Banana Desserts : 10 நமிடங்களில் செய்ய 10 சூப்பர் வாழைப்பழ ரெசிபிக்கள்!
Banana Desserts : பழுத்த வாழைப்பழம் இருக்கா? ஐஸ்கிரீம், மக் கேக், பர்ஃபே, பஜ்ஜி என சில நிமிடங்களில் வீட்டின் எளிய பொருட்களைக் கொண்டு அசத்தலான ஸ்வீட்ஸ் சட்டுனு செஞ்சிடலாம்!

சுவையான வாழைப்பழம் பேன்கேக்
மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்துச் செய்யும் பேன்கேக் இயற்கையாகவே இனிப்புச் சுவையுடன் இருக்கும். இதன் மேலே சிறிதளவு தேன் ஊற்றிச் சாப்பிட்டால், காலையில் உண்ணும் சாதாரண பிரேக்ஃபாஸ்ட்டை விட அட்டகாசமான டெசர்ட் போல ருசிக்கும்.
இதையும் படிங்க : Carrot : கேரட் சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதா? உண்மையைத் தெரிஞ்சுக்கோங்க!
வாழைப்பழப் பஜ்ஜி
பழுத்த வாழைப்பழத்தைக் கொண்டு சூடான, மொறுமொறுப்பான சுவையான பஜ்ஜிகளை மிக எளிதாகச் செய்யலாம். இதன் மேலே சிறிது பவுடர் சுகர் தூவிப் பரிமாறினால், இதன் சுவை இன்னும் கூடுதல் பிரமாதமாக இருக்கும்.
இதையும் படிங்க : Brinjal Recipe : கத்தரிக்காய் சமைக்கும் போது 2 ஸ்பூன் பால் ஊத்துனா என்ன ஆகும் தெரியுமா? இதுதான் செஃப் சீக்ரெட்!
கேரமல் பிரெட் டோஸ்ட்
டோஸ்ட் செய்த பிரெட் துண்டுகளின் மீது வாழைப்பழச் சில்லுகள் மற்றும் சுவையான கேரமல் சேர்த்துச் சாப்பிட்டால் அதன் சுவை மிகவும் ரிச்சாக இருக்கும். வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே இதை மிகச் சீக்கிரமாகச் செய்துவிடலாம்.
இதையும் படிங்க : EPF : மாதம் ரூ.10,750 EPF-ல் போட்டால் 25 ஆண்டுகளில் ரூ.1 கோடி! ஆனால் இந்த ஒரு தவறு செய்தால் பெரிய இழப்பு!
பழ பர்ஃபே
தயிர், வாழைப்பழம், க்ரனோலா ஆகியவற்றை அடுத்தடுத்து லேயர் லேயராக அடுக்கி அட்டகாசமான டெசர்ட் தயாரிக்கலாம். பார்ப்பதற்கு மிகவும் கலர்ஃபுல்லாக இருக்கும் இதைச் செய்யச் சில நிமிடங்களே போதும்.
இதையும் படிங்க : Health Insurance : ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்ட மருத்துவ காப்பீடு! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?
ஆரோக்கியமான ஓட்ஸ் குக்கீஸ்
வாழைப்பழத்தைச் சேர்ப்பதால் இந்தக் குக்கீஸ் மிகவும் மென்மையாக இருக்கும். மேலும், ஓட்ஸ் சேர்ப்பதால் சாப்பிடுவதற்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும். ஆரோக்கியமான இந்த ஸ்நாக்கை வீட்டிலேயே எளிதாகச் செய்து அசத்தலாம்.
இதையும் படிங்க : Suitcase : வெளியூர் கிளம்பும்போது சூட்கேஸ் சக்கரத்தில் டேப் ஒட்டுங்க! இதுக்கு பின்னாடி இப்படியொரு காரணமா?
மென்மையான பனானா பிரெட்
வீட்டிலேயே ஃபிரெஷ்ஷாக சுடப்பட்ட உணர்வைத் தரும் பனானா பிரெட் துண்டுகள், அதன் மென்மையான சுவையுடன் மாலை நேரத் தேநீர் அருந்தும்போது சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இதையும் படிங்க : Rahu-Ketu Transit : ராகு-கேது பெயர்ச்சியில் உருவாகும் துர்க்கையின் அருள்! 4 ராசிகளுக்கு பொன்னும் பொருளும் குவியும்!
சாக்லேட் பனானா பைட்ஸ்
வாழைப்பழத் துண்டுகளைச் சாக்லேட்டில் முழுமையாக முக்கி உறைநிலையில் வைத்து எடுத்தால் சூப்பரான ஸ்நாக் ரெடி. இந்தச் சுவையான குட்டி டெசர்ட் தட்டில் வைத்த வேகத்தில் கண்மூடித் திறப்பதற்குள் காலியாகிவிடும்.
இதையும் படிங்க : Housework : வீட்டு வேலைகளை சீக்கிரம் முடிக்கணுமா? இந்த 7 பழக்கங்களை முயற்சி பண்ணிப் பாருங்க!
அடுக்கு வாழைப்பழப் புட்டிங்
வாழைப்பழம், புட்டிங் மற்றும் பிஸ்கட் துண்டுகளை அடுத்தடுத்து லேயராக அடுக்கும்போது, இந்த எளிய டெசர்ட் பார்ப்பதற்கு மிகவும் அழகாகத் தெரியும். ஒவ்வொரு ஸ்பூனிலும் கிரீமியான மற்றும் மொறுமொறுப்பான சுவை கிடைக்கும்.
இதையும் படிங்க : Sun Screen : சன் ஸ்க்ரீன் ஏன் போடணும்? போடலேன்னா ஸ்கின் கேன்சர் வருமா?
சுவையான வாழைப்பழ மக் கேக்
பழுத்த வாழைப்பழத்தைப் பயன்படுத்தி வெறும் சில நிமிடங்களிலேயே மிகவும் மென்மையான மக் கேக் தயாரித்துவிடலாம். திடீரென இனிப்பு சாப்பிட வேண்டும் என்று மனம் விரும்பும்போது, இந்தச் சூடான டெசர்ட் மிகவும் அருமையான தேர்வாக இருக்கும்.
இதையும் படிங்க : Coffee-Tea : காபி, டீ குடிச்சதும் சிலருக்கு ஏன் பாத்ரூம் வருது? இது ஆபத்தா? காரணம் இதுதான்!
கிரீமியான வாழைப்பழ ஐஸ்கிரீம்
உறைந்த வாழைப்பழத்தை நன்றாக அரைத்தாலே, கொழுப்பு நிறைந்த ஹெவி கிரீம் எதையும் சேர்க்காமலேயே அருமையான கிரீமியான டெசர்ட் ரெடியாகிவிடும். இது இயற்கையான இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும்.
இதையும் படிங்க : Cooking Tips : சத்துகள் குறையாமல் சமைப்பது எப்படி? இந்த 7 டிப்ஸ் தெரிஞ்சுக்கோங்க!

