இதய ஆரோக்கியத்திற்கு இந்த 4 உணகளை தினமும் சாப்பிடுங்க.. பல நன்மைகள் உண்டு!
நம்முடைய இதய ஆரோக்கியம் மேம்பட 4 விஷயங்களை தொடர்ந்து பின்பற்றினால் போதும்.
சரியான தூக்கமின்மை, மோசமான உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நம்முடைய உடல் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. உடலுக்கு சரியான கவனம் கொடுக்காம இருக்கும்போது இதய ஆரோக்கியத்தில் மோசமான விளைவு உண்டாகிறது. நாம் வாழ உள்ளுறுப்புகளின் ஆரோக்கியம் முக்கியமாக கருதப்படுகிறது. இதயம் ஆரோக்கியமாக இருக்க சில அடிப்படையான விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
சில உணவுகள் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகின்றன. உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. கீரைகள், பச்சை காய்கறிகள் முதல் உலர்ந்த பழங்கள் இந்த பட்டியலில் அடங்கும். இவற்றை உண்பதால் இதயத்தை ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
பெரிய நெல்லிக்காய்
பெரிய நெல்லிக்காயை ஜூஸாக குடிக்கலாம் அல்லது நேரடியாக உண்ணலாம். இவை உங்களுடைய இரத்த குழாயில் இருக்கும் வீக்கத்தையும் குறைக்கும், இரத்த குழாயில் படிந்துள்ள கொலஸ்ட்ராலையும் நீக்கும். அடிக்கடி பெரிய நெல்லிக்காய் எடுத்துக் கொள்வது இதயத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இவற்றை காலை உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். நார்ச்சத்து நிறைந்த இவை செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும்.
தானியங்கள்
குயினோவா உண்பது நல்லது. தானியங்களில் காணப்படும் புரதம் நம்முடைய உடலுக்கு மிகவும் நல்லது. தானியங்களில் உள்ள அமினோ அமிலங்கள், நம் இதயத்தை பராமரிக்க உதவுகின்றன. இதய தசைகளை வலுப்படுத்துகின்றன. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. இதய நோய் ஏற்படுத்தும் அபாயத்தைக் குறைக்கின்றன. கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
கீரைகள், காய்கறிகள்..
கீரையில் பொட்டாசியம் கால்சியம் போன்ற கணினி சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன இது இதயத்தை பலப்படுத்துகிறது காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. காய்கறிகளில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதயத்தை பலப்படுத்துகின்றன.
இதையும் படிங்க: மோர்.. இளநீர் உடல் சூட்டை தணிக்கும்.. ஆனா கோடையில் இந்த விஷயங்களும் பண்ணனும்!!
உலர் பழங்கள்
உலர் பழங்களை பொருத்தவரை, பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள் போன்றவை எடுத்து கொள்ளலாம். இதில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன. அவை கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றன.
ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அவருடைய இதை ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ரத்த அழுத்தம் குறைந்தால் பாதி பிரச்சனைகள் குறைந்துவிடும். அதனை சீராக வைத்து கொள்ளுங்கள். மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகளை கட்டாயம் உண்ண வேண்டும்.
இதையும் படிங்க: காலையில் இந்த விஷயங்களை பார்க்காதீங்க ப்ளீஸ்!