MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Gongura Chicken : ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன்..காரமும் புளிப்பும் கலந்த அட்டகாசமான சுவை!

Gongura Chicken : ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன்..காரமும் புளிப்பும் கலந்த அட்டகாசமான சுவை!

Gongura Chicken : ஆந்திராவின் புகழ்பெற்ற கோங்குரா சிக்கன் செய்வது எப்படி? புளிச்ச கீரையின் தனித்துவமான புளிப்பும், காரமான மசாலாக்களும் சேர்ந்து சுவை அள்ளும் இந்த சிக்கன் ரெசிபி, சாதம், சப்பாத்திக்கு அட்டகாசமான காம்பினேஷன்.

3 Min read
Author : Vishnupriya
Published : Nov 04 2026, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன்
Image Credit : Gemini Ai

ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன்

சிக்கன் என்றாலே ஒரே மாதிரியான கிரேவியா? கொஞ்சம் ஆந்திரா ஸ்டைலில் காரசாரமாக, நாவில் எச்சில் ஊற வைக்கும் புளிப்பு கலந்த சுவையில் சிக்கன் செய்து பாருங்கள்.

ஆந்திராவின் புகழ்பெற்ற கோங்குரா (புளிச்சக்கீரை) கீரையின் தனித்துவமான புளிப்பும், மிளகாயின் காரமும், மசாலாக்களின் மணமும் சேர்ந்து உருவாகும் இந்த கோங்குரா சிக்கன், சாதம், சப்பாத்தி, தோசை என அனைத்திற்கும் அட்டகாசமான காம்பினேஷன்.

வழக்கமான சிக்கன் குழம்பை விட வித்தியாசமான சுவையை விரும்புபவர்கள் இந்த ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கனை ஒருமுறை செய்து பாருங்கள். வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் இந்த சுவையான சிக்கனை எளிதாக தயாரிக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
தேவையான பொருட்கள்
Image Credit : Gemini Ai

தேவையான பொருட்கள்

சிக்கனை ஊறவைக்க

  • சிக்கன் - 500 கிராம்
  • மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • தயிர் - 2 தேக்கரண்டி
  • எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
  • கோங்குரா கீரை


சிக்கன் கிரேவி தயாரிக்க

  • பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
  • பிரிஞ்சி இலை
  • பட்டை
  • கிராம்பு
  • ஏலக்காய்
  • சோம்பு
  • தக்காளி - 1
  • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 1 1\2 தேக்கரண்டி
  • சீரகத்தூள் - 1\2 தேக்கரண்டி
  • கரம் மசாலா - 1\2 தேக்கரண்டி
  • மிளகுத்தூள் - 1\2 தேக்கரண்டி
  • சீரகம் - 1\2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • எண்ணெய் - 3 முதல் 4 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் - தேவையான அளவு
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
311
ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன் செய்முறை - படி 1
Image Credit : Gemini Ai

ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன் செய்முறை - படி 1

சிக்கனை ஊறவைக்கவும்

முதலில் சிக்கனை நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர், எலுமிச்சைச் சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

இந்தக் கலவையை குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். இதனால் சிக்கனில் மசாலா நன்றாக இறங்கி, சமைக்கும்போது சுவையாகவும் மென்மையாகவும் இருக்கும்.

411
படி 2
Image Credit : Gemini Ai

படி 2

கோங்குரா கீரையை வதக்கவும்

கோங்குரா கீரையை இலைகளாகப் பிரித்து, நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கோங்குரா கீரையைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். கீரை நன்றாகச் சுருங்கி மென்மையாகும் வரை சமைக்கவும்.

கீரையில் உள்ள புளிப்புச் சுவை வெளிப்பட்டு, கீரை நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

511
படி 3
Image Credit : Gemini Ai

படி 3

வெங்காயம், தக்காளி வதக்கவும்

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு தாளிக்கவும்.
  • அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • நறுக்கிய தக்காளி சேர்த்து அது குழைந்து வரும் வரை வதக்கவும்
611
படி 4
Image Credit : Gemini Ai

படி 4

மசாலா சேர்த்து சிக்கனை வதக்கவும்

  • பிறகு மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.
  • ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து 5 முதல் 7 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். சிக்கனில் இருந்து தண்ணீர் வெளியேறி மசாலாவுடன் கலந்து வரும்.
  • தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் சமைக்கவும்.
711
படி 5
Image Credit : Gemini Ai

படி 5

கோங்குரா கீரையைச் சேர்க்கவும்

  • சிக்கன் நன்றாக வெந்ததும், நாம் வதக்கி வைத்துள்ள கோங்குரா கீரையை சிக்கனுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • புளிப்புச் சுவை சிக்கனுடன் நன்றாகச் சேர்ந்து எண்ணெய் மேலே மிதந்து வரும் வரை 2 முதல் 4 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சமைக்கவும்.
  • இடையிடையே கிளறிவிடவும். சிக்கன் நன்றாக வெந்து, கீரை மசாலா சிக்கனில் ஊறி, கிரேவி கெட்டியாகும் வரை சமைக்க வேண்டும்.
811
படி 6
Image Credit : Gemini Ai

படி 6

கோங்குரா சிக்கன் தயார்

எண்ணெய் மேலே பிரிந்து, கிரேவி நன்றாகக் கெட்டியானதும் சிறிதளவு கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன் தயார்.

911
படி 7
Image Credit : Gemini Ai

படி 7

கோங்குரா கீரைதான் முக்கியம்: இதன் புளிப்புச் சுவையே இந்த உணவின் தனித்துவம். புளிப்பு அதிகமாக இருந்தால் கீரையின் அளவைக் குறைக்கலாம்.

கீரையை நன்றாக வதக்கவும்: பச்சை வாசனை போகும் வரை வதக்குவது சுவையை அதிகரிக்கும்.

தக்காளி விருப்பமானது: கோங்குரா ஏற்கனவே புளிப்புச் சுவை கொண்டதால் தக்காளியைத் தவிர்க்கலாம்.

காரத்தை சரிசெய்யவும்: ஆந்திரா ஸ்டைலில் காரம் அதிகமாக இருக்கும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாயின் அளவைக் குறைக்கலாம்.

சிக்கனை அதிகமாக வேகவைக்க வேண்டாம்: சிக்கன் மென்மையாக இருக்கும் வரை மட்டும் சமைக்கவும்.

கிரேவி கெட்டியாக இருக்கட்டும்: இந்த உணவு சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் சற்று கெட்டியாக இருந்தால் சுவையாக இருக்கும்.

1011
எதனுடன் சாப்பிடலாம்?
Image Credit : Gemini Ai

எதனுடன் சாப்பிடலாம்?

ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் காரமும் புளிப்பும் அற்புதமான சுவையைத் தரும்.

மேலும்,

  • நெய் சாதம்
  • சப்பாத்தி
  • பரோட்டா
  • தோசை
  • ஜீரக சாதம் ஆகியவற்றுடனும் பரிமாறலாம்.
1111
ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன்
Image Credit : Gemini Ai

ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன்

கோங்குரா கீரையின் புளிப்பும், சிக்கனின் சுவையும் ஒன்றாக இணையும் இந்த ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன், வழக்கமான சிக்கன் குழம்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சுவையைத் தரும். வார இறுதி மதிய உணவுக்கு செய்து குடும்பத்தினருடன் ருசித்துப் பாருங்கள்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sweet Sev Recipe : இனிப்பு சேவு ரெசிபி..கடலை மாவில் சர்க்கரைப் பாகு சேர்த்து மொறுமொறுனு செய்யலாம்!
Recommended image2
Dal Cooking Tips: பருப்பு ஊறவைத்த தண்ணீரை கீழ ஊத்துறீங்களா..? சத்துகள் வீணாகாம சமைப்பது எப்படி..?
Recommended image3
Cooker Adhirasam : குக்கர்ல 3 விசில் விட்டா போதும்... டேஸ்டான தீபாவளி அதிரசம் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்
Related Stories
Recommended image1
Idli Batter Fish Fry : மீன் வறுவல் மொறுமொறுப்பாக வர இட்லி மாவு சேர்த்துப் பாருங்க..ஹோட்டல் ஸ்டைல் சுவை வீட்டிலேயே!
Recommended image2
Squid Pepper Fry : தேங்காய் பாலில் ஊறவைத்த கனவா மீன் வறுவல்.. சுவை அள்ளும் ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved