குளிர்காலத்தில் தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்க.. "இந்த" பிரச்சினை எல்லாம் பறந்து போகும்!
நெய்யில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. எனவே, இதனை நாம் குளிர்காலத்தில் தினமும் சாப்பிட்டவது நல்லது.
ஆஸ்துமா, மூச்சுத் திணறல், சளி, வாயு, அஜீரணம் போன்ற பல பிரச்சனைகள் குளிர்காலத்தில் எழுகின்றன. இந்த காலகட்டத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக உட்கொள்வது உடலுக்கு நல்லதல்ல. ஆனால் இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொண்ட பிறகு நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் பலர் குளிர்காலத்தில் கூட தண்ணீர் குறைவாகவே குடிப்ப்பார்கள். எனவே இன்னும் கவனமாக இருங்கள்.
அன்றாட வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நெய் பழங்காலத்திலிருந்தே ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த நெய்க்கு ஆயுர்வேதத்திலும் பல பயன்கள் உள்ளன. சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். நெய்யும் ஒருவகை சூப்பர் உணவுதான். தினமும் நெய் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மேலும் கடைகளில், கிடைக்கும் நெய்யில் கலப்படம் கலந்திருக்கும். எனவே வீட்டில் நெய் தயாரித்து சாப்பிடுவது நல்லது.
நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில், நெய் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். இதன் விளைவாக, அதிகப்படியான உணவைத் தவிர்க்கலாம். எடையும் கட்டுக்குள் இருக்கும்.
இதையும் படிங்க: Weight Loss : நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா? கட்டுக்கதைகளும் உண்மையும்..
நெய் ஜீரணிப்பது கடினம் என்று பலர் கூறுகிறார்கள். அதனால்தான் பலர் நெய்யில் செய்த உணவை சாப்பிட விரும்புவதில்லை. தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டு வந்தால் செரிமான அமைப்புக்கு நல்லது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் நெய் சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம், வாயு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
இதையும் படிங்க: நெய் ஆரோக்கியத்திற்கு நல்லதா? இல்லையா? இன்று தெரிந்து கொள்வோம்..!!
நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு அல்லது மூட்டு வலிக்கும் நெய் பயனுள்ளதாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D