MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Maravalli Mittai : மரவள்ளி மிட்டாய்..இப்படியொரு இனிப்பா? நாட்டுச்சர்க்கரை, தேங்காய் சேர்த்து வீட்டிலேயே செய்யலாம்!

Maravalli Mittai : மரவள்ளி மிட்டாய்..இப்படியொரு இனிப்பா? நாட்டுச்சர்க்கரை, தேங்காய் சேர்த்து வீட்டிலேயே செய்யலாம்!

Maravalli Mittai : மரவள்ளிக்கிழங்கை வைத்து இப்படியொரு சுவையான மிட்டாய் செய்யலாம். துருவிய மரவள்ளிக்கிழங்கு, நாட்டுச்சர்க்கரை, தேங்காய், ஏலக்காய் சேர்த்து பிசைந்து ஆவியில் வேகவைத்தால் பாரம்பரிய சுவையான இனிப்பு தயார்.

2 Min read
Author : Vishnupriya
Published : Oct 09 2026, 08:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மரவள்ளி மிட்டாய்
Image Credit : Gemini Ai

மரவள்ளி மிட்டாய்

மரவள்ளிக்கிழங்கை வைத்து வழக்கமாக பொரியல், வறுவல், கிழங்கு உணவுகள் என சில வகை உணவுகளைத்தான் செய்வோம். ஆனால், மரவள்ளிக்கிழங்கில் இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்று ஆச்சரியப்பட வைக்கும் வகையில், நாட்டுச்சர்க்கரை, தேங்காய், ஏலக்காய் சேர்த்து சுவையான மரவள்ளி மிட்டாய் செய்யலாம்.

வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டே செய்யக்கூடிய இந்த பாரம்பரிய இனிப்பு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குறிப்பாக, அதிக பொருட்கள் தேவையில்லை என்பதால், இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும் நேரத்தில் இதை எளிதாக செய்து பார்க்கலாம். மரவள்ளிக்கிழங்கு வீட்டில் இருந்தால், இந்த முறை கண்டிப்பாக ட்ரை பண்ணிப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்

மரவள்ளிக்கிழங்கு - 1 கப்

நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் - 1/2 கப் முதல் 1 கப் வரை

துருவிய தேங்காய் - 1\4 கப்

ஏலக்காய் - 2

உப்பு - ஒரு சிட்டிகை

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மரவள்ளி மிட்டாய் செய்வது எப்படி?
Image Credit : Gemini Ai

மரவள்ளி மிட்டாய் செய்வது எப்படி?

மரவள்ளிக்கிழங்கை தயார் செய்யவும்

  • முதலில் மரவள்ளிக்கிழங்கின் தோலை நன்றாக நீக்கி, சுத்தமாக கழுவிக் கொள்ளவும். பின்னர் அதை நன்றாகத் துருவிக் கொள்ளுங்கள்.
  • துருவிய மரவள்ளிக்கிழங்கில் இருக்கும் அதிகப்படியான நீரை கைகளால் நன்றாகப் பிழிந்து எடுக்க வேண்டும். மிட்டாயின் பதம் சரியாக வர இது முக்கியமான படியாகும்.
35
அனைத்து பொருட்களையும் கலக்கவும்
Image Credit : Gemini Ai

அனைத்து பொருட்களையும் கலக்கவும்

ஒரு பாத்திரத்தில் பிழிந்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கு துருவல், துருவிய தேங்காய், நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். அனைத்தும் ஒன்றாக நன்றாகக் கலக்கும் வகையில் கைகளால் பிசைந்து கொள்ளவும்.

45
ஆவியில் வேகவைக்கவும்
Image Credit : Gemini Ai

ஆவியில் வேகவைக்கவும்

  • தயார் செய்த கலவையை வாழை இலையில் நீளமாக வைத்து, இலையை மடித்து நன்றாக அழுத்தி உருட்டிக்கொள்ளவும்.
  • இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்கவிடவும்.
  • பின்னர் இட்லித் தட்டில் தயார் செய்து வைத்துள்ள வாழை இலை உருளைகளை வைத்து, மூடி போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைக்கவும்.
55
மரவள்ளி மிட்டாய் ரெடி
Image Credit : Gemini Ai

மரவள்ளி மிட்டாய் ரெடி

  • மரவள்ளி மிட்டாய் நன்றாக வெந்து, அதன் பச்சைத் தன்மை நீங்கி, சற்று உறுதியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் ஆறவிட்டு எடுக்கவும்.
  • ஆவியில் வெந்த மரவள்ளி மிட்டாயை சூடாகவோ அல்லது முழுமையாக ஆறிய பின்னரோ பரிமாறலாம்.
  • நாட்டுச்சர்க்கரை, தேங்காய் மற்றும் ஏலக்காய் சேர்வதால் எளிமையான பொருட்களிலேயே நல்ல மணமும் இனிப்பும் கிடைக்கும்.
  • மாலை நேர சிற்றுண்டியாகவும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு வித்தியாசமான இனிப்பாகவும் கொடுக்கலாம்.

சுவையை அதிகரிக்க சில குறிப்புகள்

  • இனிப்பு அதிகம் வேண்டுமென்றால் நாட்டுச்சர்க்கரை அளவை 1 கப் வரை அதிகரிக்கலாம்.
  • தேங்காயை லேசாக வறுத்துச் சேர்த்தால் நல்ல மணமும் சுவையும் கிடைக்கும்.
  • ஏலக்காய் தூள் சேர்ப்பது மிட்டாய்க்கு நல்ல நறுமணத்தைத் தரும்.
  • மிட்டாய் நன்றாக செட் ஆக, மரவள்ளிக்கிழங்கில் இருக்கும் அதிகப்படியான தண்ணீரை பிழிந்து எடுப்பது முக்கியம்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rambutan Kozhukattai: நாவூறும் சுவையில் ரம்புட்டான் கொழுக்கட்டை.. தேங்காய் பூரணத்துடன் வித்தியாசமான ஸ்நாக்ஸ்!
Recommended image2
7 Most Dangerous Foods: சாப்பிடுவது சுகம்.. பறிப்பது நரகம்: ஒரு நொடி பிசகினாலும் உயிருக்கே உலைவைக்கும் 7 விசித்திர உணவுகள்!
Recommended image3
Fish and Curd: மீன் குழம்புடன் தயிர் சாப்பிடலாமா? பலரும் சொல்வது உண்மையா? தெரிஞ்சுக்கோங்க..!
Related Stories
Recommended image1
Leaf Appalam: கேரட், பீட்ரூட்டில் கலர் கலர் இலை அப்பளம்.. இடியாப்பம் மாவில் ஈஸி ரெசிபி!
Recommended image2
Sundal Recipe Ideas : ஒவ்வொரு நாளும் ஒரு சுண்டல்.. நவராத்திரிக்கு தினமும் ஒரு டேஸ்ட், ஒரு ஸ்பெஷல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved