பொடுகு தொல்லையா...உடனடி தீர்வு இதோ..!
முடி உதிர்வதற்கான பல்வேறு காரணங்கள் உண்டு, அதில் ஒன்று தான் பொடுகு தொல்லை. வெங்காயத்தை வைத்து வெறும் 7 நாட்களில் இதிலிருந்து விடுபட என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இக்கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வெங்காயச் சாறு:
உலகளவில் பொடுகு தொல்லையால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றன. இத்தொல்லையில் இருந்து விடுபட நாம் பலவிதமான முயற்சிகளை எடுத்து இருக்கிறோம். ஆனால் எவ்வித பயனுமில்லை. இதில் இருந்து விடுபட, வெங்காயச் சாற்றைப் முறையாக பயன்படுத்துவதற்கான பல்வேறு வழிகளைப் பற்றி இங்கு காணலாம்.
வெங்காயச் சாறை எடுத்து அதை தலையில் தடவி குளிக்க வேண்டும். வாரம் 2 நாட்கள் இந்த ஜூஸை உங்கள் தலையில் தடவி குளித்தால் பொடுகு தொல்லை குறையும்.
எலுமிச்சை:
சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் வெங்காய சாறு எடுத்து தலையில் தடவினால், தலையில் உள்ள பிரச்சனைகளை நீக்கி, அவற்றின் வளர்ச்சியை அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதைச் செய்ய வேண்டும்.
கற்றாழை ஜெல்:
வெங்காய சாறுடன் கற்றாழை ஜெல்லை கலந்து, தலையில் தடவி லேசாக மசாஜ் செய்யவும். பின் 10 நிமிடம் கழித்து குளித்தால், தலையில் உள்ள எண்ணெய் பசையை குறையும். மேலும் பொடுகில் இருந்து விடுபடலாம். இதை வாரத்திற்கு 2-3 முறை செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: மாரடைப்பு ஏற்படாமல் இருக்க நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும் 'சூப்பர்' உணவுகளை தினமும் எடுத்துக்கோங்க!
பீட்ரூட்:
அவித்த பீட்ரூட்டை பேஸ்ட் போல் எடுத்து அதனுடன் வெங்காய சாற்றை கலக்க வேண்டும். பின் இக்கலவையை எடுத்து உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். இப்படி செய்தால் பொடுகு பிரச்சனை கட்டுக்குள் வரும்.இதை தினமும் செய்யலாம்.
ஆலிவ் எண்ணெய்:
வெங்காய சாறுடன் ஆலிவ் எண்ணெயை கலந்து தலை மற்றும் முடியில் தடவ வேண்டும். மேலும் ஒரு துண்டை எடுத்து, அரை மணி நேரம் தலையில் சுற்றிக் கொள்ளவும். பின் லேசான ஷாம்பூவைக் கொண்டு கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வர உச்சந்தலையில் உள்ள எரிச்சல் தணியும் மற்றும் பொடுகு குறையும்.
எலுமிச்சை:
எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய், வெங்காய சாறு ஆகியவற்றை ஒரு கலவையாக எடுத்து உச்சந்தலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை தடவ வேண்டும். பிறகு லேசான க்ளென்சிங் ஷாம்பூவைப் பயன்படுத்தி கழுவவும். இவ்வாறு செய்தால் பொடுகு தொடர்பான பூஞ்சை தொற்றைத் தணிக்கலாம். இதனை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
ஆப்பிள் வினிகர்:
வெங்காய சாறுடன் ஆப்பிள் சாறு கலந்து, உச்சந்தலையில் தடவ வேண்டும். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு, தலைமுடியை நன்கு கழுவவும். முடி உதிர்தல் மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம். வாரத்திற்கு 2-3 முறை இதைச் செய்யலாம்.