கரும்புள்ளி பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கும் 4 தக்காளி ஃபேஸ்பேக்குகள்..!!
நம்முடைய சருமம் சூரியனின் புற ஊதா கதிர்களை உள்வாங்கும் போது, தோல் அடர்ந்த ஒரு பழுப்பு நிறத்துக்கு மாறுகின்றன. இதற்கு சிகிச்சையளிப்பதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு தீர்வு தான் தக்காளி ஃபேஸ் பேக்குகள்.
முகப்பரு என்பது பலர் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். சூரியனின் புற ஊதாக் கதிர்கள்தான் சருமத்தை தோல் பதனிடச் செய்கிறது. இந்த மாதிரியான முகப்பருவைப் போக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய பொருட்களில் தக்காளி ஃபேஸ் பேக்குகளும் ஒன்று. முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றைப் போக்கி சருமத்தைப் பொலிவாக்க தக்காளி உதவுகிறது. அந்த வகையில் சருமத்துக்கு பயன்தரக்கூடிய ஃபேஸ் பேக்குகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.
தக்காளி மற்றும் சர்க்கரை
தக்காளி சாற்றில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். பின்னர் இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். வெளியில் செல்லும் போது இவ்வாறு செய்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
தக்காளி மற்றும் தயிர்
இரண்டு ஸ்பூன் தயிருடன் தக்காளிச் சாறு சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் எல்லாம் போய்விடும். இதை வாரமிருமுறை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு கரும்புள்ளிகள் தோன்றவே தோன்றாது.
தக்காளி மற்றும் தேன்
தக்காளிச் சாறு மற்றும் தேன் மட்டும் கலந்து தடவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெறும். ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒரு டீஸ்பூன் தக்காளி சாற்றில் சேர்த்து, அதை 15 நிமிடம் வரை முகத்தில் அப்ளை செய்யவும். பின்னர் அதை குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் நீங்கிவிடும்.
தக்காளி மற்றும் எலுமிச்சை
தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலவையில் சிறிது தேன் சேர்க்கவும். பின்னர் அதை உங்கள் முகத்தில் தடவவும். சில நிமிடங்களுக்குப் பிறகு அதைக் கழுவவும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள எண்ணெய் நீங்கி முகம் பொலிவு பெறும்