MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • ஃப்ரெஷ் கிரீம், டார்க் சாக்லேட் இருந்தா போதும்: வீட்டிலேயே அசத்தலான சாக்கோ பார் செய்வது எப்படி?

ஃப்ரெஷ் கிரீம், டார்க் சாக்லேட் இருந்தா போதும்: வீட்டிலேயே அசத்தலான சாக்கோ பார் செய்வது எப்படி?

கடையில வாங்கவே வேண்டாம். வீட்டிலேயே மொறுமொறு சாக்கோ பார் ஐஸ்கிரீம் செய்வது எப்படி? நாவில் கரையும் சாக்லேட் கோட்டிங் சாக்கோ பாரை 15 நிமிடத்தில் வீட்டிலேயே செய்யலாம்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 17 2026, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வீட்டிலேயே ஈஸியா செய்யலாம் சுவையான சாக்கோ பார்!
Image Credit : x

வீட்டிலேயே ஈஸியா செய்யலாம் சுவையான சாக்கோ பார்!

நம்மில் பலருக்கு ஐஸ்கிரீம்னாலே சாக்லேட் கோட்டிங் கொண்ட சாக்கோ பார் எப்போதுமே தனி பிரியம் தான். அது வெறும் ஐஸ்கிரீம் மட்டும் இல்லாம, நம்ம சின்ன வயசு நினைவுகளோட இணைஞ்ச ஒரு எமோஷன். குச்சில இருக்குற சாஃப்டான வெண்ணிலா ஐஸ்கிரீமை கடிக்கும்போது நறுக்னு உடையும் அந்த சாக்லேட் லேயர் தரும் சுகமே அலாதி. அப்படிப்பட்ட சுவையான சாக்கோ பாரை கடையில வாங்காம, எந்த அலட்டலும் இல்லாம வீட்டிலேயே ரொம்ப சுலபமா எப்படி செய்யலாம்னு பிரபல மாஸ்டர் செஃப் ரன்வீர் பிரார் பகிர்ந்துள்ளார். வெறும் 15 நிமிஷ வேலைதான், அப்புறம் ஐஸ்கிரீம் செட் ஆக ஃப்ரீசர்ல ஒரு 3 முதல் 4 மணி நேரம் வச்சா போதும், அசத்தலான சாக்கோ பார் ரெடி ஆகிடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தேவையான பொருட்கள்
Image Credit : x

தேவையான பொருட்கள்

ஃப்ரெஷ் கிரீம் (Fresh cream) - 1 கப்

கன்டென்ஸ்டு மில்க் (Condensed milk) - 200 கிராம்

வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

அகர் அகர் (Agar agar) - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)

சாக்லேட் குக்கீஸ் (நொறுக்கியது) - 5 முதல் 6

டார்க் சாக்லேட் (உருக்கியது) - 3/4 கப்

ரீஃபைண்ட் ஆயில் - 10 மி.லி

பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு - 5 முதல் 6

சாக்லேட் ஸ்பிரிங்கில்ஸ் - அலங்கரிக்க தேவையான அளவு

34
செய்முறை - 1
Image Credit : x

செய்முறை - 1

முதல்ல ஒரு சாஸ்பேனில் ஃப்ரெஷ் கிரீமை ஊத்தி, அடிபிடிக்காம கிளறிக்கிட்டே ஒரு கொதி வர விடுங்க. அதுக்கப்புறம் கன்டென்ஸ்டு மில்க்கை சேர்த்து நல்லா கலந்து கொஞ்ச நேரம் வேக வச்சு அடுப்பை அணைச்சிடுங்க. இப்போ இதுல வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நல்லா கலக்கணும். ஐஸ்கிரீம் சீக்கிரமா உருகாம கெட்டியா நிக்கணும்னு நினைச்சா, ஒரு சிட்டிகை அகர் அகர் சேர்த்துக்கலாம். தொடர்ந்து, நொறுக்கி வச்சிருக்கிற சாக்லேட் குக்கீஸ் தூள்ல பாதியை இதுல போட்டுக் கிளறி விடுங்க. மீதி இருக்கிற குக்கீஸ் தூளை ஐஸ்கிரீம் மோல்டு அல்லது ஐஸ் ட்ரேயின் அடியில் தூவி, அதுக்கு மேல இந்த ஐஸ்கிரீம் கலவையை ஊத்தி ஃப்ரீசரில் 3 முதல் 4 மணி நேரம் நல்லா செட் ஆகுற வரைக்கும் வச்சிருங்க.

44
செய்முறை - 2
Image Credit : x

செய்முறை - 2

ஐஸ்கிரீம் செட் ஆகுற நேரத்துல சாக்லேட் கோட்டிங் ரெடி பண்ணிடலாம். ஒரு பவுல்ல டார்க் சாக்லேட் துண்டுகளை எடுத்துட்டு, அதோட கொஞ்சமா ரீஃபைண்ட் ஆயில் சேர்த்து மைக்ரோவேவில் 30 விநாடிகள் வச்சு எடுத்து கலக்குங்க. சாக்லேட் நல்லா பளபளப்பா உருகும் வரை இன்னும் ஒரு 30 விநாடிகள் வச்சு எடுக்கலாம் (மைக்ரோவேவ் இல்லைனா சுடுதண்ணி மேல பாத்திரத்தை வச்சு டபுள் பாய்லிங் முறையிலயும் உருக்கலாம்). சாக்லேட் நல்லா சில்கியா உருகினதும் தனியா எடுத்து வச்சு ஆறவிடுங்க. இப்போ ஃப்ரீசர்ல இருந்து செட் ஆன வெண்ணிலா ஐஸ்கிரீமை வெளிய எடுத்து, ஐஸ்கிரீம் குச்சிகளைச் சொருகி மெதுவா மோல்டில் இருந்து வெளியே எடுங்க.

குச்சியைப் பிடிச்சுக்கிட்டு, நாம உருக்கி வச்சிருக்கிற சாக்லேட் கலவையில ஐஸ்கிரீமை ஒரு முக்கு முக்கி எடுங்க. அதிகப்படியான சாக்லேட் வடிஞ்சு, அது குளிர்ந்த காத்துல உடனே இறுகத் தொடங்கும். அதுக்குள்ளேயே பொடியா நறுக்கின பாதாம் பருப்பு, சாக்லேட் ஸ்பிரிங்கில்ஸை மேல தூவி விட்டீங்கன்னா அழகா ஒட்டிக்கும். அவ்வளவுதான், நாவூறும் மொறுமொறுப்பான ஹோம்மேட் சாக்கோ பார் தயார்! உடனே ஜில்லுனு பரிமாறி எல்லாரும் ருசிக்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
காலை டிபன் முதல் இரவு டின்னர் வரை... கோதுமை ரவையில் சட்டுனு செய்யக்கூடிய 5 அசத்தல் ரெசிபிகள்!
Recommended image2
Instant Vada : பருப்பு ஊற வைக்க வேண்டாம்! மீதமிருக்கும் பிரெட்டில் மொறுமொறு வடை செய்யலாம்!
Recommended image3
Chapati : பாதாம் மாவு vs கோதுமை மாவு : சப்பாத்தி செய்ய எது சிறந்தது? சத்து, கலோரி வித்தியாசம் இதோ!
Related Stories
Recommended image1
Fluffy Omelette: பஞ்சு போல புசுபுசு கேக் ஆம்லேட்.. வீட்டிலேயே செய்வது இவ்வளவு ஈஸியா?
Recommended image2
Kanyakumari Paaladai : பூப்போல மெல்லிய கன்னியாகுமரி பாலாடை..சிக்கன் குழம்புடன் சாப்பிட்டால் சுவை அள்ளும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved