MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • Turmeric : பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பது ஏன்? பின்னணியில் இருக்கும் ரகசியம் இதுதான்!

Turmeric : பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பது ஏன்? பின்னணியில் இருக்கும் ரகசியம் இதுதான்!

Turmeric Skincare: நம் முன்னோர்கள் ஏன் மஞ்சளை குளியலில் சேர்த்தார்கள்? மஞ்சளை உடலில் தேய்த்துக் குளிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இந்தத் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Aug 30 2026, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மஞ்சள் தேய்த்து குளிப்பது
Image Credit : magnific

மஞ்சள் தேய்த்து குளிப்பது

மங்களகரமான பொருட்களில் மஞ்சளுக்கு எப்போதுமே தனி முக்கியத்துவம் உண்டு. இது மிகச்சிறந்த கிருமி நாசினிகளில் ஒன்று. முன்பெல்லாம் வீட்டில் மஞ்சள் இல்லாமல் குளிப்பதே இல்லை என்ற அளவுக்கு, மஞ்சளை குளியலில் பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது. பாட்டி, அம்மா என பலரும் வாரத்தில் சில நாட்களாவது மஞ்சள், கடலை மாவு போன்ற இயற்கையான பொருட்களை உடலுக்குத் தேய்த்து குளிப்பார்கள்.

ஆனால், இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பல பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பதை மறந்துவிட்டு, சோப்பு, பாடி வாஷ் என பல்வேறு ஸ்கின் கேர் பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பாரம்பரியமாக பின்பற்றும் வழக்கம்
Image Credit : pinterest

பாரம்பரியமாக பின்பற்றும் வழக்கம்

மஞ்சள் சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா மட்டுமல்ல. நம் பாரம்பரியத்தில் நீண்ட காலமாக அழகு மற்றும் உடல் பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மஞ்சள் பூசும் வழக்கமும் இருந்திருக்கிறது. இவை உடலை சுத்தமாகவும், சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் என்ற நம்பிக்கையும் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது.

36
மஞ்சள் தேய்த்து குளிப்பதால் என்ன பலன்?
Image Credit : AI Image

மஞ்சள் தேய்த்து குளிப்பதால் என்ன பலன்?

  1. மஞ்சளில் உள்ள குர்குமின் (curcumin) என்ற ஆன்டி ஆக்சிடண்ட் தோலில் உள்ள நுண்கிருமிகளை அழித்து, தோல் நோய் வராமல் பாதுகாப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.
  2. மஞ்சளில் உள்ள antioxidant மற்றும் anti-inflammatory பண்புகள் தோலில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு மற்றும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. மேலும், முகத்தில் உள்ள முகப்பரு, கரும்புள்ளிகள் குறைவதுடன், தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு இயற்கையான பொளிவை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
46
மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி
Image Credit : magnific

மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி

மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி. அதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் உடலில் பன்படுத்தும்போது, சருமத்தில் உள்ள நச்சக்கள் குறைவதோடு, தேவையற்ற முடிகளின் வளர்ச்சியையும் குறைக்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் உடலில் உள்ள தேவையற்ற முடிகளை நீக் வேக்ஸிங், லேசர் ஹேர் ரிமூவல், ஹெர்பல் ஹேர் ரிமூவல் என்று பல விஷயங்கள் உள்ளன. ஆனால் காலங்காலமாக நம் முன்னோர்கள் உடல் மற்றும் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க மஞ்சளை தான் பயன்படுத்தியுள்ளனர். தொடர்ந்து மஞ்சளை சருமத்துக்கு பயன்படுத்தும்போது இயற்கையாகவே அது தேவையற்ற முடிகள் வராமல் குறைக்க உதவுகிறது.

56
ஃபேஷனாக மாறிய பாரம்பரியம்
Image Credit : Gemini AI

ஃபேஷனாக மாறிய பாரம்பரியம்

நம் முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்திய பல விஷயங்களை ஃபேஷன் என்று நாமும் பின்பற்றிதான் வருகிறோம். முன்பெல்லாம் திருமண நிகழ்ச்சியில் நலங்கு என்ற சடங்கில் பெண்ணுக்கு மஞ்சள், சந்தனம் பூசுவது வழக்கம். இந்த முறையைதான் நாம் இன்று ஹல்தி என அனைத்து திருமணங்களிலும் கொண்டாடி வருகிறோம்.

66
இறுதி முடிவு
Image Credit : magnific

இறுதி முடிவு

பாரம்பரியமாக நாம் மஞ்சளை குளியலுக்கு பயன்படுத்தி வந்தாலும், இன்றைய காலக்கட்டத்தில் எல்லோருடைய சருமத்துக்கும் மஞ்சள் ஏற்றது என்று சொல்லமுடியாது. சிலருக்கு மஞ்சளை சருமத்தில் பயன்படுத்துவதால் அலர்ஜி, அரிப்பு, முகம் சிவப்பாக மாறுவது அல்லது Contact Dermatitis போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
சுகாதார நன்மைகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Moringa Powder Benefits: முகம் 10 வயசு குறைஞ்ச மாதிரி தெரியணுமா? முருங்கை இலை செய்யும் மாயாஜாலம்..!
Recommended image2
Wet Hair: ஈரத்தலையோடு தூங்குற பழக்கம் இருக்கா? உஷார்! முடிக்கு மட்டுமல்ல; தலைக்கும் ஆபத்து!
Recommended image3
Nalangu Maavu: சோப்புக்கு குட்பை... நலங்கு மாவுக்கு வெல்கம்! வீட்டிலேயே செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
Pillow Cleaning: மஞ்சள் கறை படிஞ்ச தலையணையா? வெறும் ரூ.10-ல் பளபளக்க வைக்கும் மேஜிக் ட்ரிக்!
Recommended image2
Tile Cleaning: டைல்ஸில் படிந்த மஞ்சள் கறையா? இந்த 5 வீட்டு வைத்தியம் போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved