MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • காலை டிபன் முதல் இரவு டின்னர் வரை... கோதுமை ரவையில் சட்டுனு செய்யக்கூடிய 5 அசத்தல் ரெசிபிகள்!

காலை டிபன் முதல் இரவு டின்னர் வரை... கோதுமை ரவையில் சட்டுனு செய்யக்கூடிய 5 அசத்தல் ரெசிபிகள்!

என்ன டிபன் செய்யுறதுனு குழப்பமா இருக்கா? இட்லி, தோசைக்கு மாற்றா கோதுமை ரவையில் 5 அசத்தல் ரெசிபிகள்; ஆவி உருண்டை, அடை, வடை, ஜாங்கிரி முதல் காய்கறி பிரியாணி வரை செய்வது எப்படி? முழு செய்முறை இதோ!

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 17 2026, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கோதுமை ரவையில் செய்யக்கூடிய 5 சூப்பர் ரெசிபிகள்!
Image Credit : chatgpt

கோதுமை ரவையில் செய்யக்கூடிய 5 சூப்பர் ரெசிபிகள்!

தினமும் காலையில எந்திரிச்சதும் இன்னைக்கு என்ன டிபன் செய்றது என்ற குழப்பம் எல்லா வீட்டுலயும் வர்றது இயல்புதான். எப்பவும் போல இட்லி, தோசைனு அரைச்ச மாவையே சுட்டு அலுத்துப்போயிட்டா, இந்த முறை கோதுமை ரவையை வச்சு சமையல்ல ஒரு புது மாற்றத்தை ட்ரை பண்ணிப் பாருங்க. நார்ச்சத்து நிறைந்த கோதுமை ரவையோட, வீட்ல இருக்குற காய்கறிகளைச் சேர்த்து செஞ்சா உடம்புக்கும் ரொம்ப நல்லது. வாய்க்கும் நல்ல ருசியா இருக்கும். காலை டிபன் முதல் மதிய சாப்பாடு, ஸ்நாக்ஸ் ஏன் ஸ்வீட் வரை கோதுமை ரவையில் செய்யக்கூடிய 5 சூப்பர் ரெசிபிகள் இதோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
1. ஆவியில் வெந்த கோதுமை ரவை காய்கறி உருண்டை
Image Credit : x

1. ஆவியில் வெந்த கோதுமை ரவை காய்கறி உருண்டை

எண்ணெய் சேர்க்காம ஆவியில் வேக வச்சு சாப்பிட நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ். கோதுமை ரவையோட பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, வாசனைக்கு புதினா, காரத்துக்குப் பச்சை மிளகாய் சேர்த்து நல்லா பிசைஞ்சுக்கோங்க. பிறகு சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிச்சு, இட்லி பாத்திரத்துல வச்சு ஆவியில வேக வச்சு எடுத்தா போதும். சுடச்சுட தேங்காய் சட்னி அல்லது கொத்தமல்லி சட்னியோடு தொட்டுச் சாப்பிட்டா தட்டே காலியாகிடும்.

36
2. மொறுமொறு கோதுமை ரவை அடை
Image Credit : x

2. மொறுமொறு கோதுமை ரவை அடை

வழக்கமான பருப்பு அடைக்கு பதிலா இந்த அடையை ரொம்ப ஈஸியா செஞ்சிடலாம். ஜவ்வரிசி, கோதுமை ரவை, கொஞ்சமா அரிசி மாவு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து அடை மாவு பதத்துக்குக் கரைச்சுக்கோங்க. இந்த மாவை கொஞ்ச நேரம் ஊற வச்சு, தோசைக்கல்லில் நல்லா மெல்லியதா தட்டி, சுற்றிலும் லேசா எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேக விடுங்க. வெளியில நல்லா மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் சூப்பரான அடை ரெடி!

46
3. மாலை நேரத்துக்கான மொறுமொறு ரவை வடை
Image Credit : x

3. மாலை நேரத்துக்கான மொறுமொறு ரவை வடை

சாயங்காலம் டீ குடிக்கும்போது மொறுமொறுனு ஏதாவது சாப்பிடத் தோணுதா? கோதுமை ரவையோடு வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், கோஸ், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து வடை மாவு பதத்துக்குப் பிசைஞ்சுக்கோங்க. சூடான எண்ணெயில் தட்டிப் போட்டு பொன்னிறமா பொரிச்சு எடுத்தா நல்ல கிரிஸ்ப்பியான வடை தயார். இதோட காரசாரமான புதினா சட்னி வச்சு சாப்பிட்டா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

56
4. நாவில் கரையும் கோதுமை ரவை ஜாங்கிரி
Image Credit : x

4. நாவில் கரையும் கோதுமை ரவை ஜாங்கிரி

கோதுமை ரவையில் ஸ்வீட் செய்ய முடியுமானு யோசிக்கிறீங்களா? தாராளமா செய்யலாம்! கோதுமை ரவை, அரிசி மாவு, கடலை மாவு, காய்ச்சிய பால் சேர்த்து ஜாங்கிரி மாவு பதத்துக்கு நல்லா நைஸா அரைச்சுக்கோங்க. இதை ஜாங்கிரி போல பிழிஞ்சு எண்ணெயில் பொரித்து, உடனே பக்குவமான சர்க்கரைப் பாகில் ஊற வச்சு எடுத்தா, ஜூஸியான கோதுமை ரவை ஜாங்கிரி தயார். விசேஷ நாட்களுக்கு இது ஒரு அருமையான இனிப்பு.

66
5. சத்துக்கள் நிறைந்த மதிய உணவு: கோதுமை ரவை காய்கறி பிரியாணி
Image Credit : x

5. சத்துக்கள் நிறைந்த மதிய உணவு: கோதுமை ரவை காய்கறி பிரியாணி

மதிய உணவுக்கு அரிசி சாப்பாட்டுக்கு மாற்றா ஏதாவது ஹெல்த்தியா சாப்பிடணும்னு நினைக்கிறவங்களுக்கு இந்த பிரியாணி பெஸ்ட். குக்கரில் எண்ணெய் அல்லது நெய் விட்டு, காளான், பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ் ஆகிய காய்கறிகளோடு புதினா, கொத்தமல்லி, பிரியாணி மசாலா சேர்த்து நல்லா வதக்கிக்கோங்க. வழக்கமான அரிசிக்குப் பதிலா கோதுமை ரவையைச் சேர்த்து அளவா தண்ணீர் விட்டு குக்கரை மூடி வேக வையுங்க. கமகமக்கும் வாசனையோடு சத்துக்கள் நிறைந்த வெஜிடபிள் பிரியாணி ரெடி. ஒரே ஒரு பாக்கெட் கோதுமை ரவையை வச்சுக்கிட்டு காலை உணவு, ஸ்நாக்ஸ், ஸ்வீட், மதிய சாப்பாடுனு ஒரு நாள் முழுக்க மெனுவையே கலக்கலா மாத்திடலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Instant Vada : பருப்பு ஊற வைக்க வேண்டாம்! மீதமிருக்கும் பிரெட்டில் மொறுமொறு வடை செய்யலாம்!
Recommended image2
Chapati : பாதாம் மாவு vs கோதுமை மாவு : சப்பாத்தி செய்ய எது சிறந்தது? சத்து, கலோரி வித்தியாசம் இதோ!
Recommended image3
Beetroot Bonda : பீட்ரூட் பிடிக்காத குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவாங்க..இப்படி மொறுமொறுனு போண்டா செய்து கொடுங்க!
Related Stories
Recommended image1
Fluffy Omelette: பஞ்சு போல புசுபுசு கேக் ஆம்லேட்.. வீட்டிலேயே செய்வது இவ்வளவு ஈஸியா?
Recommended image2
Ulundhu Puttu: கருப்பு உளுந்து, அரிசி இருந்தால் போதும்! ஆரோக்கியம் நிறைந்த சுவையான புட்டு ரெடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved