- Home
- Lifestyle
- Homemade Coconut oil : வீட்டிலேயே ஈஸியாக தேங்காய் எண்ணெய் செய்யலாம்..இதோ எளிய செய்முறை
Homemade Coconut oil : வீட்டிலேயே ஈஸியாக தேங்காய் எண்ணெய் செய்யலாம்..இதோ எளிய செய்முறை
Homemade Coconut oil : வீட்டில் இருக்கும் தேங்காயை வைத்து மணம் கமழும் தேங்காய் எண்ணெயை எளிதாக தயாரிக்கலாம். தேங்காய்ப்பால் எடுப்பது முதல் எண்ணெயை பிரித்து சேமிப்பது வரை முழுமையான செய்முறை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

மணம் கமழும் தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை இனி கடையில் வாங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருக்கும் தேங்காயை வைத்து, பெரிய செலவும் இல்லாமல், கலப்படம் பற்றிய கவலையும் இல்லாமல் வாசனையே வீட்டைச் சுற்றி மணக்கச் செய்யும் இயற்கையான முறையில் நாமே எளிதாக தேங்காய் எண்ணெய் தயாரிக்கலாம்.
தேங்காயை அரைத்து பால் எடுத்து, சரியான முறையில் பதப்படுத்தி காய்ச்சினால் போதும். வீட்டிலேயே மணக்கும் தேங்காய் எண்ணெய் தயார். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
வீட்டிலேயே ஈஸியாக செய்வது எப்படி?
தேங்காய்ப்பால் எடுக்கவும்
- முற்றிய தேங்காய்களை உடைத்து, உள்ளே இருக்கும் தேங்காய் சதையை தனியாக எடுத்துக் கொள்ளவும். அதனை நன்றாக சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த தேங்காயில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிழிந்து முதல் தேங்காய்ப்பாலை எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் மீண்டும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து, கிடைக்கும் பாலை பிழிந்து சேகரித்துக் கொள்ளலாம்.
பிரிட்ஜில் வைக்கவும்
பாலை புளிக்க வைக்கவும்
- இறுதியாக, தேங்காய்ப்பாலை மெல்லிய வடிகட்டி அல்லது சுத்தமான துணியின் மூலம் வடிகட்டி, நன்கு சுத்தமான தேங்காய்ப்பாலை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- வடிகட்டிய தேங்காய்ப்பாலை ஒரு சுத்தமான மூடியுள்ள பாத்திரத்தில் ஊற்றி சுமார் 8 மணி நேரம் அறை வெப்பநிலையில் வைக்கவும். இந்த நேரத்தில் பால் இயற்கையாக புளிக்கும்.
- 8 மணி நேரத்துக்குப் பிறகு அந்தப் பாத்திரத்தை சுமார் 2 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும். இதனால் தேங்காய்ப்பாலில் உள்ள கொழுப்பு பகுதி மேலே திரண்டு வர உதவும்.
சூடுபடுத்தவும்
- பிரிட்ஜில் இருந்து எடுத்த தேங்காய்ப்பாலின் மேலே திரண்டிருக்கும் கொழுப்பு பகுதியை மட்டும் தனியாக எடுத்து, இரும்பு வாணலியில் சேர்க்கவும்.
- இதை மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தும்போது, அதிலுள்ள ஈரப்பதம் படிப்படியாக குறைந்து, எண்ணெய் மெதுவாகப் பிரியத் தொடங்கும்.
- தேங்காய் துகள்கள் பொன்னிறம் முதல் லேசான பழுப்பு நிறமாக மாறும் வரை மிதமான தீயில் தொடர்ந்து காய்ச்சவும்.
- எண்ணெய் நன்றாகப் பிரிந்து தெளிவாகத் தெரிந்ததும் அடுப்பை அணைத்து, சிறிது நேரம் ஆறவிடவும்.
- பின்னர் சுத்தமான வடிகட்டி மூலம் எண்ணெயை வடிகட்டி, ஈரப்பதம் இல்லாத சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளவும்.
முக்கியமான கவனம்
- தேங்காய்ப்பாலை புளிக்க வைக்கும் நேரம், சுற்றுப்புற வெப்பநிலையைப் பொறுத்து மாறுபடலாம்.
- தேங்காய்ப்பாலில் துர்நாற்றம், பூஞ்சை அல்லது அசாதாரண நிறம் ஏற்பட்டால் அதை பயன்படுத்த வேண்டாம்.
- எண்ணெய் காய்ச்சும்போது மிதமான தீயை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
- தயாரித்த எண்ணெயை முழுமையாக ஆறவைத்து, ஈரப்பதம் இல்லாத சுத்தமான கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
- இவ்வாறு வீட்டிலேயே தேங்காயை வைத்து மணம் கமழும் தேங்காய் எண்ணெயை தயாரித்து பயன்படுத்தலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

