MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Karuppu Kavuni Arisi Recipes: கருப்பு கவுனி அரிசி வைத்து செய்யும் 5 சூப்பர் உணவுகள்

Karuppu Kavuni Arisi Recipes: கருப்பு கவுனி அரிசி வைத்து செய்யும் 5 சூப்பர் உணவுகள்

கருப்பு கவுனி அரிசியில் உள்ள அந்தோசயனின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கும் இந்த பாரம்பரிய அரிசியின் சிறப்புகள் என்ன?

2 Min read
Author : Priya Velan
Published : Sep 23 2026, 08:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கருப்பு கவுனி அரிசி வைத்து செய்யும் 5 சூப்பர் உணவுகள் :
Image Credit : Google

கருப்பு கவுனி அரிசி வைத்து செய்யும் 5 சூப்பர் உணவுகள் :

பண்டைய காலத்தில் மன்னர்கள் மட்டுமே உண்டு வந்த பெருமைமிக்க தானியம் கருப்பு கவுனி அரிசி. அதனாலேயே இதற்கு "தடைசெய்யப்பட்ட அரிசி" (Forbidden Rice) என்ற செல்லப் பெயரும் உண்டு. உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants), இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்தை அள்ளித் தரும் இந்த அரிசியை வெறும் கஞ்சியாகவோ அல்லது பாயாசமாகவோ மட்டுமே செய்து சாப்பிடும் பழக்கம் பலரிடம் உள்ளது.

ஆனால், இதன் இயற்கை சுவையையும் மணத்தையும் மாறாமல் வைத்து, நமது அன்றாட உணவில் பலவிதமான புதுமையான உணவுகளாக மாற்ற முடியும். உடலுக்கு அளப்பரிய நன்மைகளைத் தரும் கருப்பு கவுனி அரிசியை வைத்து எளிதாகவும், வித்தியாசமான சுவையிலும் செய்யக்கூடிய 5 சூப்பர் உணவுகள் மற்றும் அவற்றின் சமையல் குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கவுனி அரிசி தேங்காய் பால் புட்டு :
Image Credit : Getty

கவுனி அரிசி தேங்காய் பால் புட்டு :

கவுனி அரிசியை வறுத்து அரைத்த மாவில் மிதமான வெதுவெதுப்பான நீர் தெளித்து பிசறி, ஆவியில் வேகவைக்க வேண்டும். வெந்த புட்டுடன் புதிதாகத் துருவிய தேங்காய், நாட்டுச்சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து, மேலே சிறிது கெட்டியான தேங்காய் பாலை ஊற்றிப் பரிமாறினால் இதன் சுவை அலாதியானது. இது காலை உணவிற்கு மிகச்சிறந்த ஆற்றலைத் தரும்.

36
கவுனி அரிசி காரப் பணியாரம் :
Image Credit : Google

கவுனி அரிசி காரப் பணியாரம் :

ஊறவைத்த கவுனி அரிசியுடன் உளுந்து சேர்த்து அரைத்து, நன்கு நொதிக்க வைக்க வேண்டும். கடாயில் கடுகு, உளுந்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை தாளித்து மாவில் கலக்க வேண்டும். பணியாரக் கல்லில் நெய் விட்டு, மிதமான தீயில் மொறுமொறுப்பாகச் சுட்டு எடுத்தால், காரசாரமான கவுனி அரிசி பணியாரம் தயார்.

46
கவுனி அரிசி காய்கறி புலாவ் :
Image Credit : Getty

கவுனி அரிசி காய்கறி புலாவ் :

முழு கவுனி அரிசியை 8 மணி நேரம் ஊறவைத்து, பாஸ்மதி அரிசிக்கு மாற்றாகப் பயன்படுத்திச் செய்யப்படும் சத்தான புலாவ் இது. நெய்யில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, பூண்டு, வெங்காயம் மற்றும் காய்கறிகளான கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்க வேண்டும். ஊறவைத்த அரிசியைச் சேர்த்து, தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீர் கலந்து குக்கரில் 5 விசில் விட்டு இறக்கினால் மணமணக்கும் புலாவ் தயார்.

56
கவுனி அரிசி பருப்பு அடை :
Image Credit : Google

கவுனி அரிசி பருப்பு அடை :

வழக்கமான அடை மாவோடு, ஊறவைத்த கவுனி அரிசியையும் சம அளவில் சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும். மாவில் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை சேர்த்து, தோசைக் கல்லில் அடை சுட்டு எடுக்கும் போது மொறுமொறுப்பாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.

66
கவுனி அரிசி உளுந்தங்கஞ்சி :
Image Credit : Google

கவுனி அரிசி உளுந்தங்கஞ்சி :

கவுனி அரிசி, கருப்பு உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீரில் இந்தப் பொடியைக் கரைத்து, பூண்டு பற்கள் சேர்த்து நன்கு வேகவைக்க வேண்டும். கஞ்சி வெந்ததும் தேவையான அளவு கல் உப்பு மற்றும் கெட்டியான தேங்காய்ப்பால் அல்லது தயிர் சேர்த்துப் பருகினால் உடல் சூடு தணிந்து எலும்புகளுக்கு மிகுந்த பலம் கிடைக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
உணவு
சமையலறை குறிப்புகள்
ஆரோக்கியம்
வாழ்க்கை முறை
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(89.3 ov) 99 & 246/6
Day 5 - Session 1
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Earth Without Sunlight: சூரியன் 24 மணி நேரம் மறைந்தால்… பூமியில் என்ன நடக்கும்? அதிர வைக்கும் உண்மை!
Recommended image2
Curd Storage : ஃபிரிட்ஜ் இல்லாமல் தயிரைப் பாதுகாக்ககலாம் தெரியுமா? எப்படி?
Recommended image3
Healthy Food For Children: சுவையான நெல்லிக்காய் சாதம் செய்யலாம்.! ஒரே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்கூல் லஞ்ச்.!
Related Stories
Recommended image1
Ragi Recipes: ராகி மட்டும் போதும் இந்த 5 வகையான உணவுகளை செய்து அசத்தலாம்
Recommended image2
Variety Rice: புரட்டாசி மாதம் வந்தாச்சு...வெங்காயம், பூண்டு இல்லாத சுவையான 5 வெரைட்டி ரைஸ் ரெசிபி இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved