- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Dandruff Solutions : ஒரே பொருள்; வெறும் 7 நாட்களில் பொடுகை அடியோடு அகற்றும் சக்தி இருக்கு
Dandruff Solutions : ஒரே பொருள்; வெறும் 7 நாட்களில் பொடுகை அடியோடு அகற்றும் சக்தி இருக்கு
பொடுகு தொல்லை மற்றும் முடி உதிர்தலால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முடி உதிர்தல் மற்றும் பொடுகை கட்டுப்படுத்தலாம். அது குறித்து இங்கே காணலாம்.

கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்சைம்கள் உள்ளன. இதை உச்சந்தலையில் 30 நிமிடங்கள் தடவி, ஷாம்பு கொண்டு கழுவவும். இது பாதுகாப்பானது என்றாலும், சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் உள்ள வைட்டமின்கள் முடியை வலுப்படுத்தி, உதிர்வதைத் தடுக்கும். உச்சந்தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து, சில மணி நேரம் கழித்து கழுவவும்.
வெங்காயச் சாறு
வெங்காயச் சாற்றில் உள்ள சல்பர், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த சாற்றை உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் கழுவவும்.
முட்டை
முட்டையில் உள்ள புரோட்டீன் மற்றும் பயோட்டின் முடி வளர்ச்சிக்கு உதவும். ஒரு முட்டையுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து, தலையில் 30 நிமிடங்கள் தடவி, பின்னர் கழுவவும்.
வெந்தயம்
வெந்தயத்தில் உள்ள புரோட்டீன் முடி உதிர்வைத் தடுத்து, வளர்ச்சியை ஊக்குவிக்கும். வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, தலையில் 30 நிமிடங்கள் தடவி, ஷாம்பு கொண்டு கழுவவும்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி உதிர்வைத் தடுத்து, வளர்ச்சியை ஊக்குவிக்கும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை காய்ச்சி, அந்த எண்ணெயை உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.
கிரீன் டீ
கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. கிரீன் டீயை தலையில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.