இயற்கையாகவே கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் பழங்கள்.. என்னென்ன தெரியுமா?
இயற்கையாகவே கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் பழங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
கொலஸ்ட்ரால் என்பது நமது இரத்தத்தில் காணப்படும் மெழுகு போன்ற ஒரு பொருளாகும், இது ஹார்மோன்கள் மற்றும் செரிமான நொதிகளை உருவாக்குவதற்கு அவசியம். ஆனால் கொலஸ்ட்ராலின் அளவு இயல்பை மீறும் போது, இதயத்திற்கு இரத்த விநியோகத்தை சீர்குலைத்து, மாரடைப்பு ஏற்படலாம். அதனால்தான் மக்கள் தங்கள் கொலஸ்ட்ராலை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
இன்றைய காலத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் மக்கள் போராடி வருகின்றனர். சில பழங்களை சரியான அளவில் உட்கொண்டால், அதிக கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் பழங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
ஆரஞ்சு - வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் இது அதிக கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) மற்றும் மொத்த கொழுப்பைக் குறைக்கும் என்று இதுவரை பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரஞ்சு சாறு கெட்ட கொழுப்பு செறிவு அபாயத்தை 23 சதவீதம் குறைக்கிறது. இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்.
உலர்ந்த பிளம்ஸ் - உலர்ந்த பிளம்ஸ் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் சுமார் 50 கிராம் உலர் பிளம்ஸ் சாப்பிடுவது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இது உடலில் வீக்கத்தைக் குறைத்து, ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டை அதிகரிக்கிறது.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்ற நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். எனவே அதிக கொலஸ்ட்ரால் நோயாளிகளும் இந்த விதியை பின்பற்ற வேண்டும். ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து பெக்டின் நிறைந்துள்ளது, இது கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குவதோடு செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.
அவகேடோ- அவகேடோ பல சத்துக்கள் கொண்ட பழமாக கருதப்படுகிறது. மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாகக் கருதப்படும் இந்தப் பழம் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.
ஸ்ட்ராபெர்ரி - இதனை உட்கொள்வதன் மூலம் அதிக கொலஸ்ட்ராலை குறைக்கலாம். ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளாக்பெர்ரிகள் மற்றும் ப்ளூபெர்ரிகள் உள்ளிட்ட பல பெர்ரிகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளது. சீசனுக்கு ஏற்ப பெர்ரிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.