- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!
தலைக்கு குளித்த பிறகு டவலை இறுக்கமாக சுற்றி தலையில் கட்டினால் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Wrapping Hair In A Towel
பொதுவாகவே பெண்கள் தலைக்கு குளித்து முடித்த பிறகு முதலில் செய்யும் விஷயம் என்னவென்றால் டவலை தலைமுடியை கட்டுவதுதான். அதிலும் சிலர் டவலை மணிக்கணக்கில் தலைமுடியில் கட்டிக் கொண்டே இருப்பார்கள். நீங்களும் இப்படித்தான் செய்கிறீர்கள் என்றால் இனி அந்த தப்பை செய்யாதீர்கள். அப்படி செய்வதால் வரும் பிரச்சினைகள் என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
தலை முடி உதிர்தல் :
தலைக்கு குளித்த உடனே தலை முடியை சீவக்கூடாது என்று சொல்வார்கள். அப்படி சீவினால் முடி உதிரும். அதுபோல தான் தலைக்கு குளித்ததும் முடி வழக்கத்தை விட அதிகமாக உதிருமாம்.
முடி வளர்ச்சியாகும் :
தலைமுடிக்கு துண்டை கட்டும்போது அது தலையில் இருக்கும் மொத்த தண்ணீரையும் உறிஞ்சி விடுவது உண்மைதான். ஆனால் அதேசமயம் உங்கள் முடிஅதிகமாக வறட்சியாகும்.
முடியின் வடிவம் மாறிவிடும் :
தலைக்கு குளித்ததும் முடியை டவலால் கட்டினால் முடியும் ஷேப் முற்றிலும் மாறிவிடும். அதாவது நேராக இருக்கும் உங்களது முடியானது நிரந்தரமாக wavy முடியாக மாறிவிடும். உங்களது பழைய முறையில் வடிவத்தை திரும்ப நீங்கள் பெற முடியாது.
இதை செய் !
நீங்கள் தலைக்கு குளித்து முடித்த உடனே தலை முடியை டவலால் கட்டாமல் சூரிய ஒளியில் அல்லது பேன் காற்றில் உலர்த்தவும். இதற்கு டைம் இல்லை என்று சொன்னால் ஹேர் டிரையர் பயன்படுத்தலாம். ஆனால் அதிக ஹீட்டில் அல்ல.

