பெண்களே முகத்தில் இருக்கும் பூனை முடி உங்க அழகை கெடுக்குதா? அப்ப இந்த பேக்குகளை ட்ரை பண்ணுங்க!
டீன் ஏஜ் பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மையால் முகத்தில் தேவையற்ற முடி பிரச்சனை ஏற்படுகிறது. ஆனால் இந்த பிரச்சனையை வீட்டில் இருந்தபடியே சரி செய்யலாம். அது என்னவென்று பார்ப்போம்.
ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் முகத்தில் முடி இருக்கும். பெண்களின் முக முடி மெல்லியதாகவும், வெளிர் நிறமாகவும் இருக்கும். தனித்தனியாகக் கவனிக்காத வரை இவை கண்ணுக்குத் தெரியாது. சில பெண்களுக்கு முகத்தில் முடி அதிகமாக இருக்கும்.
மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக, முகத்தில் முடிகள் அதிகமாக வளர வாய்ப்பு உள்ளது. முகத்தில் ரோமங்கள் பெரிய பிரச்சனையாக இல்லாவிட்டாலும், முகத்தில் முடிகள் இருப்பது பொலிவை குறைக்கிறது.
முகத்தில் உள்ள ரோமங்களை அகற்ற பலர் வேக்சிங், த்ரெடிங், லேசர் சிகிச்சைகளை எடுத்து வருகின்றனர். இதனால் மிகுந்த வலி ஏற்படுவதோடு, செலவும் அதிகமாகும். இந்த முக முடியை வீட்டிலேயே அகற்றலாம்.. வலியின்றி குறைந்த செலவில். இப்போது இயற்கையான ஃபேஸ் பேக்குகள் மூலம் முகத்தில் உள்ள முடிகளை நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: முகத்தில் கருத்திட்டுகள் நிறைய இருக்கா? ஈசியா சரிசெய்ய ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க..!!
பப்பாளி - மஞ்சள்: பச்சை பப்பாளியில் பாப்பைன் உள்ளது. இது மயிர்க்கால்களை உடைக்க உதவுகிறது. இது முடி வளர்ச்சியைத் தடுக்கிறது. இதற்கு முதலில், பச்சை பப்பாளி விழுது 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் பொடி அரை டீஸ்பூன் எடுத்து கொள்ளவும். இரண்டையும் நன்கு கலக்கவும். அதை முகத்தில் தடவவும். அது காய்ந்த பிறகு..முடி வளரும் இடத்தில் ஸ்கரப் செய்யவும். பின்னர் நீரில் முகத்தை கழுவவும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள முடிகள் குறையும். அவற்றின் வளர்ச்சியும் குறையும். மேலும் பப்பாளி மற்றும் மஞ்சள் முகத்தை பொலிவாக்கும்.
இதையும் படிங்க: வாழைப்பழத்தோலின் நன்மைகள் தெரிஞ்சா இனி தூக்கி எறிய மாட்டீங்க!
தேன் - ஓட்ஸ்: ஓட்ஸை அரைத்து எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்யவும். பின்னர் அதை ஃபேஸ் பேக்காக உங்கள் முகத்தில் தடவவும். காய்ந்ததும்.. ஸ்கரப் செய்து முகத்தை கழுவவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மஞ்சள் - சந்தன பொடி: கஸ்தூரி மஞ்சள், சந்தனப் பொடி, சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் கடுகு எண்ணெய் கலந்து பேஸ்ட் செய்யவும். இதனை ஃபேஸ் பேக்காக உங்கள் தடவவும். காய்ந்த பிறகு ஸ்க்ரப் செய்யவும். 20-30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தப்பட வேண்டும். இது முடி வளர்ச்சியைத் தடுக்கிறது.
முட்டை ஃபேஸ் பேக்: முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் அரை டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். மென்மையான பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும். காய்ந்த பிறகு முகத்தை கழுவவும்.
அரிசி மாவு: இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு, இரண்டு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி பால் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவவும். காய்ந்ததும் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பிறகு மாய்ஸ்சரைசர் தடவவும்.