தலைமுடி வளர சூப்பர் டிப்ஸ்!!
Aloe Vera hair mask benefits: கற்றாழை நமது சருமத்திற்கு மட்டுமல்ல, கூந்தலுக்கும் நன்மை பயக்கும். இது முடியை உள்ளிருந்து வலுப்படுத்தி, பட்டு போன்ற, பளபளப்பான மற்றும் வலுவான கூந்தலைப் பெற உதவுகிறது. கற்றாழையை எப்படி முடியில் பயன்படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம்.
Aloe Vera and Coconut oil
2 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை நன்கு கலந்து உச்சந்தலை முடியில் தடவவும். இதை 30-40 நிமிடங்கள் ஊற விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு பயன்படுத்தி நன்கு கழுவவும்.
Aloe Vera and Honey
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 1 தேக்கரண்டி தேன் கலந்து தலைமுடியில் மாஸ்க்காக பயன்படுத்தவும். 20-30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் நன்கு கழுவி, பின்னர் ஷாம்பு செய்யவும்.
Aloe Vera and Lemon
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்,1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து உச்சந்தலையிலும் முடியிலும் தடவி 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு செய்யவும். இது உச்சந்தலைக்கு புத்துணர்ச்சி கொடுத்து பொடுகை நீக்கும்.
Aloe Vera and Curd
2 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 2 தேக்கரண்டி தயிரை கலந்து உச்சந்தலை முடியில் தடவவும். இதை 30 நிமிடங்கள் ஊற விடவும். இந்த ஹேர் மாஸ்க் உச்சந்தலையை சுத்தப்படுத்தி, முடியை வலுப்படுத்துகிறது.
Aloe Vera and Olive Oil
2 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து உச்சந்தலை முடியில் தடவவும். இதை 30-40 நிமிடங்கள் ஊற விடவும். இது முடியை வலுப்படுத்தி, முடி உதிர்வை தடுக்கும்.
Aloe Vera and Egg
ஒரு முட்டையை நன்கு அடித்து, 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து 20-30 நிமிடங்கள் தலையில் ஊறவிடவும். குளிர்ந்த நீரில் ஷாம்பு பயன்படுத்தி நன்கு கழுவவும். இது முடிக்கு புரதத்தையும் ஈரப்பதத்தையும் வழங்குகிறது.