MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Coffee Without Coffee Powder: காபி பவுடர் இல்லாம காபி குடிக்கணுமா? இந்த சீக்ரெட்டை ட்ரை பண்ணிப் பாருங்க!

Coffee Without Coffee Powder: காபி பவுடர் இல்லாம காபி குடிக்கணுமா? இந்த சீக்ரெட்டை ட்ரை பண்ணிப் பாருங்க!

Coffee Without Coffee Powder: காபி பவுடர் இல்லாம காபி குடிக்கணுமா? கருப்பு அல்லது வெள்ளை சுண்டலை வறுத்து பொடியாக்கி, பால், நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தயாரிக்கும் எளிய செய்முறையை தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 22 2026, 11:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காபி பவுடர் இல்லாம காபி குடிக்கணுமா?
Image Credit : pinterest

காபி பவுடர் இல்லாம காபி குடிக்கணுமா?

காபி பவுடரே இல்லாமல் காபியா? கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? காலையில் எழுந்ததும் சூடாக ஒரு கப் காபி குடிக்காமல் நாளே தொடங்காது என்பவர்களுக்கு இந்த வித்தியாசமான ஐடியா பிடிக்கலாம்.

வீட்டில் கருப்பு சுண்டல் அல்லது வெள்ளை சுண்டல் இருந்தாலே போதும். அதை நன்றாக வறுத்து, பொடியாக அரைத்து, பாலுடன் சேர்த்து ஒரு சூடான பானமாக தயாரிக்கலாம். நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்தால் சுவையும் மணமும் இன்னும் வித்தியாசமாக இருக்கும். காபி பவுடர் தீர்ந்துபோன நேரத்தில் ட்ரை செய்யக்கூடிய இந்த சுண்டல் பானம் எப்படி செய்வது? என்று பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தேவையான பொருட்கள்
Image Credit : pinterest

தேவையான பொருட்கள்

  • கருப்பு சுண்டல் அல்லது வெள்ளை சுண்டல் - 1 கப்
  • பால் - 1 கப்
  • தண்ணீர் - 1/4 முதல் 1/2 கப்
  • சர்க்கரை - நாட்டு சர்க்கரை - பனங்கற்கண்டு - தேவையான அளவு
  • ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)

சுண்டல் காபி பவுடர் செய்வது எப்படி?

முதலில் உலர்ந்த கருப்பு அல்லது வெள்ளை சுண்டலை எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் நன்றாக வறுக்கவும். சுண்டல் முழுவதும் வறுபட்டு நல்ல வாசனை வர வேண்டும்.

வறுத்த சுண்டலை முழுமையாக ஆறவைத்த பிறகு மிக்சியில் போட்டு முடிந்தவரை நைசான பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர் சல்லடையில் சலித்தால் இன்னும் மென்மையான பொடி கிடைக்கும். இதை ஈரமில்லாத காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளலாம்.

34
சுண்டல் காபி செய்வது எப்படி?
Image Credit : pinterest

சுண்டல் காபி செய்வது எப்படி?

  • ஒரு பாத்திரத்தில் 1 கப் பால் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடாக்குங்கள். அதில் 1 முதல் 2 டீஸ்பூன் வறுத்த சுண்டல் பொடியை சேர்த்து கட்டி விழாமல் நன்றாகக் கலக்கவும்.
  • குறைந்த தீயில் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு, உங்களுக்கு விருப்பமான அளவு சர்க்கரை, நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்க்கலாம். விரும்பினால் சிறிதளவு ஏலக்காய் தூளும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • இறுதியாக வடிகட்டி சூடாகப் பரிமாறுங்கள். வறுத்த சுண்டலின் மணத்துடன் கிடைக்கும் இந்த பானம் வழக்கமான காபியிலிருந்த roasted, nutty flavour கொண்டிருக்கும்.

முக்கிய குறிப்பு: இது காபி கொட்டைகளால் தயாரிக்கப்படும் வழக்கமான காபி அல்ல. எனவே காபியின் டேஸ்ட் அப்படியே இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. வறுத்த சுண்டலால் காபியை நினைவூட்டக்கூடிய வறுத்த மணமும் சுவையும் கிடைக்கலாம். காபி சேர்க்காததால் இயற்கையாக காபியில் இருக்கும் caffeine இதில் இருக்காது.

44
சத்துக்கள்
Image Credit : pinterest

சத்துக்கள்

கருப்பு அல்லது வெள்ளை சுண்டலை வறுத்துப் பொடியாக்கி தயாரிக்கும் இந்த பானத்தில், சுண்டலில் இயற்கையாக உள்ள புரதம், நார்ச்சத்து, தாதுக்கள் போன்ற சத்துகள் கிடைக்கும்.

இதில் பால் சேர்த்துக் குடிக்கும்போது புரதம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் B12 போன்ற சத்துகளும் கூடுதலாகக் கிடைக்கும். நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்ப்பது இனிப்பையும் கலோரியையும் அதிகரிக்கும் என்பதால் அளவாகப் பயன்படுத்துவது நல்லது.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vegetarian Fried Chicken : சிக்கனே இல்லாமல் சிக்கன் மாதிரி சுவை! இந்த ஒரு பொருளில் செய்தால் செம கிரிஸ்பி!
Recommended image2
Andhra Spicy Chicken: சண்டே ஸ்பெஷல் ! ஆந்திரா ஸ்பைசி சிக்கன் செய்வது எப்படி?
Recommended image3
இயற்கையின் அமிர்தம்: கற்றாழையின் வியக்கத்தக்க மருத்துவ அதிசயங்கள்!
Related Stories
Recommended image1
Coffee Powder : ஒரு கப் காபி தூளை பிரிட்ஜில் வைத்தால் நடக்கும் மேஜிக்... இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே...!
Recommended image2
Coffee Price: காபி பிரியர்களுக்கு குட் நியூஸ்! காபிக்கொட்டை விலை 35% வரை சரிவு, இனி விலை என்ன ஆகும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved