை நன்றாகக் கழுவி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
- அதேபோல் பீட்ரூட்டை தோல் நீக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி பீட்ரூட் ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
- ஜூஸ் அதிக தண்ணீராக இருக்க வேண்டாம். நிறம் நன்றாக வருவதற்கு சற்று அடர்த்தியாக இருப்பது நல்லது.
38
Image Credit : Gemini Ai
மாவை பிசையவும்
- முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு இடியாப்பம் மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் உப்பு, சீரகம், பெருங்காயம் மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.
- மாவு நன்றாக ஒன்றாகச் சேர்ந்ததும், அதை சிறிது நேரம் அப்படியே வைத்துக் கொள்ளலாம்.
48
Image Credit : Gemini Ai
கலர் அப்பளம் செய்ய மாவை தயார் செய்யவும்
- வெள்ளை அப்பளம் செய்வதற்கு கெட்டியாகப் பிசைந்த மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
- கலர் அப்பளம் செய்யும்போது, மாவில் தண்ணீருக்குப் பதிலாக கேரட் ஜூஸ் அல்லது பீட்ரூட் ஜூஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- ஜூஸ் சேர்த்த பிறகு மாவு சற்று தண்ணீர் பதத்திற்கு, அதாவது இலையில் எளிதாக ஊற்றி பரப்பக்கூடிய பதத்திற்கு இருக்க வேண்டும். மிகவும் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ளவும்.
58
Image Credit : Gemini Ai
இலையில் ஊற்றவும்
- இதற்கு எந்த வகையான இலையாக இருந்தாலும் பயன்படுத்தலாம். சுத்தமான சிறிய இலையை காம்புடன் எடுத்துக் கொண்டு நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- இலையின் மீது தயாரித்து வைத்துள்ள மாவை தேவையான அளவு ஊற்றி, மெதுவாக பரப்பி விடவும். மிகவும் தடிமனாக இல்லாமல் மெல்லிய அடுக்காக இருப்பது நல்லது.
68
Image Credit : Gemini Ai
ஆவி காட்டவும்
- இப்போது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- மாவு ஊற்றிய இலையை பாத்திரத்தில் வைத்து மூடி, சுமார் 10 நிமிடங்கள் ஆவி காட்டவும்.
- இதனால் மாவு நன்றாக வெந்து, இலையிலிருந்து எளிதாக பிரிக்கக்கூடிய பதத்திற்கு வரும்.
78
Image Credit : Gemini Ai
வெயிலில் காய வைக்கவும்
- 10 நிமிடங்களுக்குப் பிறகு இலையை வெளியே எடுத்து, அப்படியே வெயிலில் வைத்து காய வைக்கவும்.
- நன்றாக வெயில் படும் இடத்தில் வைத்து, அப்பளம் முழுமையாக காயும் வரை உலர்த்தவும்.
- அப்பளம் முழுமையாக ஈரப்பதம் இல்லாமல் காய்ந்த பிறகு, இலையிலிருந்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
88
Image Credit : Gemini Ai
பொரித்து பரிமாறவும்
- தேவைப்படும் நேரத்தில் எண்ணெயைக் காய வைத்து, காய்ந்த அப்பளத்தைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
- இப்படி செய்தால் சாதத்துடன் சாப்பிட மொறுமொறுப்பான இலை அப்பளம் தயார்.
- கேரட் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ் சேர்த்து செய்த அப்பளத்தை பொறிக்கும்போது அழகான ஆரஞ்சு மற்றும் பிங்க் நிற அப்பளங்களாக வரும். குழந்தைகளுக்கு இந்த கலர் அப்பளங்கள் மிகவும் பிடிக்கும்.
Latest Videos

