தேங்காய் எண்ணெய் vs கற்றாழை ஜெல்: வறண்ட சருமத்துக்கு எது சிறந்தது?
வறண்ட சருமத்திற்க்கு கற்றாழை ஜெல் அல்லது தேங்காய் எண்ணெய் இவை இரண்டில் எது சிறந்தது என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம்.

Best Moisturizer For Dry Skin Aloe Vera vs Coconut Oil
காலம் காலமாகவே சரும பராமரிப்பில் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சரும பராமரிப்பிற்கு என பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்பவர்கள் இருந்தாலும், இந்த இரண்டையும் பயன்படுத்தாதவர்கள் கண்டிப்பாக இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு இவை இரண்டும் சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வறண்ட சருமத்தால் அவதிப்படுகிறீர்களா? கவலைப்படாதீங்க, உங்களது சருமத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்க வீட்டில் இருக்கும் கற்றாலை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் இந்த இரண்டு பொருட்கள் மட்டுமே போதும். ஆனால் சிறந்த நீரேற்றம், இயற்கை தீர்வு, குணப்படுத்துதல் மற்றும் நீண்ட கால சரும நன்மைகளை வழங்குவதில் கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில், டிரை ஸ்கிற்கு எது பெஸ்ட் என்பதை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஒரு நல்ல மாய்ஸ்ச்சரைசராக செயல்படும். சருமம் எவ்வளவு வறண்டு இருந்தாலும் இது நீண்ட நேரம் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். தேங்காய் எண்ணெயில் இருக்கும் பண்புகள் சேதமடைந்த சருமத்தின் செல்களை நீக்கு சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். ஆனால் தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவிய பிறகு அது உறிஞ்சிக் கொள்ள சிறிது நேரம் எடுக்கும். மேலும் இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
கற்றாழை ஜெல் ;
சருமத்தில் மாய்ஸ்ச்சரைசர் அப்ளை செய்தால் அது வெளியே தெரியக்கூடாது. மேலும் பிசுபிசுப்பாகவும் இருக்கக் கூடாது என்று நீங்கள் விரும்பினால் கற்றாழை சிறந்த தீர்வு. ஏனெனில் இதை சருமத்தில் தடவிய சில நிமிடங்களிலேயே சருமத்தால் உறிஞ்சப்பட்டு ஹைட்ரேட்டிங்காக வைத்திருக்கும். இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், அடிக்கடி சருமம் சிவத்து போதல், எரிச்சல் உள்ளிட்ட சரும பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.
வறண்ட சருமத்திற்கு எது பெஸ்ட்?
- கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் இவை இரண்டுமே வறண்ட சருமத்திற்கு சிறந்தது தான். ஆனால் உங்களது தேவை, சருமத்தின் தன்மையை பொறுத்து நீங்கள் தேர்வு செய்யலாம்.
- உங்களது சருமம் அதிக அளவு வறண்டு போய் இருந்தாலும் அல்லது அதிகமான ஹைட்ரேட்டிங் தேவை என்றாலோ தேங்காய் எண்ணெய் தேர்வு செய்யுங்கள்.
- சருமத்தில் வறட்சி கம்மியாக தான் இருக்கிறது. மேலும் கிரீன் மாய்ஸ்ச்சரைசர் போல பயன்படுத்த விரும்பினால் கற்றாழை ஜெல் தான் பெஸ்ட் ஆப்ஷன்.
இரண்டையும் பயன்படுத்தலாமா?
- நீங்கள் விரும்பினால் கற்றாழை ஜெல் மற்றும் இரண்டையும் சேர்த்து கூட பயன்படுத்தலாம் அது இன்னும் கூடுதல் நன்மைகளை உங்களுக்கு வழங்கும்.
- மேலும் பகலில் கற்றாழை ஜெல்லும் இரவில் தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம். ஏனெனில் கற்றாழை பகலில் சருமத்தை மென்மையாக மாற்ற உதவும் தேங்காய் எண்ணெயோ சருமத்திற்கு நுழைந்தவுடன் மிக அதிகமாக ஹைட்ரேட்டின் செய்துவிடும்
இவை இரண்டுமே சருமத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும் சிலருக்கு கற்றாழை ஜெல் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே அதை பயன்படுத்துவதற்கு முன் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.