- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Sunscreen : சன்ஸ்கிரீன் இப்படி பார்த்து வாங்குங்க.. சருமத்தை பராமரிக்க சிறந்த வழி
Sunscreen : சன்ஸ்கிரீன் இப்படி பார்த்து வாங்குங்க.. சருமத்தை பராமரிக்க சிறந்த வழி
நீங்கள் சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன்பு சில விஷயங்களை அறிந்து கொள்வது ரொம்பவே முக்கியம். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Buying Guide for Sunscreen
இன்று நம்மில் பெரும்பாலானோர் வெயிலில் செல்வதற்கு முன் சன் ஸ்கிரீன் பூசிக் கொள்வது அன்றாட பழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இது சரும புற்றுநோய், தோல் சருக்கும், கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்ற பல சரும பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உதவுகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. இத்தகைய சூழ்நிலையில், நாம் பயன்படுத்தும் சில சன்ஸ்கிரீன்களில் ரசாயனங்கள் இருப்பதால் அவை உடலில் ஹார்மோன் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற சந்தேகம் தற்போது பலருக்கு எழுகிறது. இதற்குப் பின்னால் உள்ள உண்மையான ரகசியத்தை இப்போது இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
கெமிக்கல் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் வரும் பிரச்சினைகள்:
பெரும்பாலான சன்ஸ்கிரீம்களில் கெமிக்கல் உள்ளன. அதாவது அதிலிருக்கும் இருக்கும் ஆக்ஸிபென்சோன், ஆக்டினாக்ஸேட், அவோபென்சோன் போன்ற இரசாயனங்கள் சூரியனின் புற உதாக் கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாத்தாலும், அவை நம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு ரத்த ஓட்டத்தில் கலந்து, உடலில் ஹார்மோன்கள் செயல்பாடுகளில் தலையிட்டு, பிறகு சில உடல்நிலை பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தீர்வு உண்டா ?
ஆம், மினரல் சன்ஸ்கிரீன் தான் இதன் தீர்வு. பிசிக்கல் சன்ஸ்கிரீன் என்பது இதன் மற்றொரு பெயராகும். இதில் ஜிங்க் ஆக்சைடு, டைட்டானியம் டை ஆக்சைடு போன்ற தாதுக்கள் உள்ளன. அவை கெமிக்கல் சன்ஸ்கிரீன் போல சருமத்தால் உறிஞ்சப்படாமல், சருமத்தின் ஒரு பாதுகாப்பு படலமாக படிந்து சூரிய கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். முக்கியமாக, இதை பயன்படுத்துவதன் மூலம் ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் ரொம்பவே கம்மி.
முக்கிய குறிப்பு:
ஹார்மோன் பிரச்சினைக்கு பயந்து சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டாம். ஏனெனில் சன்ஸ்கிரீன் தான் சூரியனின் புறஉதாக் கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். இல்லையெனில் சரும புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளன என்கின்றனர் நிபுணர்கள்.
இருந்தபோதிலும் சன்ஸ்கிரீனில் இருக்கும் ரசாயனங்களால் ஆபத்துக்கள் வருமென்று இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே நீங்கள் செய்ய வேண்டியது முதல் காரியம் சரியான சன்ஸ்கிரீன் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது தான்.
இதற்கு நீங்கள் சன் ஸ்கிரீன் வாங்கும் முன் அதில் ஜிங் ஆக்சைடு (zinc oxide) அல்லது டைட்டானியம் டையாக்சைடு (titanium dioxide) போன்ற இருந்தால் அதை தாரளமாக வாங்கி பயன்படுத்தலாம். Minerl based அல்லது Physical sunscreen என்று அதில் சொல்லப்பட்டிருந்தாலும் அதை வாங்கலாம்.
சரியான சன் ஸ்கிரீனை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் சரும மட்டுமல்ல ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.