MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Homemade Cheese : வீட்டிலேயே சுவையான சீஸ் செய்யலாம்! பால் இருந்தால் போதும்..ஈஸியான 2 செய்முறைகள்

Homemade Cheese : வீட்டிலேயே சுவையான சீஸ் செய்யலாம்! பால் இருந்தால் போதும்..ஈஸியான 2 செய்முறைகள்

Homemade Cheese : கடைகளில் வாங்கும் சீஸை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். பால், எலுமிச்சைச் சாறு போன்ற எளிய பொருட்களை வைத்து ஃபிரெஷ் சீஸ் செய்வது எப்படி? கட்டியாக வெட்டக்கூடிய சீஸ் தயாரிக்கும் மற்றொரு முறையையும் தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Vishnupriya
Published : Oct 18 2026, 02:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
வீட்டிலேயே சீஸ் செய்வது எப்படி
Image Credit : Gemini Ai

வீட்டிலேயே சீஸ் செய்வது எப்படி

பீட்சா, சாண்ட்விச், பாஸ்தா எனப் பல உணவுகளிலும் பயன்படுத்தப்படும் சீஸை இனி கடைகளில் மட்டுமே வாங்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பால், எலுமிச்சைச் சாறு போன்ற எளிய பொருள்களை வைத்தே சுவையான ஃபிரெஷ் சீஸைத் தயாரிக்கலாம்.

அதிலும், சமையலுக்குப் புதிதாக இருப்பவர்கள்கூட எளிதாகச் செய்யக்கூடிய இந்தச் செய்முறையில், பால் எப்படிச் சீஸாக மாறுகிறது, எந்தப் பதத்தில் இறக்க வேண்டும், எவ்வளவு நேரம் வடிகட்ட வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டால் போதும். வாருங்கள், வீட்டிலேயே ஃபிரெஷ் சீஸ் தயாரிப்பது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம்.

சீஸ் தயாரிக்கத் தேவையான பொருள்கள்

பால் - 1 லிட்டர்

எலுமிச்சைச் சாறு - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
வீட்டிலேயே சீஸ் தயாரிப்பது எப்படி?
Image Credit : Gemini Ai

வீட்டிலேயே சீஸ் தயாரிப்பது எப்படி?

செய்முறை விளக்கம்

பாலை சூடாக்குதல்

ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். பால் கொதித்துவிடக் கூடாது, லேசாக வெதுவெதுப்பான சூடு வர வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிடவும்.

311
படி 1
Image Credit : Gemini Ai

படி 1

எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்

சூடான பாலில் வினிகர் அல்லது எலுமிச்சை சாறை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கரண்டியால் மெதுவாகக் கிளறவும். சில நிமிடங்களில் பால் வெள்ளைத் திரள்களாகத் திரிந்து, திண்மையான சீஸ் கட்டிகளும், மஞ்சள் நிற நீரும் தனியாகப் பிரியும்.

பால் முழுமையாகத் திரண்டு பிரிவதற்கு 5 - 10 நிமிடங்கள் வரை விடவும். திரள்கள் தனியாகவும், நீர் தனியாகவும் பிரிந்திருக்கிறதா என்பதைப் பார்க்கவும்.

411
படி 2
Image Credit : Gemini Ai

படி 2

துணியில் வடிகட்டவும்

ஒரு வடிகட்டியின் மேல் சுத்தமான மெல்லிய துணியை விரித்து, பால் திரள்களைக் கொட்டவும். நீரை முழுமையாக அகற்றவும்.

511
படி 3
Image Credit : Gemini Ai

படி 3

சீஸ் வடிவம் கொடுத்தல்

கெட்டியான சீஸ் பகுதியை ஒன்றாகச் சேர்த்து, உருண்டையாகவோ அல்லது கட்டியாகவோ அழுத்தி வடிவமைத்துக் கொள்ளவும்.

611
படி 4
Image Credit : Gemini Ai

படி 4

பின்னர் அதைச் சுத்தமான மூடியுள்ள பாத்திரத்தில் வைத்து அல்லது ஃபாயில் பேப்பரால் சுற்றி, 1 முதல் 2 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

711
சுவையான சீஸ் தயார்
Image Credit : Gemini Ai

சுவையான சீஸ் தயார்

அவ்வளவுதான். சுவையான வீட்டுத் தயாரிப்பு ஃபிரெஷ் சீஸ் தயார்.

இந்தச் சீஸை எந்த உணவுகளில் பயன்படுத்தலாம்?

சீஸ் சாண்ட்விச் - காய்கறிகளுடன் சேர்த்துச் செய்யலாம்.

பாஸ்தா- சாஸ் மற்றும் மசாலாவுடன் சேர்க்கலாம்.

சீஸ் எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்?

வீட்டில் தயாரிக்கும் ஃபிரெஷ் சீஸில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். எனவே, அதைச் சுத்தமான மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துப் பயன்படுத்துவது நல்லது. பாதுகாப்பான அணுகுமுறையாக 2–3 நாட்களுக்குள் பயன்படுத்தவும். துர்நாற்றம், வழவழப்பு அல்லது பூஞ்சை ஏற்பட்டால் சாப்பிட வேண்டாம்.

811
மற்றொரு முறை - படி 1
Image Credit : Gemini Ai

மற்றொரு முறை - படி 1

மற்றொரு முறையில் சீஸ் தயாரிப்பது எப்படி?

வடிகட்டி எடுத்த சீஸை மிக்ஸி ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

911
படி 2
Image Credit : Gemini Ai

படி 2

பின்னர், ஒரு பாத்திரத்தில் சீஸ் வடிகட்டிய நீரை ஊற்றி, அதனுடன் சிறிதளவு அகர் அகர் (கடல்பாசி) சேர்த்துக் கொதிக்கவிடவும்.

1011
படி 3
Image Credit : Gemini Ai

படி 3

கலவை நன்றாகக் கொதித்ததும், அரைத்து வைத்துள்ள சீஸைச் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் தொடர்ந்து கிளறவும். கலவை கெட்டியாகி, கொழுகொழுப்பான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

1111
படி 4
Image Credit : Gemini Ai

படி 4

உடனே இதனை ஒரு தட்டில் ஊற்றி ஆறவிடவும். நன்றாக ஆறியதும் ஃபிரிட்ஜில் வைத்து கெட்டியாக்கி, பின்னர் விரும்பிய வடிவில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம். இவ்வாறு வீட்டிலேயே கட்டியாக வெட்டக்கூடிய சீஸைத் தயாரிக்கலாம்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
அலுமினிய பாத்திரத்தில் 'இந்த' 5 உணவுகளை சமைத்தால் ஆபத்து! ஏன் தெரியுமா? முழு விவரம்!
Recommended image2
Soybean Health Benefits: கொண்டைக்கடலையையும் மிஞ்சும் புரோட்டீன்..! இந்த உணவை மிஸ் பண்ணாதீங்க..!
Recommended image3
Poori : சாதா பூரி சாப்பிட்டு போரடிக்குதா? சத்தான கிரீன் பூரி செஞ்சு பாருங்க... செம டேஸ்டா இருக்கும்
Related Stories
Recommended image1
Homemade Sambrani : சாமிக்கு வச்ச பூவை இனி தூக்கி போடாதீங்க.. வீட்டிலேயே மணக்கும் சாம்பிராணி செய்யலாம்!
Recommended image2
Homemade Coconut oil : வீட்டிலேயே ஈஸியாக தேங்காய் எண்ணெய் செய்யலாம்..இதோ எளிய செய்முறை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved