MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • பிரெட், சப்பாத்திக்கு செம காம்போ: நாவில் எச்சில் ஊறவைக்கும் மாம்பழ ஜாம்; 20 நிமிடத்தில் செய்வது எப்படி?

பிரெட், சப்பாத்திக்கு செம காம்போ: நாவில் எச்சில் ஊறவைக்கும் மாம்பழ ஜாம்; 20 நிமிடத்தில் செய்வது எப்படி?

கடைகளில் வாங்க தேவையில்லை. வீட்டிலேயே வெறும் 3 பொருட்களில் சுவையான மாம்பழ ஜாம் செய்வது எப்படி? சரியான பதம் மற்றும் கெடாமல் சேமிக்கும் எளிய செய்முறை; மாம்பழ சீசனில் மணக்க மணக்க ஹோம்மேட் மாம்பழ ஜாம் செய்வது எப்படி?

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 20 2026, 09:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வீட்டிலேயே சுவையான மாம்பழ ஜாம் தயாரிப்பது எப்படி?
Image Credit : x

வீட்டிலேயே சுவையான மாம்பழ ஜாம் தயாரிப்பது எப்படி?

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே பலரது வீடுகளிலும் மாம்பழங்களின் நறுமணம் வீசத் தொடங்கும். மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவதைத் தாண்டி, அதைக் கொண்டு பலவிதமான உணவுகள் மற்றும் தின்பண்டங்களைத் தயாரித்து ருசிக்கலாம். அந்த வகையில், கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கப்படும் மாம்பழ ஜாமை (Mango Jam), பழங்கள் அதிகம் கிடைக்கும் இந்த சீசனிலேயே வீட்டிலேயே எளிதாகத் தயாரித்து நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்த முடியும்.

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த மாம்பழச் சதை – சுமார் 2 கப்

சர்க்கரை – அரை கப் (மாம்பழத்தின் இனிப்புத் தன்மைக்கேற்ப)

எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சரியான மாம்பழத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
Image Credit : x

சரியான மாம்பழத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

மாம்பழ ஜாமின் சுவை, நாம் தேர்வு செய்யும் மாம்பழத்தின் வகையிலேயே உள்ளது. பழுக்காத அல்லது புளிப்பான மாம்பழங்களைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல், அதிக நார் கொண்ட மாம்பழங்களைப் பயன்படுத்தினால் ஜாம் மென்மையாக வராது. எனவே, அதிக இனிப்பும் மென்மையான சதைப்பற்றும் கொண்ட, நன்கு பழுத்த மாம்பழங்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

34
செய்முறை விளக்கம்
Image Credit : x

செய்முறை விளக்கம்

முதலில் மாம்பழங்களைச் சுத்தமாகக் கழுவி, தோலை நீக்கிவிட்டுச் சதைப்பகுதியை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும். மாம்பழச் சதையை மிக்சியில் போட்டு நைசான கூழாக (Pulp) அரைத்துக்கொள்ளவும். கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரம் அல்லது வாணலியில் இந்த மாம்பழக் கூழ் மற்றும் சர்க்கரையைச் சேர்க்க வேண்டும்.

பாத்திரத்தின் அடியில் ஒட்டாமல் இருக்க, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும். சூடேறத் தொடங்கியதும் சர்க்கரை உருகி, கலவையின் நிறம் படிப்படியாக அடர் நிறத்திற்கு மாறும். அடிபிடித்துவிடாமல் இருக்க தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். சுமார் 15 முதல் 20 நிமிடங்களில் கலவை கெட்டியாகத் தொடங்கும். ஜாம் பதத்திற்கு வந்ததும், இறுதியாக 1 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றைச் சேர்க்க வேண்டும். இது சுவையை சமன்செய்வதுடன், ஜாமின் பதத்தைத் தக்கவைக்கவும் உதவும்.

44
ஜாமின் சரியான பதம் எது? சேமிக்கும் முறை
Image Credit : x

ஜாமின் சரியான பதம் எது? சேமிக்கும் முறை

ஜாம் சரியான பதத்திற்கு வந்துவிட்டதா என்பதை அறிய ஒரு எளிய வழி உள்ளது. சமைக்கும் கலவையிலிருந்து ஒரு சொட்டு எடுத்து தட்டில் ஊற்றிப் பார்க்கவும். அது தட்டில் பரவாமல், ஓரிடத்திலேயே கெட்டியாக நின்றால் ஜாம் தயார் என்பதை அறியலாம். நீர்த்து ஓடினால் இன்னும் சிறிது நேரம் சமைக்க வேண்டும்; அதே சமயம் அதிக நேரம் வேகவைத்தால் ஜாம் மிகவும் கடினமாகிவிடும் என்பதால் கவனம் தேவை.

ஜாம் தயாரானவுடன், சுத்தமான மற்றும் உலர்ந்த கண்ணாடி பாட்டிலில் (Glass jar) ஊற்றவும். அது முழுமையாக ஆறிய பிறகு, மூடியை இறுக்கமாக மூடி குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) வைக்க வேண்டும். இவ்வாறு சேமித்தால் பல நாட்களுக்குக் கெடாமல் சுவை மாறாமல் இருக்கும்.

பயன்படுத்தும் வழிகள்

இந்த ஜாமை வெறும் ரொட்டியில் (Bread) தடவிச் சாப்பிடுவதுடன் நில்லாமல், டோஸ்ட், பராத்தா, பான்கேக், க்ரோசான், பன், குக்கீஸ் மற்றும் தயிருடன் சேர்த்தும் ருசிக்கலாம். குழந்தைகளுக்கு மதிய உணவாக பிரெட்-ஜாம் சாண்ட்விச்களைச் செய்து தரலாம்; திடீரென இனிப்பு சாப்பிடத் தோன்றும் நேரங்களில் இது சிறந்த தேர்வாக அமையும். மாம்பழப் பிரியர்கள் இந்த சீசனில் இந்த எளிய ஜாம் தயாரிப்பை வீட்டிலேயே முயற்சித்துப் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gulab Jamun : வாயில் போட்டதும் கரையும் குலாப் ஜாமூன்: ஸ்வீட் கடை ஸ்டைலில் வீட்டிலேயே செய்ய சீக்ரெட் டிப்ஸ்!
Recommended image2
Ghee Shelf Life: நெய்யை இத்தனை மாதங்களா வீட்டில் வச்சிருக்கீங்க? கெட்டுப்போனதை எப்படி கண்டுபிடிப்பது
Recommended image3
பொன்னி vs சீரக சம்பா: பிரியாணி குழையாமல் மணமணக்கணுமா? எந்த அரிசி பெஸ்ட் சாய்ஸ்?
Related Stories
Recommended image1
Gulab Jamun : வாயில் போட்டதும் கரையும் குலாப் ஜாமூன்: ஸ்வீட் கடை ஸ்டைலில் வீட்டிலேயே செய்ய சீக்ரெட் டிப்ஸ்!
Recommended image2
பொன்னி vs சீரக சம்பா: பிரியாணி குழையாமல் மணமணக்கணுமா? எந்த அரிசி பெஸ்ட் சாய்ஸ்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved