MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Karuppu Kavuni Arisi Kozhukattai : கருப்பு கவுனி அரிசியில் இப்படி ஒரு கொழுக்கட்டையா? ஒருமுறை செஞ்சா திரும்பத் திரும்ப கேட்பாங்க!

Karuppu Kavuni Arisi Kozhukattai : கருப்பு கவுனி அரிசியில் இப்படி ஒரு கொழுக்கட்டையா? ஒருமுறை செஞ்சா திரும்பத் திரும்ப கேட்பாங்க!

Karuppu Kavuni Arisi Kozhukattai : கருப்பு கவுனி அரிசியில் சுவையான கொழுக்கட்டை செய்வது எப்படி? தேவையான பொருட்கள், வெல்லம் தேங்காய் பூரணம் தயாரிக்கும் முறை, மாவு பிசையும் விதம் மற்றும் ஆவியில் வேக வைக்கும் செய்முறையை தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 24 2026, 05:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
கருப்பு கவுனி அரிசி கொழுக்கட்டை
Image Credit : Gemini Ai

கருப்பு கவுனி அரிசி கொழுக்கட்டை

வழக்கமான அரிசி மாவு கொழுக்கட்டை சாப்பிட்டு போரடிச்சுடுச்சா? வீட்டில் கருப்பு கவுனி அரிசி இருக்கா? அப்படின்னா இந்த ஸ்பெஷல் கொழுக்கட்டையை ஒருமுறை ட்ரை பண்ணிப் பாருங்க.கருப்பு கவுனி அரிசியின் இயற்கையான அடர் நிறம், தேங்காய் மற்றும் வெல்லத்தின் மணம் சேர்ந்தால் சுவையே தனி லெவல்.

மாலை நேர ஸ்நாக்ஸாகவும், பண்டிகை நாட்களில் வித்தியாசமான இனிப்பாகவும் செய்து அசத்தலாம். அதிக எண்ணெயும் தேவையில்லை. ஆவியில் வேக வைத்தாலே போதும். கருப்பு கவுனி அரிசி கொழுக்கட்டை எப்படி செய்வது? பார்க்கலாம் வாங்க.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
தேவையான பொருட்கள்
Image Credit : Gemini Ai

தேவையான பொருட்கள்

சுமார் 15 சிறிய கொழுக்கட்டைகள் செய்ய

கருப்பு கவுனி அரிசி – 1 கப்

  • வெல்லம் – 3\4 கப்
  • தேங்காய் துருவல் – 1\2 கப்
  • ஏலக்காய் – 3 முதல் 4
  • நெய் – 1 முதல் 2 டீஸ்பூன்
  • உப்பு – ஒரு சிட்டிகை
  • தண்ணீர் – தேவையான அளவு

விருப்பப்பட்டால் முந்திரி, உலர் திராட்சை போன்றவற்றையும் சிறிதளவு சேர்க்கலாம்.

38
கருப்பு கவுனி அரிசி மாவு தயார் செய்வது எப்படி?
Image Credit : Gemini Ai

கருப்பு கவுனி அரிசி மாவு தயார் செய்வது எப்படி?

கருப்பு கவுனி அரிசியை நன்றாகக் கழுவி 4 முதல் 6 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை முழுமையாக வடித்து, சுத்தமான துணியில் பரப்பி நிழலில் ஈரம் குறையும் வரை உலர விடவும்.

அரிசியில் அதிக ஈரம் இல்லாத நிலையில் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் மாவை சலித்து மிகக் குறைந்த தீயில் சில நிமிடங்கள் வாசனை வரும் வரை வறுத்தும் பயன்படுத்தலாம். கருகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

48
வெல்லப் பாகு தயாரிப்பது எப்படி?
Image Credit : Gemini Ai

வெல்லப் பாகு தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். வெல்லம் முழுவதும் கரைந்ததும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இந்த ரெசிபிக்கு கட்டியான கம்பிப் பதம் தேவையில்லை. வெல்லம் நன்றாகக் கரைந்து சற்று பிசுபிசுப்பான நிலைக்கு வந்தாலே போதும்.

பூரணம் தயாரிக்கலாம்

கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து தேங்காய் துருவலை லேசாக வதக்கவும். அதனுடன் வடிகட்டிய வெல்லக் கரைசலைச் சேர்த்து மிதமான தீயில் கிளறுங்கள். கலவை கெட்டியாகி ஒன்றாகத் திரண்டு வரும்போது ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பை அணைக்கவும். கையில் பிடித்து உருட்டும் அளவுக்கு ஆறியதும் சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளலாம்.

58
கொழுக்கட்டை மாவு பிசைவது எப்படி?
Image Credit : Gemini Ai

கொழுக்கட்டை மாவு பிசைவது எப்படி?

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து கொதிக்க வைக்கவும். தீயைக் குறைத்து கருப்பு கவுனி அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து தொடர்ந்து கிளறவும்.

மாவு ஒன்றாகத் திரண்டு வந்ததும் அடுப்பை அணைத்து மூடி சில நிமிடங்கள் வைக்கவும். கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும் நன்றாகப் பிசையுங்கள். மாவு வெடிப்பில்லாமல் மென்மையாக இருக்க வேண்டும். மாவு வறண்டு உடைந்தால் வெந்நீரை சிறிது சிறிதாகச் சேர்த்துப் பிசையலாம். ஒரே நேரத்தில் அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

68
கொழுக்கட்டை பிடிப்பது எப்படி?
Image Credit : Gemini Ai

கொழுக்கட்டை பிடிப்பது எப்படி?

கையில் சிறிதளவு நெய் அல்லது தண்ணீர் தடவிக் கொள்ளுங்கள். மாவிலிருந்து ஒரு சிறிய உருண்டையை எடுத்து கிண்ணம் போல மெதுவாகத் தட்டவும்.

நடுவில் தயாரித்து வைத்துள்ள தேங்காய் - வெல்ல பூரணத்தை வைத்து, ஓரங்களை ஒன்றாகச் சேர்த்து மூடுங்கள். உருண்டை அல்லது மோதகம் போன்ற உங்களுக்குப் பிடித்த வடிவத்தில் செய்யலாம்.

78
ஆவியில் வேக வைப்பது எப்படி?
Image Credit : Gemini Ai

ஆவியில் வேக வைப்பது எப்படி?

இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். இட்லி தட்டில் லேசாக நெய் தடவி கொழுக்கட்டைகளை இடைவெளிவிட்டு அடுக்குங்கள்.

பின்னர் மூடி வைத்து சுமார் 10–15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். அளவு மற்றும் மாவின் ஈரப்பதத்தைப் பொறுத்து நேரம் சற்று மாறலாம். வெந்ததும் உடனடியாக எடுக்காமல் சில நிமிடங்கள் ஆறவிட்டு எடுத்தால் உடையாமல் இருக்கும்

88
கொழுக்கட்டை ரெடி
Image Credit : Gemini Ai

கொழுக்கட்டை ரெடி

அவ்வளவுதான், கருப்பு கவுனி அரிசியின் அழகான அடர் நிறத்தில், உள்ளே தேங்காய் - வெல்ல பூரணம் நிறைந்த சூடான கொழுக்கட்டை ரெடி. டீ, காபியுடன் மாலை நேரத்தில் பரிமாறினால் வீட்டிலேயே ஒரு வித்தியாசமான பாரம்பரிய ஸ்நாக்ஸ் அனுபவம் கிடைக்கும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vendakkai Thuvaiyal : நாவில் நடனமாடும் வெண்டைக்காய் துவையல்..இப்படி ஒருமுறை செய்து பாருங்க!
Recommended image2
உங்க குழந்தையின் ஞாபக சக்தி சூப்பர் பாஸ்ட்டாக மாறணுமா? இந்த 5 உணவுகளை மிஸ் பண்ணாதீங்க!
Recommended image3
Samantha Favorite Thayir Vadai : நடிகை சமந்தாவுக்கு பிடித்த ஹோட்டல் தயிர் வடை..வீட்டிலேயே அதே சுவையில் செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
Karuppu Kavuni Arisi Recipes: கருப்பு கவுனி அரிசி வைத்து செய்யும் 5 சூப்பர் உணவுகள்
Recommended image2
Kozhukattai: கும்பகோணம் ஸ்பெஷல் மென்மையான வெல்லப் பூரணக் கொழுக்கட்டை: எளிய செய்முறை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved