MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Onion: வெங்காயத்தில் கருப்பு பூஞ்சை..சாப்பிடலாமா? தூக்கி எறியணுமா? அதிர்ச்சி தகவலை தெரிஞ்சுக்கோங்க!

Onion: வெங்காயத்தில் கருப்பு பூஞ்சை..சாப்பிடலாமா? தூக்கி எறியணுமா? அதிர்ச்சி தகவலை தெரிஞ்சுக்கோங்க!

Onion: வெங்காயத்தின் மீது காணப்படும் கருப்பு பூஞ்சை என்ன? அதை சாப்பிடலாமா, தூக்கி எறிய வேண்டுமா? இது உயிருக்கு ஆபத்தான ‘Black Fungus’ நோயுடன் தொடர்புடையதா? அதிகாரப்பூர்வ தகவல்களுடன் தெரிந்துகொள்ளுங்கள்.

3 Min read
Author : Vishnupriya
Published : Sep 29 2026, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வெங்காயத்தில் கருப்பு பூஞ்சை
Image Credit : pinterest

வெங்காயத்தில் கருப்பு பூஞ்சை

அன்றாட சமையலில் வெங்காயம் என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான பொருள். குழம்பு, சாம்பார், பொரியல் என பெரும்பாலான உணவுகளின் சுவையை அதிகரிக்க வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நாம் வாங்கி வைத்திருக்கும் வெங்காயத்தின் மீது கருப்பு நிறத்தில் பூஞ்சை படர்ந்திருந்தால் அதை அப்படியே பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.

வெங்காயத்தின் மீது இருக்கும் இந்த கருப்பு பூஞ்சை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, வெங்காயத்தில் இருக்கும் கருப்பு பூஞ்சையுடன் சாப்பிட்டதால் பெண் உயிரிழந்தார் போன்ற தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பூஞ்சை பாதித்த வெங்காயத்தை சாப்பிடுவதால் என்ன பாதிப்பு ஏற்படும்? அதை பயன்படுத்தலாமா? எப்போது முழுமையாக தூக்கி எறிய வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வெங்காயத்தின் மீது இருக்கும் கருப்பு பூஞ்சை என்றால் என்ன?
Image Credit : pinterest

வெங்காயத்தின் மீது இருக்கும் கருப்பு பூஞ்சை என்றால் என்ன?

வெங்காயத்தின் வெளிப்புறத் தோலில் அல்லது இதழ்களுக்கு இடையே காணப்படும் கருப்பு நிற தூள் அல்லது கரும்புள்ளிகள் போல் காணப்படுவது ஆஸ்பெர்கிலஸ் நைஜர் (Aspergillus niger) என்ற ஒரு வகையான கருப்பு பூஞ்சை (Black Mold) ஆகும்.

35
இது எவ்வாறு ஏற்படுகிறது?
Image Credit : pinterest

இது எவ்வாறு ஏற்படுகிறது?

ஆஸ்பெர்கிலஸ் நைஜர் என்ற பூஞ்சை மண்ணிலும் அழுகும் தாவரப் பொருட்களிலும் இயற்கையாகவே காணப்படும். வெங்காயத்தை அறுவடை செய்த பிறகோ அல்லது சேமித்து வைக்கும் போதோ போதிய காற்றோட்டம் இல்லாமல், ஈரப்பதமான சூழ்நிலை மற்றும் அதிக வெப்பநிலை இருக்கும்போது இந்த பூஞ்சை வேகமாக வளரத் தொடங்குகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வேளாண் மேலாண்மை தொடர்பான வழிகாட்டுதலிலும் 28 - 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் போன்ற சூழல்கள் கருப்பு பூஞ்சை வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வெங்காயத்தின் தோலில் காயம், உராய்வு, வெட்டு அல்லது சேதம் ஏற்பட்டால் அதன் வழியாக பூஞ்சை வளர வாய்ப்புள்ளது. பொதுவாக வெங்காயத்தை நீண்ட நாட்களுக்குச் சேமித்து வைக்கும் கிடங்குகளில் (Cold storages அல்லது Warehouses) முறையான உலர்த்துதல் (Curing) செய்யாவிட்டால் இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

45
இது நல்லதா? கெட்டதா?
Image Credit : pinterest

இது நல்லதா? கெட்டதா?

வெங்காயத்தில் கருப்பு பூஞ்சை இருந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் கவனமாக கையாள வேண்டும்.

அமெரிக்க USDA வழிகாட்டுதலின்படி, வெங்காயத்தின் வெளிப்புற உலர்ந்த அடுக்குகளில் கருப்பு பூஞ்சை காணப்பட்டால், அந்தப் பாதிக்கப்பட்ட அடுக்குகளை முழுமையாக அகற்றிவிட்டு, மீதமுள்ள நல்ல பகுதியை பயன்படுத்த வேண்டும்.

ஆனால், பூஞ்சை வெங்காயத்தின் உள்ளே ஆழமாகப் பரவி, வெங்காயம் மென்மையாகி, ஈரப்பதம் அல்லது நீர் வெளியேறி அழுகத் தொடங்கியிருந்தால், அதை பயன்படுத்தாமல் முழுவதுமாக தூக்கி எறிவதே பாதுகாப்பானதாகும்.

வெங்காயம் இவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருக்கிறோம் இதை எப்படி தூக்கி எறிவது? என்று யோசிக்காமல், பூஞ்சை அதிகமாகப் பரவியிருந்தாலோ, வெங்காயம் அழுகி மென்மையாகியிருந்தாலோ அதை பயன்படுத்தாமல் இருப்பதே பாதுகாப்பான நடைமுறை.

உடல்நலத்தை பாதிக்கும் உணவை சாப்பிட்டு பின்னர் மருத்துவமனைக்குச் செல்லும் நிலையைவிட, சந்தேகத்திற்குரிய வெங்காயத்தைத் தவிர்ப்பது நல்லது.

பூஞ்சை ஒவ்வாமை (Allergy) அல்லது ஆஸ்துமா (Asthma) போன்ற சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்கள், வெங்காயத்தில் காணப்படும் கருப்பு பூஞ்சையின் வித்துக்களைச் சுவாசிக்கும்போது தும்மல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்தவர்களுக்கு அரிதான சந்தர்ப்பங்களில் சில வகை பூஞ்சைகள் மூலம் Aspergillosis போன்ற பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படக்கூடும்.

இது Black Fungus நோயா?

வெங்காயத்தின் மீது காணப்படும் கருப்பு நிற பூஞ்சையை, உயிருக்கு ஆபத்தான மியூகோர்மைக்கோசிஸ் (Mucormycosis) நோயை ஏற்படுத்தும் Black Fungus பூஞ்சையுடன் ஒன்றாகக் கருதக்கூடாது.

CDC மற்றும் WHO தகவல்களின்படி, மியூகோர்மைக்கோசிஸை ஏற்படுத்தும் பூஞ்சைகள் பொதுவாக மண், தூசி, அழுகிய தாவரப் பொருட்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழலில் காணப்படுகின்றன.

எனவே, வெங்காயத்தில் தெரியும் கருப்பு பூஞ்சையைப் பார்த்தவுடன் அது மியூகோர்மைக்கோசிஸ் நோயை ஏற்படுத்தும் பூஞ்சை என்று முடிவு செய்வது சரியல்ல.

55
இத்தகைய வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது?
Image Credit : pinterest

இத்தகைய வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது?

  • பூஞ்சை படிந்த வெளிப்புறத் தோலை முழுமையாக உரித்துவிட்டு, சுத்தமான தண்ணீரில் வெங்காயத்தை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். இதனால் பூஞ்சை துகள்கள் முழுமையாக நீங்க வாய்ப்புள்ளது.
  • பூஞ்சை வெங்காயத்தின் உட்புற பகுதிகளிலும் பரவியிருந்தால், அந்தப் பகுதியை முழுவதுமாக வெட்டி எறிந்துவிட்டு, மீதமுள்ள நல்ல பகுதியை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
  • பூஞ்சை பாதிப்புடன் வெங்காயம் மென்மையாகி, ஈரமாகி, அழுகிய வாசனை வீசத் தொடங்கியிருந்தால், அதை பயன்படுத்தாமல் முழுமையாகத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. ஏனெனில், பூஞ்சை பாதிப்புடன் சேர்ந்து பிற நுண்ணுயிரிகள் அல்லது பாக்டீரியாக்களின் வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கலாம்.

FSSAI-யின் உணவுப் பாதுகாப்பு தரநிலைகளிலும், உணவுப் பொருட்களில் பூஞ்சை பாதிப்பு இருக்கக்கூடாது என்ற பாதுகாப்பு அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.

பூஞ்சை வராமல் தடுக்க வெங்காயத்தை எவ்வாறு சேமிப்பது?

வெங்காயத்தை ஈரப்பதம் இல்லாத, குளிர்ச்சியான மற்றும் நன்கு காற்றோட்டம் உள்ள உலர்ந்த இடத்தில் சேமிப்பது நல்லது. காற்றோட்டம் குறைந்த பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைப்பதைத் தவிர்த்து, காற்று எளிதாகச் செல்லக்கூடிய வலைப் பைகள் (Mesh bags) அல்லது கூடைகளில் வைத்தால் ஈரப்பதம் தேங்குவதையும், அதனால் பூஞ்சை மற்றும் அழுகல் ஏற்படுவதையும் குறைக்க உதவும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Egg Puff : குக்கர்ல முட்டை பப்ஸ் செய்வது எப்படி? பேக்கரி டேஸ்ட்ல வீட்டிலேயே செய்யலாம்!
Recommended image2
காலையில் ஒரே ஒரு கிராம்பு! உடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா? தெரிஞ்சுக்கிட்டா தினமும் சாப்பிடுவீங்க
Recommended image3
Bun Dosa : இட்லி, தோசை போரடிக்குதா? இப்படி பன் தோசை செஞ்சு பாருங்க; சாஃப்ட்டா, ஸ்பாஞ்ச் மாதிரி இருக்கும்!
Related Stories
Recommended image1
Cutting Onion: வெங்காயம் வெட்டுனா ஏன் கண்ணீர் வருது? பின்னணியில் இருக்கும் அறிவியல் ரகசியம்!
Recommended image2
Onion Facts: வெங்காயம் சைவமா, அசைவமா? 99% பேருக்குத் தெரியாத பதில் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved