MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Soft idli : பூ மாதிரி இட்லி வேணுமா? இந்த சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே போதும்!

Soft idli : பூ மாதிரி இட்லி வேணுமா? இந்த சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே போதும்!

Soft idli: வீட்டிலேயே பஞ்சு போல, பூ மாதிரி மென்மையான இட்லி வேணுமா? அரிசி, உளுந்து ஊறவைப்பது முதல் மாவு அரைத்தல், புளிக்க வைப்பது வரை பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள் இதோ!

2 Min read
Author : Vishnupriya
Published : Aug 29 2026, 10:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பஞ்சு போல இட்லி வேணுமா?
Image Credit : magnific

பஞ்சு போல இட்லி வேணுமா?

வீட்டில் இட்லி செய்யும்போது சில நேரம் கல் மாதிரி இறுகிடும். சில நேரம் மாவு சரியா புளிக்காமல் இட்லி தட்டையாகிடும். ஆனால், அரிசி–உளுந்து அளவு, ஊறவைக்கும் நேரம், மாவை அரைக்கும் பதம், புளிக்க வைக்கும் முறை ஆகியவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தினாலே போதும் மல்லிகைப்பூ மாதிரி மென்மையான இட்லி ரெடி ஆகிடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அரிசி மற்றும் உளுந்து ஊறவைத்தல்
Image Credit : magnific

அரிசி மற்றும் உளுந்து ஊறவைத்தல்

தேவையான அளவு இட்லி அரிசியை 3 அல்லது 4 முறை நன்றாகக் கழுவி, சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதோடு ஜவ்வரிசியையும், வெந்தயத்தையும் தனி தனியாக ஊற வைக்கவும். உளுந்தை மாவு அரைப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு ஊற வைத்தாலே போதும். அதிக நேரம் ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

குறிப்பு: பொதுவாக 4 கப் இட்லி அரிசிக்கு 1 கப் முழு உளுந்து சேர்த்தால் சரியான அளவாக இருக்கும். முக்கியமாக, அரிசி எடுக்கும் அதே கப்பைத்தான் உளுந்துக்கும் பயன்படுத்தணும்.

35
இட்லி மாவு அரைக்கும் முறை
Image Credit : magnific

இட்லி மாவு அரைக்கும் முறை

முதலில் ஊறவைத்த வெந்தயத்தை கிரைண்டரில் போட்டு நன்றாக அரைத்துக்கணும். அதுக்குப் பிறகு உளுந்தை சேர்த்து, நல்லா நுரைத்து லைட்டா இருக்குற மாதிரி அரைக்கணும். அப்படிச் செய்தால்தான் இட்லி நல்லா பஞ்சு மாதிரி மென்மையா வரும். மாவு அரைக்கும்போது ஒரே நேரத்துல அதிகமா தண்ணீர் ஊத்தாம, கொஞ்சம் கொஞ்சமா சேர்க்கணும். அதுவும் குளிர்ந்த தண்ணீர் பயன்படுத்தி அரைத்தால் இட்லி இன்னும் மென்மையா வர உதவும்.

பின்னர் அரிசியை லேசாக கொரகொரப்பான( ரவை பதத்தில்) அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

குறிப்பு: ஒவ்வொரு முறையும் உளுந்தை கிரைண்டரில் போடும்போது, கொஞ்சம் கொஞ்சமாக வெந்தயத்தையும் சேர்த்து அரைப்பது நல்லது.

45
பூ மாதிரி இட்லி வேணுமா?
Image Credit : magnific

பூ மாதிரி இட்லி வேணுமா?

அரைத்த உளுந்து மற்றும் அரசி மாவை ஒன்றாக கலந்து தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கைகளால் நன்கு கரைத்து சுமார் 8 மணி நேரம் அல்லது அதற்கு மேல் புளிக்க விட வேண்டும்.

இட்லி ஊற்றும்போது மாவை அதிகமா கிளறக்கூடாது. மெதுவா கிளறி, இட்லித் தட்டில் ஊற்றணும். முக்கியமாக இட்லி பாத்திரத்தில் தண்ணீர் நன்றாகக் கொதித்த பிறகுதான் தட்டில் மாவை ஊற்றி வேக வைக்கணும். அப்படிச் செய்தால் இட்லி நல்லா மென்மையா வரும்.

இட்லி வெந்ததும் உடனே எடுக்காமல், ஆவி கொஞ்சம் அடங்கிய பிறகு சில நிமிடங்கள் கழித்து எடுத்தால் நல்லா இருக்கும். அப்படிச் செய்தால் இட்லி உடையாம ஈசியா வரும். அதுவும் பூ மாதிரி மென்மையா இருக்கும்.

55
மென்மையான இட்லிக்கு என்ன செய்யனும்?
Image Credit : magnific

மென்மையான இட்லிக்கு என்ன செய்யனும்?

உண்மையிலேயே பூ மாதிரி மென்மையான இட்லி வேணும்னா, இதைச் சேர்க்கணும், அதைச் சேர்க்கணும்னு அவசியம் இல்லை. அரிசி, உளுந்தை எவ்வளவு நேரம் ஊற வைக்கிறோம், எப்படி அரைக்கிறோம், மாவை எவ்வளவு நேரம் புளிக்க வைக்கிறோம் என்பதுதான் இட்லியின் மென்மைக்கு முக்கிய காரணம் என்று FSSAI (Food Safety and Standards Authority of India) செய்முறை வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆரோக்கிய குறிப்புகள்
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
சண்டே ஸ்பெஷல்: ஹோட்டல் ஸ்டைல் ஜூஸியான கிரில் சிக்கன்... இனி வீட்லயே செய்யலாம்; ஈசி ரெசிபி!
Recommended image2
Vegetarian Chicken 65: சிக்கனே இல்லாமல் சிக்கன் 65..! முழு தட்டையும் காலி பண்ணாம விடமாட்டீங்க!
Recommended image3
Bread Dosa: வீட்டில் தோசை மாவு இல்லயா? பிரெட் இருந்தா போதும்... 10 நிமிடத்தில் கிரிஸ்பியான தோசை ரெடி!
Related Stories
Recommended image1
Idli Amma: விலைவாசி உயர்வுக்கு மத்தியில் 1 ரூபாய்க்கு சுடச்சுட இட்லி! ஏழைகளின் பசியைப் போக்கும் பாட்டியின் கதை...!
Recommended image2
Idli Batter: இட்லி மாவு மிச்சமாயிடுச்சா? தோசைக்கு தண்ணி ஊத்தாதீங்க! இந்த ட்ரிக்ஸ் யூஸ் பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved