MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • நோய்களை ஓட ஓட விரட்டும் "முள்ளங்கி" ... எப்படி தெரியுமா?

நோய்களை ஓட ஓட விரட்டும் "முள்ளங்கி" ... எப்படி தெரியுமா?

முள்ளங்கியை தினம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன எனபதை இங்கு பார்க்கலாம்.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 14 2023, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

முள்ளங்கி கிழங்கு வகைகளில் ஒன்று. சுவையில் கொஞ்சம் ஒருவிதமாக இருந்தாலும், இவற்றில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக பொட்டாசியம், நார்ச்சத்து, துத்தநாகம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தாமிரம், கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், வைட்டமின்கள் ஏ, பி6, சி, ஈ, கே ஆகியவை அதிகம்.
 

26

நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்க முள்ளங்கி உதவுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முள்ளங்கியில் உள்ள அதிக நீர் மற்றும் நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதனால் எடை குறைக்க உதவுகிறது.

36
radish

radish

கறி, சூப், சாலட் போன்றவை முள்ளங்கியில் செய்து சாப்பிடலாம். முள்ளங்கி சாப்பிடுவது கண்பார்வையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எலும்புகள் மற்றும் பற்களையும் பலப்படுத்துகிறது. இதயத்தை கவசம் போல் பாதுகாக்கிறது.

இதையும் படிங்க:  தினமும் முள்ளங்கி சாப்பிட்டால் நீங்கள் டாக்டர்கிட்ட போக வேண்டியதே இல்லை...

46

முள்ளங்கியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் காயங்களை விரைவில் குணமாக்க உதவுகிறது. முள்ளங்கியில் கலோரிகள் குறைவு. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வாகும். இது நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

இதையும் படிங்க:  எச்சரிக்கை: முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..!!!

56

முள்ளங்கியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கம் மற்றும் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகின்றன. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க முள்ளங்கி உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் தங்கள் குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்றால் முள்ளங்கியை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

66

சமீபத்திய ஆய்வுகள் முள்ளங்கி கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும் என்று கூறுகின்றன. முள்ளங்கி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. பதட்டத்தை குறைக்கும் சக்தி இதற்கு உண்டு. முள்ளங்கி சாப்பிடுவதால் முடி தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். முடி உதிர்வு குறைந்து, முடி வலுவடையும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
Uric Acid : மூட்டு வலியை நீக்கும் சூப்பர் 'சட்னி' ஒருமுறை சாப்பிட்டு பாருங்க! அற்புத பலன்கள் இருக்கு
Recommended image3
Kambu Paniyaram : கம்பு பணியாரத்திற்கு 'சர்க்கரை' நோயை கட்டுப்படுத்துற சக்தி இருக்கு.. ரொம்ப ஈஸியான ரெசிபி இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved