- Home
- Lifestyle
- Coffee Powder : ஒரு கப் காபி தூளை பிரிட்ஜில் வைத்தால் நடக்கும் மேஜிக்... இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே...!
Coffee Powder : ஒரு கப் காபி தூளை பிரிட்ஜில் வைத்தால் நடக்கும் மேஜிக்... இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே...!
Coffee Powder Hacks : உங்கள் வீட்டில் காபி தூள் இருக்கிறதா? அதை எங்கே வைக்கிறீர்கள்? பயன்படுத்திய காபி தூளை பிரிட்ஜில் வைத்தால் நடக்கும் மேஜிக் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Coffee Powder Hacks
நம்ம ஊரில் பலருக்கும் காலையில் காபி குடித்தால்தான் அன்றைய நாளே தொடங்கும். காபி தூள் பிரெஷ்ஷாக இருக்க வேண்டும் எனப் பலரும் அதை பிரிட்ஜில் வைப்பார்கள். இன்ஸ்டன்ட் காபி பிடிக்காதவர்கள், பில்டர் காபி போட்டுவிட்டு மீதமுள்ள சக்கையை குப்பையில் வீசுவது வழக்கம். ஆனால், குப்பையில் வீசும் அந்த காபி சக்கையை வைத்து வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும். பயன்படுத்திய காபி தூளை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் பல நன்மைகள் கிடைக்கும். அது என்னவென்று பார்க்கலாம்.
பிரிட்ஜில் காபி தூளை ஏன் வைக்க வேண்டும்?
நமது பிரிட்ஜில் வெங்காயம், பூண்டு சேர்த்த உணவுகள் மற்றும் பலவிதமான பொருட்களை வைப்பதால் சில நேரங்களில் ஒருவித துர்நாற்றம் வீசும். காபிக்கு இயற்கையாகவே நல்ல நறுமணம் உண்டு. காபி தூளில் உள்ள துகள்கள் காற்றில் உள்ள துர்நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களைத் தன்னுள் இழுத்துக்கொள்ளும். பிரிட்ஜில் உள்ள கெட்ட வாசனையை இது முழுமையாக நீக்காவிட்டாலும், பிரிட்ஜை எப்போதும் பிரெஷ்ஷாகவும் நல்ல நறுமணத்துடனும் வைத்திருக்க இது பெரிதும் உதவுகிறது. டிரை பண்ணி பாருங்கள்.
பிரிட்ஜில் காபி தூளை எப்படிப் பயன்படுத்துவது?
காபி போட்ட பிறகு மீதமுள்ள சக்கையை ஒரு தட்டில் பரப்பி நன்றாகக் காயவைக்க வேண்டும். ஈரம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். நன்றாகக் காய்ந்த பிறகு, 2 முதல் 4 ஸ்பூன் காபி தூளை ஒரு சிறிய திறந்த கிண்ணம் அல்லது கண்ணாடி பாட்டிலில் போடவும். இந்தக் கிண்ணத்தை மூடாமல் பிரிட்ஜின் ஒரு ஓரத்தில் வைக்க வேண்டும். சில வாரங்களுக்கு ஒருமுறையோ அல்லது அந்தத் தூள் ஈரமாக மாறும்போதோ, பழையதை மாற்றிவிட்டுப் புதிய காபி தூளை வைக்க வேண்டும். பில்டர் காபி தூள் இல்லையென்றால், இன்ஸ்டன்ட் காபி தூளைக் கூட ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.
மீதமுள்ள காபி தூளின் பிற பயன்கள்:
செடிகளுக்கு இயற்கை உரம்: காபி தூளில் செடிகளுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன. வீட்டில் வளர்க்கும் செடிகளின் தொட்டியில் இதைப் போட்டால் செடிகள் நன்றாக வளரும்.
பாத்திரங்களைத் தேய்க்க: காபி தூள் சற்று சொரசொரப்பாக இருப்பதால், சமையல் பாத்திரங்கள் மற்றும் கிரில்களில் உள்ள கடினமான எண்ணெய் பிசுக்கைப் போக்க ஸ்க்ரப்பராகப் பயன்படுத்தலாம்.
டஸ்ட்பின் வாசனையைக் குறைக்க: குப்பைத் தொட்டியின் அடியில் சிறிது காபி தூளைத் தூவினால், குப்பையால் வரும் துர்நாற்றம் குறையும்.
எறும்புகளை விரட்ட: வீட்டுக்குள் எறும்புகள் வராமல் தடுக்க, கதவு, பால்கனி அல்லது ஜன்னல் ஓரங்களில் காபி தூளைத் தூவலாம்.
இனிமேல் காபி தூளை வீணாகக் குப்பையில் வீசாமல், உங்கள் வீட்டுத் தேவைகளுக்கு இப்படிப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

