வெயிட் லாஸ் பண்ண இதுவும் ரொம்ப முக்கியம்.. இது தெரிஞ்சா இனி வேகமா சாப்பிட மாட்டீங்க..
உடல் எடையை குறைக்க விரும்புவோர் உணவை எத்தனை முறை மென்று சாப்பிட வேண்டும் தெரியுமா? இதுகுறித்து நிபுணர்கள் சொன்ன பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
R Madhavan
நடிகர் தனது பிரமிக்க வைக்கும் வெயிட் லாஸ் மூலம் தனது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். ஜிம் அல்லது ரன்னிங் செல்லாமல் தனது உடல்நிலையை எப்படி அவர் குறைத்தார் என்பது குறித்தும் பேசியிருந்தார். மேலும் உடல் எடையை குறைப்பதில் உணவை மென்று சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் என்பதையும், அதன் பின்னணியில் உள்ள விஞ்ஞானம் குறித்தும் மாதவன் பேசியிருந்தார்.
Eating Food
மாதவன் கூறிய படி உணவை நன்றாக மென்று சாப்பிடுவது கலோரிகளை எரிக்க உதவும். என்று நிபுணர்கள் கூறுகின்ற்னார். உடல் பருமன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, உணவை மென்று சாப்பிடுவதால் செரிமானத்தின் போது அதிக கலோரிகளை எரிக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eating Food
உணவை நன்றாக மென்று சாப்பிடுவதால் உணவின் ஊட்டச்சத்துகளை சிறந்த முறையில் உறிஞ்ச உதவுகிறது. உணவை நன்றாக மென்று சாப்பிடும் போது, அது வயிற்றில் உள்ள இரைப்பை சாறுகளை மேலும் நுண்ணிய அளவிற்கு குறைக்க உதவுகிறது. இது ஊட்டச்சத்துக்கள் மற்றும் திரவங்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. தவிர, நன்றாக மென்று சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடலுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
Eating Food
ஆனால் அதே நேரம் வேகமாக சாப்பிடுவதால் அதிகளவு கலோரிகளை எரிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆயுர்வேதத்தின்படி, உணவை மென்று ருசித்து உங்களின் அனைத்து புலன்களையும் உள்ளடக்கி கவனமாக சாப்பிடுவது உங்கள் செரிமானத்தை மேம்படுத்தும், மேலும் இது உங்கள் உணவோடு ஆழமான தொடர்பை ஏற்படுத்த உதவும்.
Eating Food
விழுங்குவதற்கு முன் உங்கள் உணவை குறைந்தது 40 முறை மென்று சாப்பிடுவது உடல் எடையை கணிசமாகக் குறைக்க உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவை 40-50 முறை மென்று சாப்பிடுவது பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் ஒருவர் குறைந்த உணவை உட்கொள்ள முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்...
Eating Food
பொதுவாக உணவை மென்று சாப்பிடுவதால் உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கிறது, இதில் குடலுக்கு ஊட்டமளிக்கும் ஒரு எபிடெலியல் வளர்ச்சி காரணி உள்ளது. நாம் விரைவாக சாப்பிட்டால், செரிக்கப்படாத உணவுத் துகள்கள் குடலில் நொதித்தல் மற்றும் பாக்டீரியா பெருக்கத்திற்கு வழிவகுக்கும்.
பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதங்கள் போன்ற சத்தான விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பது உங்களை முழுமையாகவும் திருப்தியாகவும் உணர உதவும், குறைவான ஆரோக்கியமான விருப்பங்களில் அதிகமாக ஈடுபடுவதற்கான தூண்டுதலைக் குறைக்கும். பசியைத் தடுக்க, நட்ஸ், பழங்கள் மற்றும் தயிர் போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
Eating Food
உங்கள் உணவை சரியாக மென்று சாப்பிடவில்லை என்றாலோ அல்லது மிக விரைவாக சாப்பிடுவது உங்கள் மூளை திருப்திக்கான சமிக்ஞைகளை அனுப்பாது, இதன் விளைவாக நீங்கள் அதிகமாக சாப்பிடுவீர்கள். உணவை மென்று சாப்பிடுவதுடன், உணவை ருசித்து சாப்பிடுவது மனநிறைவுக்கு உதவுவதோடு உங்கள் மூளை மனநிறைவு சமிக்ஞைகளைப் பெறவும் உதவும்