- Home
- உடல்நலம்
- உணவு
- Watermelon: வெயிலுக்கு தர்பூசணி அமிர்தம் தான்! ஆனா எந்த நேரத்துல சாப்பிட்டா உடம்புக்கு ரொம்ப நல்லது?
Watermelon: வெயிலுக்கு தர்பூசணி அமிர்தம் தான்! ஆனா எந்த நேரத்துல சாப்பிட்டா உடம்புக்கு ரொம்ப நல்லது?
கோடைக்காலத்தில் ஆரோக்கியமா இருக்க தர்பூசணி சாப்பிடுறீங்களா? ஆனா, எந்த நேரத்துல சாப்பிடுறீங்க? எந்த டைம்ல சாப்பிட்டா உடம்புக்கு நல்லது, எப்போ சாப்பிடக்கூடாதுனு தெரியுமா? இது குறித்து விரிவாக பார்ப்போம்.
13

Image Credit : Getty
தர்பூசணியில் உள்ள சத்துக்கள்
கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைப்பது ரொம்ப முக்கியம். இதற்கு, நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிடுவது நல்லது. அந்த லிஸ்டில் தர்பூசணிக்கு முதல் இடம். இதில் 90 முதல் 92% வரை தண்ணீர் உள்ளது. இது உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை (Dehydration) தடுக்க உதவுகிறது. தர்பூசணியில் வைட்டமின் சி, ஏ, பி6, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.
Add Asianetnews Tamil as a Preferred Source

23
Image Credit : Getty
தர்பூசணி எப்போது சாப்பிடலாம்?
ஆயுர்வேதத்தின்படி, தர்பூசணியை மதிய நேரத்தில் சாப்பிடுவதுதான் சிறந்தது. இந்த நேரத்தில், நம் உடலின் மெட்டபாலிசம் வேகமாக செயல்படும். அதனால், தர்பூசணி எளிதில் ஜீரணமாகி, எல்லா சத்துக்களையும் உடல் உறிஞ்சிக்கொள்ளும். மதிய வெயில் அதிகமாக இருக்கும்போது தர்பூசணி சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியடையும், நீர்ச்சத்து இழப்பும் தடுக்கப்படும். இதில் உள்ள இயற்கையான சர்க்கரை, நாள் முழுவதும் உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து, சோர்வைக் குறைக்கும். மேலும், இது உடலை நீரேற்றமாக வைத்து, சூரிய வெப்பத்தாக்குதல் (sunstroke) வராமல் தடுக்கவும் உதவுகிறது.
33
Image Credit : Getty
இரவு நேரத்தில் தர்பூசணி வேண்டாம்
தர்பூசணி ஆரோக்கியமானது என்றாலும், இரவு நேரத்தில் இதைச் சாப்பிடக்கூடாது. இரவில் சாப்பிட்டால், நெஞ்செரிச்சல் அல்லது செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இதில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இது உங்கள் தூக்கத்தைக் கெடுக்கும்.
Latest Videos

