- Home
- உடல்நலம்
- உணவு
- Weight Loss Diet : இது கூட தெரியாம இருக்கீங்களா? எவ்ளோ சாப்பிட்டாலும் எடையை குறைக்கும் '5 உணவுகள்!!
Weight Loss Diet : இது கூட தெரியாம இருக்கீங்களா? எவ்ளோ சாப்பிட்டாலும் எடையை குறைக்கும் '5 உணவுகள்!!
உடல் எடையை கஷ்டமே இல்லாமல் குறைக்க உதவும் ஹெல்தியான 5 உணவுகளின் பட்டியல் இங்கே.

Weight Loss Diet
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பெரும்பாலும் ஜிம், ஒர்க்கவுட் உடற்பயிற்சியில்தான் ஈடுபடுவார்கள். இவைதான் உடல் எடையை குறைக்க உதவும் என்றும் நினைப்பார்கள். ஆனால் சில ஹெல்தியான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் கூட உடல் எடையை ஈசியாகவும், ஆரோக்கியமாகவும் குறைத்துவிடலாம் தெரியுமா? இந்தப் பதிவில் உடல் எடையை குறைக்க உதவும் ஹெல்தியான 5 இந்திய உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
புரத தோசை
ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலை மாவுடன், 1 பச்சை மிளகாய், 2 சின்ன வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லி இலைகள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், சுவைக்கு ஏற்ப உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பிறகு தோசை கல்லில் தோசை போல் ஊற்றி சுட்டு சாப்பிடவும்.
சாலட்
ஒரு பாத்திரத்தில் 1 கப் வேக வைத்த முளைகட்டிய பயிர் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 1 சின்ன வெள்ளரிக்காய், 1 தக்காளி, 1 பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, மிளகு தூள், சிறிதளவு உப்பும் சேர்க்கவும். கடைசியாக கொத்தமல்லி இலையை நறுக்கிய தூவி பின் சாப்பிடலாம்.
கிச்சடி
இதற்கு உடைத்த கோதுமையுடன் கேரட், பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகளை சேர்த்து கிச்சடி போல செய்து சாப்பிடலாம். இல்லையென்றால் தாலியா கஞ்சி செய்தும் சாப்பிடலாம்.
தினை உப்புமா
தினை உப்புமா செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கிய ஒரு வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் அதனுடன் ஒரு கப் காய்கறி கலவையை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு மஞ்சள் தூளும் சேர்ந்து 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். இப்போது அதில் ஊற வைத்த 1/2 கப் திணை அரிசியை சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும். அவ்வளவுதான் திணை உப்புமா ரெடி!!
சன்னா சாட்
ஒரு கிண்ணத்தில் 1 கப் வேக வைத்த கொண்டக்கடலையுடன் பொடியாக நறுக்கிய 1 வெங்காயம், 1 தக்காளி, 1 பச்சை மிளகாய், 1 வெள்ளரிக்காய், 1/2 ஸ்பூன் வறுத்த சீரக பொடி, 2 சிட்டிகை சாட் மசாலா மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலையை தூவி சாப்பிடவும்.