Quinoa : உடல் எடையை குறைக்க.. இனி இது மட்டும் போதும்.! குயினோவாவின் சூப்பரான நன்மைகள்
சர்க்கரை நோயாளிகள் அரிசி, கோதுமை மற்றும் பிற தானியங்களை விட குயினோவாவை உட்கொண்டால் சக்கரை அளவை குறைக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
குயினோவா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? குயினோவா என்பது ஒரு வகை தானியமாகும். இதை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. தமிழில், இதனை சீமைத்தினை என்று வழங்குகின்றனர். குயினோவாவில் மூன்று வகைப்படும்.
அவை, சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு. குயினோவா என்பது பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த ஒரு வகை தானியமாகும். இதில் அமினோ அமிலமும் உள்ளது. குயினோவா உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடல் எடை குறைப்புக்கும் குயினோவா உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் அரிசி, கோதுமை மற்றும் பிற தானியங்களை விட குயினோவாவை உட்கொண்டால், ரத்தத்தில் உணவுக்கு பிறகான சர்க்கரையின் அளவு குறைவதாகவும், நீரழிவு நோய் இல்லாதவர்களுக்கு அது வருவதற்கான சாத்தியத்தை குறைப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: வெறும் 10 நிமிடங்கள்! தொண்டை வலி முதல் மண்டை வலி வரை.. நிவாரணம் தரும் அற்புத பொருள்!!
சாமை, வரகு, தினை போன்ற சிறுதானிய வகையைச் சேர்ந்த குயினோவா, தாவர புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஒரு கப் சமைத்த குயினோவாவில் சுமார் 8 கிராம் புரதம், 5 கிராம் நார்ச்சத்து உள்ளதாக ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக அளவிலான நார்ச்சத்துக்களும் பார்லியை போன்று அதிக புரதச் சத்தையும் உள்ளடக்கி உள்ளது. அதேபோல இது எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் மட்டுமல்லாமல், உடல் எடையை கட்டுக்கோப்பாக ஒரே அளவில் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இது உதவுகிறது.
இதையும் படிங்க: நீங்க விரும்பி சாப்பிடும் இந்த 5 உணவுகள்.. சொந்த காசுல சூனியம் தான்!! கொஞ்சம் கூட ஆரோக்கியமானது கிடையாது!