சியா விதைகளின் நன்மைகள் தெரிந்திருக்கும்.. ஆனால் அதுல பக்கவிளைவுகள் இவ்ளோ இருக்கு!!
சியா விதைகள் நம்முடைய உடல் எடையை கட்டுக்குள் வைக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் அடிக்கடி உண்பதால் சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.
சியா விதைகளை உடல் எடையை குறைக்க பலர் பயன்படுத்துகின்றனர். இதனால் கணிசமாக உடல் எடை குறைகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. சியா விதைகளை தண்ணீரில் அல்லது பாலில் ஊறவைத்து உண்ணலாம். ஊறவைக்கும்போது இந்த விதைகள் பெரிதாகும். சியா விதைகளில் பல நன்மைகள் இருந்தாலும், அவற்றை அதிகமாக உட்கொள்வது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
செரிமான கோளாறு
சியா விதைகள் செரிமானத்திற்கும் நன்மை பயக்கும். ஆனாலும் அதிகமாக சாப்பிட்டால் செரிமானத்தில் இடையூறு வந்துவிடும். சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த விதைகளை அதிகமாக உண்பதால் ஜீரணம் தாமதமாகும். ஒரு நாளைக்கு ஒரு சில சியா விதைகளை மட்டுமே உட்கொள்ளுங்கள். இதை அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்கு, வீக்கம், வயிற்றுப் பிடிப்பு ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ரத்த அழுத்தம்
சியா விதைகள் இரத்தத்தை மெலிக்கும். இதில் உள்ள ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தை மெலிக்கும் தன்மை கொண்டது என்று சொல்லப்படுகிறது. அதிக அளவு சியா விதைகளை வழக்கமாக உட்கொள்வது உயர் இரத்த அழுத்த மருந்துகளுடன் பிரச்சனையை உண்டாக்கலாம். நீங்கள் உயர் ரத்த அழுத்த மருந்துகளை எடுத்துக் கொண்டால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்னரே சியா விதைகளை உண்ண வேண்டும்.
சர்க்கரை அளவு
சியா விதைகள் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரங்கள். ஆனால் அதிகமாக உட்கொண்டால், அவை சர்க்கரையை உறிஞ்சும் குடலின் திறனில் குறுக்கிடலாம். இதன் விளைவாக, இரத்த சர்க்கரை அளவு குறையும். சியா விதைகளின் இந்த பண்பு ஏற்கனவே மருந்து, இன்சுலின் எடுத்துக்கொண்டிருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சனையாக முடியும். சியா விதைகளை அதிகமாக சாப்பிடுவது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதைக் குறைக்க மருந்துகளும் இன்சுலினில் மாற்றங்களும் தேவை.
இதையும் படிங்க: வேப்பம் பூவின் வியப்பூட்டும் மருத்துவ நன்மைகள்!
சியா விதைகள் எடுத்து கொள்ளவேண்டிய அளவு:
சுகாதார அறிக்கைகளின்படி, ஒரு நாளைக்கு 1 முதல் 1.5 தேக்கரண்டி சியா விதைகள் நம் உடலுக்கு போதும். இந்த விதைகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஏராளம். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், நார்ச்சத்து, புரதம், கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் ஆரோக்கியத்திற்கு உதவும்.
சியா விதைகளை எப்படி சாப்பிடுவது?
இந்த சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து அதிகாலையில் குடிக்கலாம்.
இதையும் படிங்க: குழந்தை பெற்றுக் கொள்ள ஏற்ற வயது என்ன?