Omelette Tips: ஹோட்டல் மாதிரி 'Fluffy' ஆம்லெட் வேணுமா? இதை மட்டும் செஞ்சா போதும்.!
ஆம்லெட் செய்றது ஈசினு எல்லாரும் நினைப்போம். ஆனா, உப்பு எப்போ சேர்க்கணும், காய்கறி எப்படிப் பயன்படுத்தணும்னு சின்ன சின்ன விஷயங்கள் கூட தெரியாது. ஹோட்டல் ஸ்டைல் ஆம்லெட் வீட்டிலேயே செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ.
16

Image Credit : our own
ஆரோக்கியமாக மாற்றிக்கொள்ள பின்பற்ற வேண்டிய சூத்திரங்கள்
மத்தியான சாப்பாடா இருந்தாலும் சரி, காலை டிஃபனா இருந்தாலும் சரி... சூடா ஒரு ஆம்லெட் இருந்தா, அது வேற லெவல். பேச்சுலர்ஸ்ல இருந்து வீட்டுல இருக்குறவங்க வரைக்கும், வேகமா செய்யக்கூடிய இந்த டிஷ் எல்லாருக்கும் பிடிக்கும். ஆனா, நாம செய்ற சின்ன சின்ன தவறுகள் இந்த சத்தான உணவை ஆரோக்கியமற்றதா மாத்திடும்னு நிபுணர்கள் சொல்றாங்க. நம்ம ஆம்லெட்டை இன்னும் டேஸ்டாவும் ஹெல்தியாவும் மாத்த சில டிப்ஸ் பார்க்கலாம்.
Add Asianetnews Tamil as a Preferred Source

26
Image Credit : Pixabay
உப்பு சேர்க்கும் விஷயத்தில் ஜாக்கிரதை
நாம செய்யுற மிகப்பெரிய தப்பு, முட்டையை அடிக்கும்போதே உப்பைச் சேர்க்கிறதுதான். இப்படி செஞ்சா, முட்டையோட புரோட்டீன் அமைப்பு பாதிச்சு, அதுல இருக்குற ஈரப்பதம் போயிடும். இதனால ஆம்லெட் சாஃப்டா இல்லாம, ரப்பர் மாதிரி ஆகிடும். ஆம்லெட் கலவையை பேன்ல ஊத்துறதுக்கு சில நொடிகள் முன்னாடி மட்டும் உப்பு சேருங்க. அப்போதான் ஆம்லெட் நல்லா உப்பி வரும்.
36
Image Credit : Getty
காய்கறிகளில் உள்ளது ஊட்டச்சத்து
நிறைய பேர் முட்டையை உடைச்சு, உப்பு, மிளகாய் தூள் மட்டும் போட்டு ஆம்லெட் செய்வாங்க. ஆனா இதுல நார்ச்சத்து (Fibre) இருக்காது. வெறும் முட்டையை மட்டும் சாப்பிடுறதால வர்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, கண்டிப்பா காய்கறிகளைச் சேர்க்கணும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் கூட பாலக்கீரை, கேப்சிகம் அல்லது கேரட் துருவல் கூட சேர்க்கலாம். நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சேர்க்கும்போது, ஜீரணம் நல்லா நடக்கும்.
46
Image Credit : Getty
பச்சையாக இருக்கக்கூடாது
வெங்காயம், பச்சை மிளகாயை நேரா முட்டை கலவையில போட்டு பேன்ல ஊத்தினா, அந்த கொஞ்ச நேரத்துல காய்கறிகள் சரியா வேகாது. இதனால சாப்பிடும்போது பச்சை வாசனை வரும், டேஸ்ட்டும் குறைஞ்சிடும். முதல்ல, பேன்ல கொஞ்சம் எண்ணெய் அல்லது வெண்ணெய் விட்டு காய்கறிகளை லேசா வதக்கிக்கோங்க. அது பாதி வெந்ததும், முட்டை கலவையை அதுல சேருங்க. இப்படி செஞ்சா, காய்கறிகளோட இயற்கையான சுவை ஆம்லெட்ல இறங்கும்.
56
Image Credit : Getty
ஆம்லெட் Vs ஆஃப் பாயில்
நிறைய பேர் முட்டையை உடைச்சு ரெண்டு பக்கமும் வேக வெச்சா அதுதான் ஆம்லெட்னு நினைக்கிறாங்க. அதுவும் ஆரோக்கியமானதுதான், ஆனா டெக்னிக்கலா அது ஆம்லெட் இல்லை. உண்மையான ஆம்லெட்னா, எல்லா பொருட்களையும் சரியான அளவுல கலந்து, ஒரு முறையா சமைக்கிறது. சமைக்கும்போது அதிகமா எண்ணெய் ஊத்தாம, குறைஞ்ச தீயில வேக வெச்சா, முட்டையில இருக்குற சத்துக்கள் ஆவியாகாம அப்படியே இருக்கும்.
66
Image Credit : Getty
கவனத்தில் கொள்க...
சின்ன சின்ன மாற்றங்கள்தான் பெரிய ரிசல்ட்டைக் கொடுக்கும். ஆம்லெட் செய்யும்போது இந்த விஷயங்களை நீங்க கவனிச்சா, அது வெறும் வயிறு நிரப்புற உணவா மட்டும் இல்லாம, உடம்புக்குத் தேவையான புரோட்டீன், வைட்டமின்களைக் கொடுக்கிற ஒரு சூப்பரான ஹெல்த் சோர்ஸா மாறும்.
Latest Videos

