MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Cutting Onion: வெங்காயம் வெட்டுனா ஏன் கண்ணீர் வருது? பின்னணியில் இருக்கும் அறிவியல் ரகசியம்!

Cutting Onion: வெங்காயம் வெட்டுனா ஏன் கண்ணீர் வருது? பின்னணியில் இருக்கும் அறிவியல் ரகசியம்!

Cutting Onion: வெங்காயம் வெட்டும்போது ஏன் கண்களில் கண்ணீர் வருகிறது? இதற்குப் பின்னால் இருக்கும் வேதியியல் காரணம் என்ன? ஆராய்ச்சிகள் கூறும் சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 01 2026, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருவது ஏன்?
Image Credit : pinterest

வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருவது ஏன்?

சமையல் கலையில் எவ்வளவு பெரிய வல்லுநராக இருந்தாலும், வெங்காயம் வெட்டும்போது கண்களில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணீர் வருவதைத் தவிர்ப்பது சவால்தான். இதற்கு வெங்காயத்தின் காரத்தன்மை மட்டும் காரணமல்ல. 1996 முதல் 2020 வரை வெளியான ஆய்வுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், வெங்காயம் நம்மை அழ வைப்பதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான வேதியியல் காரணம் உள்ளது. இதுகுறித்த ஆய்வுகள் மற்றும் அறிவியல் ஆதாரங்கள் கூறுவதை தெரிந்துக்கொள்வோம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அறிவியல் ரகசியம் என்ன?
Image Credit : pinterest

அறிவியல் ரகசியம் என்ன?

வெங்காயத்தின் செல்களுக்குள் சல்பர் கொண்ட அமினோ அமிலங்களும் (Amino acids), சில நொதிகளும் (Enzymes) தனித்தனியாக இருக்கும். நாம் வெங்காயத்தை கத்தியால் வெட்டும்போது, இந்த செல்கள் சேதமடைகின்றன. இதனால், நொதிகளும், அமினோ அமிலங்களும் வெளியேறி ஒன்றுடன் ஒன்று கலந்து வேதியியல் வினையில் ஈடுபடத் தொடங்குகின்றன.

அப்போது சல்பெனிக் அமிலம் (Sulfenic acid) உருவாகிறது. இவை வெங்காயத்தில் உள்ள Lachrymatory Factor Synthase (LFS) என்ற நொதியுடன் செயல்பட்டு, கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும் syn-propanethial-S-oxide என்ற ஆவியாகும் சேர்மமாக மாறுகிறது. வெட்டப்பட்ட வெங்காயத்தில் கண்ணீர் வரவைக்கும் சேர்மம் இருப்பது குறித்து 1996-ஆம் ஆண்டு Journal of the American Chemical Society இதழில் வெளியான ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
Onion : ரேஷன் கடைகளில் இனி மலிவு விலையில் வெங்காயம்! தமிழக அரசு சூப்பர் திட்டம்!
Related image2
Onion Storage Tips: வெங்காயத்தை இனி மாதக்கணக்கில் வச்சிக்கலாம்.! நீண்ட நாள் கெட்டுப்போகாம இருக்க ஈசி ஐடியா.!
35
கண்ணீர் வரவைக்கும் காரணி
Image Credit : pinterest

கண்ணீர் வரவைக்கும் காரணி

இந்த syn-propanethial-S-oxide ஆவியாகும் சேர்மம் காற்றில் பரவி கண்களை அடைகிறது. அங்கு கண்களின் உணர்வு நரம்புகளைத் தூண்டி எரிச்சலை ஏற்படுத்துகிறது. அப்போது கண்களைப் பாதுகாக்கும் வகையில் கண்ணீர்ச் சுரப்பிகள் அதிக அளவில் கண்ணீரைச் சுரக்கின்றன. இதனால் தான் வெங்காயம் வெட்டும்போது நமக்கு கண்ணீர் வருகிறது. இதைத்தான் “கண்ணீர் வரவைக்கும் காரணி” (lachrymatory factor) என்று அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

குறிப்பாக, 2017-ஆம் ஆண்டு ACS Chemical Biology இதழில் வெளியான ஆய்வு, வெங்காயத்தில் உள்ள Lachrymatory Factor Synthase (LFS) என்ற நொதி கண்ணீர் வரவைக்கும் சேர்மம் உருவாகும் செயல்முறையில் முக்கியப் பங்கு வகிப்பதை விளக்கியுள்ளது.

45
இறுதி முடிவு
Image Credit : pinterest

இறுதி முடிவு

வெங்காயம் நம்மை அழ வைக்கிறது என்பது உணர்ச்சியால் அல்ல. அதன் செல்கள் சேதமடையும் போது உருவாகும் ஒரு ஆவியாகும் வேதிப்பொருள்தான் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தி கண்ணீரை வரவைக்கிறது.

55
கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட எளிய வழிகள்
Image Credit : pinterest

கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட எளிய வழிகள்

  1. மழுங்கிய கத்தியால் வெங்காயத்தை வெட்டும்போது, அதன் செல்கள் அதிகமாக சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால் கண்ணீர் வரவைக்கும் வேதிப்பொருள் உருவாகும் அளவும் அதிகரிக்கலாம். மாறாக, கூர்மையான கத்தியைக் கொண்டு வெங்காயத்தை சீராக வெட்டும்போது, செல்களுக்கு ஏற்படும் சேதம் குறையக்கூடும். இதன் மூலம் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும் சேர்மம் உருவாகுவதையும் ஓரளவு குறைக்க முடியும்.
  2. வெங்காயத்தை நறுக்கும்போது ஜன்னலுக்கு அருகிலோ அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனுக்கு (exhaust fan) அருகிலோ வெட்டலாம். இதனால் வெங்காயத்திலிருந்து வெளியேறும் ஆவியாகும் சேர்மங்கள் காற்றோடு விலகிச் செல்வதால், நேரடியாக கண்களை அடைவது குறையலாம். இதன் மூலம் கண்களில் ஏற்படும் எரிச்சலும், கண்ணீர் வருவதும் ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.
  3. வெட்டிய வெங்காயத்தை நீண்ட நேரம் திறந்த நிலையில் வைப்பதை தவிர்ப்பது நல்லது.
  4. வெங்காயத்தை வெட்டுவதற்கு முன்பாக சிறிது நேரம் தண்ணீரில் போட்டு வைக்கலாம்.

About the Author

V
Vishnupriya
ஆரோக்கிய குறிப்புகள்
உணவு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vada Health Effects: “ஒரு வடைதானே..!”னு தினமும் சாப்பிடுறீங்களா? உடம்புக்குள் நடப்பது இதுதான்..!
Recommended image2
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற 7 உலர் பருப்புகள்: ஆரோக்கிய நன்மைகள்
Recommended image3
தினமும் ஒரு கைப்பிடி பிஸ்தா சாப்பிடுங்க... அதில் இம்புட்டு நன்மைகளா?
Related Stories
Recommended image1
Onion : ரேஷன் கடைகளில் இனி மலிவு விலையில் வெங்காயம்! தமிழக அரசு சூப்பர் திட்டம்!
Recommended image2
Onion Storage Tips: வெங்காயத்தை இனி மாதக்கணக்கில் வச்சிக்கலாம்.! நீண்ட நாள் கெட்டுப்போகாம இருக்க ஈசி ஐடியா.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved