MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Mutton kulambu: நாவில் எச்சில் ஊறவைக்கும் காரசாரமான மட்டன் குழம்பு; தீபாவளி ஸ்பெஷல் மசாலா ரெசிபி!

Mutton kulambu: நாவில் எச்சில் ஊறவைக்கும் காரசாரமான மட்டன் குழம்பு; தீபாவளி ஸ்பெஷல் மசாலா ரெசிபி!

Mutton kulambu: தீபாவளிக்கு இட்லி, சாதத்திற்கு ஏற்ற காரசாரமான மட்டன் குழம்பு குக்கரில் சுலபமாக செய்வது எப்படி? பக்குவமான செய்முறை விளக்கம் மற்றும் எளிய டிப்ஸ் பற்றி பார்ப்போம்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Nov 07 2026, 08:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
காரசாரமான மட்டன் குழம்பு குக்கரில் சுலபமாக செய்வது எப்படி?
Image Credit : Grok AI Image

காரசாரமான மட்டன் குழம்பு குக்கரில் சுலபமாக செய்வது எப்படி?

தீபாவளிப் பண்டிகை என்றாலே பெரும்பாலான மக்களின் வீடுகளில் காலையிலேயே மட்டன் அல்லது நாட்டுக் கோழிக்குழம்பு வாசனை ஊரையே தூக்கும். இந்த ஆண்டு தீபாவளிக்கு உங்கள் வீட்டில் மட்டன் சமைக்கத் திட்டமிட்டிருந்தால், வழக்கமாகச் செய்யும் ஒரே மாதிரியான சுவையைத் தவிர்த்து, இந்த விசேஷ பக்குவத்தில் காரசாரமாகச் செய்து பார்க்கலாம். சுடச்சுட இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் பிசைந்து சாப்பிட அலாதியான சுவையைத் தரும் இந்த மட்டன் குழம்பை மிக எளிய முறையில் குக்கரிலேயே பக்குவமாக சமைக்க முடியும். அதன் முழுமையான செய்முறை விளக்கம் பற்றி பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தேவையான பொருட்கள்
Image Credit : Social Media

தேவையான பொருட்கள்

ஆட்டிறைச்சி (மட்டன்) ½ கிலோ

பெரிய வெங்காயம் 2

தக்காளி 2

மிளகாய்த்தூள் ½ டீஸ்பூன்

மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்

மிளகுத்தூள் 1 டீஸ்பூன் + ¼ டீஸ்பூன்

மல்லித்தூள் 2 டீஸ்பூன்

மட்டன் மசாலா தூள் 1 டீஸ்பூன்

நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை 3 கொத்து

கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி

உப்பு தேவையான அளவு

35
மசாலா அரைக்க தேவையானவை
Image Credit : AI Generated Image

மசாலா அரைக்க தேவையானவை

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

இலவங்கப்பட்டை - 2 இன்ச்

கிராம்பு - 6

சீரகம் - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

பூண்டு - 5 முதல் 6 பல்

இஞ்சி - 2 இன்ச்

சின்ன வெங்காயம் - 15 முதல் 20

தேங்காய் - ¼ மூடி

கறிவேப்பிலை - 1 கொத்து

45
செய்முறை விளக்கம் - 1
Image Credit : Social Media

செய்முறை விளக்கம் - 1

ஆட்டிறைச்சியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 2 முறை அலசிய பின், கடைசியாகச் சிறிது மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்துச் சுத்தமாகக் கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும். பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பூண்டைத் தோல் உரித்து, வெங்காயத்தின் மேற்பகுதியில் இருக்கும் கருப்பு நிற பூஞ்சையைத் தண்ணீரில் சுத்தமாகக் கழுவிவிட்டுப் பொடிப்பொடியாக நறுக்கவும். நன்கு பழுத்த தக்காளியைக் காம்பு நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை மண் இல்லாமல் கழுவி, தோல் நீக்கிப் பொடியாக நறுக்கவும். கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைச் சுத்தமாகக் கழுவிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காயைத் துருவியோ அல்லது பொடியாக நறுக்கியோ தயாராக வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சீரகம், சோம்பு, தோல் உரித்த சின்ன வெங்காயம், பூண்டு, நறுக்கிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். சின்ன வெங்காயம் கண்ணாடிப் பதம் வரும் வரை நன்கு வதக்கவும். பின்னர் அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அடுப்பை அணைத்து ஆறவிடவும். கலவை நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசான விழுதாக அரைத்துத் தனியாக வைக்கவும்.

55
செய்முறை விளக்கம் - 2
Image Credit : Gemini AI Generated

செய்முறை விளக்கம் - 2

குக்கரை அடுப்பில் வைத்துச் சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றிக் காயவிடவும். அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் & கறிவேப்பிலை சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும் (வெங்காயம் அதிகம் சேர்ப்பது குழம்பிற்கு நல்ல அடர்த்தியைக் கொடுக்கும்). வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்க வேண்டும். தக்காளி குழைந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகுத்தூள், மல்லித்தூள் & மட்டன் மசாலா தூள் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்து வதக்கி, சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனையும் சேர்த்துச் சில நிமிடங்களுக்கு வேகவிடவும். இப்போது தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, மிதமான தீயில் சரியாக 20 நிமிடங்கள் வேகவிடவும் (விசில் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளத் தேவையில்லை).

20 நிமிடங்களுக்குப் பிறகு குக்கரின் பிரஷர் முழுமையாக அடங்கியதும் மூடியைத் திறந்து, ஆட்டிறைச்சி வெந்து மென்மையாகிவிட்டதா எனச் சரிபார்க்கவும். வேகவில்லை என்றால் மீண்டும் சிறிது நேரம் வேகவிடலாம். பின்னர் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, கறிவேப்பிலை மற்றும் ¼ டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி இறக்கினால், கமகமக்கும் சுவையில் தீபாவளி ஸ்பெஷல் மட்டன் குழம்பு தயார். இந்தக் காரசாரமான மட்டன் குழம்பைச் சுடச்சுட இட்லி, மொறுமொறு தோசை அல்லது சாதத்துடன் பரிமாறினால் தீபாவளி விருந்து அலாதியான சுவையுடன் அமையும்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 
2nd ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(2.4 ov)4/1
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Banana Malpua : வாழைப்பழத்தை வைத்து இப்படி ஒரு ஸ்வீட் செய்ய முடியுமா? அசத்தலான வாழைப்பழ மால்புவா ரெசிபி!
Recommended image2
Rasmalai : தீபாவளிக்கு வீட்டிலேயே ர‌ச‌ம‌லாய் செய்வது எப்படி? வாயில் வைத்ததும் கரையும் இந்த ஸ்வீட் ரெசிபி!
Recommended image3
karuppu kavuni Arisi murukku : கருப்பு கவுனி அரிசி முறுக்கு.. வித்தியாசமான சுவையில் மொறுமொறுப்பான பாரம்பரிய ஸ்நாக்ஸ்!
Related Stories
Recommended image1
Paruppu poli : வாயில் வைத்ததும் கரையும் பருப்பு போளி.. பண்டிகை ஸ்பெஷல் இனிப்பை வீட்டிலேயே செய்வது எப்படி?
Recommended image2
Rasmalai : தீபாவளிக்கு வீட்டிலேயே ர‌ச‌ம‌லாய் செய்வது எப்படி? வாயில் வைத்ததும் கரையும் இந்த ஸ்வீட் ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved