MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Black Coffee: எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஹாட் டிப்ஸ்! பிளாக் காபி குடிக்க வேண்டிய பெஸ்ட் டைம் இதுதான்!

Black Coffee: எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஹாட் டிப்ஸ்! பிளாக் காபி குடிக்க வேண்டிய பெஸ்ட் டைம் இதுதான்!

பிளாக் காபி குடிச்சா நிஜமாவே எடை குறையுமா? அதை சரியான நேரத்துல, சரியான முறையில குடிக்கணும். பால், சர்க்கரை போட்ட காபிக்கு குட்பை சொல்லிட்டு, பிளாக் காபியை எப்படி குடிக்கலாம்னு பார்க்கலாம் வாங்க.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 24 2026, 03:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சந்தோஷத்துடன் பருகுவோம் மக்களே

சந்தோஷத்துடன் பருகுவோம் மக்களே

பிளாக் காபியில் உடல் எடையைக் குறைத்து, தொப்பையைக் கட்டுப்படுத்த உதவும் பல சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள 'குளோரோஜெனிக் அமிலம்' (chlorogenic acid) மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்பை வேகமாக கரைக்க உதவுகிறது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஏன் குடிக்கனும் பிளாக் காஃபி?

ஏன் குடிக்கனும் பிளாக் காஃபி?

பிளாக் காபியில் காஃபின், தியோபுரோமின், தியோஃபிலின் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் போன்றவை உள்ளன. இவை உடல் பருமனை குறைக்க உதவுகின்றன. ஆனால், நீங்கள் பால் சேர்த்து காபி குடிக்கும்போது, இந்த சத்துக்களின் அளவு குறைந்துவிடும். அதனால்தான் நிபுணர்கள் பிளாக் காபி குடிக்கப் பரிந்துரைக்கிறார்கள்.

Related Articles

Related image1
Health tips: கோடையில் செரிமானம் பலவீனமாவது ஏன்? இதோ 5 எளிய ஆயுர்வேத தீர்வுகள்!
Related image2
Hair Health: உங்க தலைமுடி பலவீனமாக இதுதான் காரணமா? நீங்கள் தினமும் செய்யும் 6 தவறுகள்!
36
உங்கள் பசியைக் கட்டுப்படுத்தும்

உங்கள் பசியைக் கட்டுப்படுத்தும்

அதுமட்டுமில்லாமல், பிளாக் காபி உங்கள் பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது தேவையில்லாத நேரத்தில் ஏற்படும் உணவு ஆசையைக் (cravings) குறைக்கிறது. இதனால், நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
46
 எந்த நேரத்தில் குடித்தால் அதிக நன்மை?

எந்த நேரத்தில் குடித்தால் அதிக நன்மை?

சரி, பிளாக் காபியை எந்த நேரத்தில் குடித்தால் அதிக நன்மை கிடைக்கும்? உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு குடிப்பதுதான் மிகவும் நல்லது. இது உங்கள் எனர்ஜி லெவலை அதிகரித்து, அதிக நேரம் உடற்பயிற்சி செய்ய உதவும். காலையில் வெறும் வயிற்றில் பிளாக் காபி குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்யுங்கள்.
56
இந்த தப்பை செய்யவே கூடாது.!

இந்த தப்பை செய்யவே கூடாது.!

நிபுணர்கள் ஒரு எச்சரிக்கையையும் கொடுக்கிறார்கள். காலையில் வெறும் வயிற்றில் பிளாக் காபி குடித்துவிட்டு, உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்றுப் பிரச்சினை மற்றும் அமிலத்தன்மை (acid reflux) போன்றவற்றை ஏற்படுத்தலாம். எனவே, காபி குடித்த பிறகு உடற்பயிற்சி செய்வது அவசியம்.

66
இதை சேர்த்தால் சுவை சூப்பரா இருக்கும்.!

இதை சேர்த்தால் சுவை சூப்பரா இருக்கும்.!

ஒரு பாத்திரத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும், ஒரு டீஸ்பூன் காபி தூளைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். பிறகு அதை வடிகட்டி குடியுங்கள். இதில் சர்க்கரை சேர்க்கவே கூடாது. காபி மிகவும் கசப்பாக இருந்தால், சுவைக்காக சிறிது இலவங்கப்பட்டை தூளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fun Facts: ஆட்டோக்களில் ஏன் 3 சக்கரம் இருக்குனு தெரியுமா? 90% பேருக்கு இது தெரியாது.!
Recommended image2
Cooking Oil : ஒரே எண்ணெயில் மீண்டும் சமைப்பது எந்த அளவுக்கு உடல் நலத்தை பாதிக்கும்? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
Recommended image3
Kitchen Hacks : வெங்காயம் வெட்டும் போது இனி கண்ணீர் வராது! இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க!
Related Stories
Recommended image1
Health tips: கோடையில் செரிமானம் பலவீனமாவது ஏன்? இதோ 5 எளிய ஆயுர்வேத தீர்வுகள்!
Recommended image2
Hair Health: உங்க தலைமுடி பலவீனமாக இதுதான் காரணமா? நீங்கள் தினமும் செய்யும் 6 தவறுகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved