MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Paruppu poli : வாயில் வைத்ததும் கரையும் பருப்பு போளி.. பண்டிகை ஸ்பெஷல் இனிப்பை வீட்டிலேயே செய்வது எப்படி?

Paruppu poli : வாயில் வைத்ததும் கரையும் பருப்பு போளி.. பண்டிகை ஸ்பெஷல் இனிப்பை வீட்டிலேயே செய்வது எப்படி?

Paruppu poli : பண்டிகை நாட்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பாரம்பரிய பருப்பு போளியை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். கடலைப்பருப்பு, வெல்லம், ஏலக்காய் மணம் நிறைந்த பூர்ணம், மென்மையான மாவு கொண்டு சுவையான போளி செய்வது எப்படி? முழு செய்முறை இதோ.

3 Min read
Author : Vishnupriya
Published : Nov 06 2026, 05:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
பருப்பு போளி
Image Credit : Gemini Ai

பருப்பு போளி

பண்டிகை நாட்கள் என்றாலே வீட்டில் மணக்கும் பாரம்பரிய இனிப்புகளுக்கு தனி இடம் உண்டு. அதிலும், மெல்லிய மாவுக்குள் இனிப்பான கடலைப்பருப்பு பூர்ணத்தை வைத்து, நெய் மணக்க சுட்டெடுக்கும் பருப்பு போளியின் சுவையே தனி! கடைகளில் வாங்கும் போளியை விட வீட்டிலேயே சுத்தமாகவும், விருப்பமான இனிப்புடனும் தயாரித்து சாப்பிடலாம்.

வெல்லத்தின் இனிப்பு, ஏலக்காயின் மணம், கடலைப்பருப்பின் சுவை என ஒவ்வொரு கடியிலும் மனதை மயக்கும் இந்த பருப்பு போளியை தீபாவளி, பொங்கல், பண்டிகை நாட்கள் மட்டுமின்றி மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பாரம்பரிய இனிப்பை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
பருப்பு போளி செய்ய தேவையான பொருட்கள்
Image Credit : Gemini Ai

பருப்பு போளி செய்ய தேவையான பொருட்கள்

மேல் மாவு தயாரிக்க

  • மைதா மாவு - 2 கப் (அல்லது கோதுமை மாவு)
  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  • உப்பு - 1\4 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் - 3 முதல் 4 தேக்கரண்டி
  • தண்ணீர் - தேவையான அளவு


பூர்ணம் தயாரிக்க

  • கடலைப்பருப்பு - 1\2 கப்
  • பொடித்த வெல்லம் - 1\2 கப்
  • ஏலக்காய் தூள் - 1\4 தேக்கரண்டி
  • நெய் - 2 தேக்கரண்டி
  • தேங்காய்த் துருவல்
  • தண்ணீர் - பருப்பு வேக வைக்க தேவையான அளவு
39
பருப்பு போளி செய்முறை - படி 1
Image Credit : Gemini Ai

பருப்பு போளி செய்முறை - படி 1

மேல் மாவு தயாரித்தல்

ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, மஞ்சள் தூள், உப்பு , நல்லெண்ணெய் சேர்த்து சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவை விட மென்மையாக பிசையவும்.

மாவு மென்மையாகவும், கைகளில் ஒட்டாமல் இழுவைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். இறுதியாக மாவை மூடி வைத்து குறைந்தது 1 முதல் 2 மணி நேரம் ஊற விடவும். இதனால் போளி எளிதாக விரியும். சுடும்போது மென்மையாகவும் இருக்கும்.

49
படி 2
Image Credit : Gemini Ai

படி 2

கடலைப்பருப்பு வேக வைத்தல்

கடலைப்பருப்பை நன்றாக கழுவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பருப்பு நன்றாக வெந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் குழைந்து போகாமல் பார்த்துக்கொள்ளவும். வெந்த பருப்பில் உள்ள தண்ணீரை வடித்து, பருப்பை ஆற விடவும்.

வேக வைத்த கடலைப்பருப்பை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக இல்லாமல் மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

59
படி 3
Image Credit : Gemini Ai

படி 3

பூரணம் தயாரித்தல்

ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் கொரகொரப்பாக அதில் அரைத்த கடலைப்பருப்பு மற்றும் துருவிய வெல்லம் சேர்த்து சேர்த்து மிதமான தீயில் கிளறவும். இறுதியாக தேங்காய்த் துருவல், ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும். பூரணம் ஆறியதும் சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

69
படி 4
Image Credit : Gemini Ai

படி 4

போளி தட்டுதல்

  • ஊற வைத்த போளி மாவிலிருந்து சிறிய உருண்டை எடுத்து, வாழை இலை அல்லது எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் தாளில் வைக்கவும்.
  • கைகளில் சிறிது எண்ணெய் தடவி மாவை மெதுவாக தட்டவும். அதன் நடுவில் ஒரு பூர்ண உருண்டையை வைத்து, மாவை சுற்றிலும் மூடி உருண்டையாக செய்யவும்.
  • பின்னர் மெதுவாக அழுத்தி மெல்லிய போளியாக தட்டவும். பூர்ணம் வெளியே வராமல் கவனமாக தட்ட வேண்டும்.
79
படி 5
Image Credit : Gemini Ai

படி 5

பருப்பு போளி சுடுதல்

சூடான தோசைக்கல்லில் தட்டிய போளியை மெதுவாக எடுத்து போடவும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுடவும். சுடும்போது சிறிது நெய் தடவி எடுத்தால் சுவையும் மணமும் அதிகரிக்கும். இதேபோல் அனைத்து போளிகளையும் தயாரித்து எடுக்கவும்.

89
சுவையான பருப்பு போளி தயாரிக்க சில குறிப்புகள்
Image Credit : Gemini Ai

சுவையான பருப்பு போளி தயாரிக்க சில குறிப்புகள்

  • மேல் மாவை மென்மையாக பிசைந்து போதுமான நேரம் ஊற விடுவது முக்கியம்.
  • கடலைப்பருப்பை அதிகமாக வேக வைத்து குழைய விடக்கூடாது.
  • பூரணம் தண்ணீராக இருந்தால் போளி தட்டும்போது வெளியே வரும். எனவே நன்றாக கெட்டியாக கிளற வேண்டும்.
  • மாவை விட பூர்ணம் சற்று அதிகமாக வைத்தால் போளி சுவையாக இருக்கும்.
  • போளியை கைகளால் மெதுவாக தட்டுவது சிறந்தது. விரும்பினால் உருட்டுக்கட்டையால் மெதுவாக தேய்க்கலாம்.
  • மைதாவுக்கு பதிலாக கோதுமை மாவு பயன்படுத்தியும் தயாரிக்கலாம். சுவை மற்றும் அமைப்பில் சிறிய மாற்றம் இருக்கும்.
99
பருப்பு போளி எதனுடன் சாப்பிடலாம்?
Image Credit : Gemini Ai

பருப்பு போளி எதனுடன் சாப்பிடலாம்?

சூடான பருப்பு போளியின் மீது சிறிது நெய் தடவி அப்படியே சாப்பிடலாம். சிலர் பால் அல்லது தேங்காய்ப்பாலுடன் சேர்த்தும் விரும்பி சாப்பிடுவார்கள்.

வீட்டில் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தயாரிக்க ஏற்ற இந்த பாரம்பரிய இனிப்பு, குழந்தைகளின் மாலை நேர சிற்றுண்டியாகவும் சிறப்பாக இருக்கும். இனிப்பும், நெய் மணமும் நிறைந்த பாரம்பரிய பருப்பு போளியை வீட்டிலேயே செய்து குடும்பத்தினருடன் சுவைத்து மகிழுங்கள்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
karuppu kavuni Arisi murukku : கருப்பு கவுனி அரிசி முறுக்கு.. வித்தியாசமான சுவையில் மொறுமொறுப்பான பாரம்பரிய ஸ்நாக்ஸ்!
Recommended image2
Leftover Food Recipes: மீந்து போன சாதத்தில் சப்பாத்தி.! மாவே இல்லாமல் கட்லெட்.! பண்டிகை காலத்தில் உணவை வீணாக்காமல் பயன்படுத்த சூப்பர் ஐடியாக்கள்.!
Recommended image3
Joint Pain: மூட்டுவலி, கழுத்துவலி, முதுகுவலி, குதிகால் வலி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? 40 வயதுக்கு மேல் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Related Stories
Recommended image1
Porivilangai Urundai : பாட்டி காலத்து பொரிவிளங்காய் உருண்டை.. ஒரு முறை செய்தால் பல நாட்கள் சுவைக்கலாம்!
Recommended image2
Tandoori Egg : ஹோட்டல் ஸ்டைல் முட்டை தந்தூரி .. சுவை அள்ளும் ஈஸி ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved