வெள்ளை முடி கருப்பாக மாற.. மா இலை ஹேர் பேக் ட்ரை பண்ணுங்க..!!
மா இலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி வெள்ளையாக மாறாமல் தடுக்கிறது. ஆனால் இந்த இலைகளை எப்படி தலைமுடிக்கு தடவ வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்...
முடி நரைப்பது என்பது பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை. வயதாவதால் முடி நரைப்பது என்பது இயற்கையான செயல். ஆனால் இளமையில் முடி நரைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இது அவர்களை ஆழ்ந்த சிக்கலில் தள்ளுகிறது. முடியை கருமையாக்க ஹேர் கலர் பூசுவது கூந்தலின் ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கும். மேலும் இது சரும பிரச்சனைகளை உண்டாக்கும் வாய்ப்பு அதிகம்.
மாற்றாக, இயற்கையான முடி சாயத்தை வீட்டிலேயே செய்யலாம். கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் ஹேர் டையை விட இது மிகவும் சிறந்தது. அனைவருக்கும் கிடைக்கும் பொருட்களால் உங்கள் தலைமுடி கருமையாக மாறினால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.. இயற்கையான முடி நிறத்திற்கான வீட்டு வைத்தியத்தில், முதலில் உங்களுக்கு மா இலைகள் தேவை.
இதையும் படிங்க: Mango Leaves: மாவிலை தோரணத்துக்கு மட்டுமில்ல... எத்தனை விதமான பயன்கள் இருக்கு தெரியுமா?
ஆம்..மா இலைகளில் முடிக்கு கருப்பு நிறத்தை கொடுக்கும் பல கலவைகள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் உள்ளதால் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மா இலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி வெள்ளையாக மாறாமல் தடுக்கிறது. இருப்பினும், மாம்பழத்தின் நன்மைகள் மற்றும் இந்த இலைகளை முடிக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இங்கே பார்ப்போம்...
இதையும் படிங்க: இளநரையா? கடுகு எண்ணெயுடன் இவற்றை மட்டும் கலந்தால் போதும்.. உங்கள் முடி கருகருவென மாறும்..!!
வெள்ளை முடிக்கு மா இலைகள்:
வெள்ளை முடியை கருப்பாக மாற்ற, முதலில் சில மா இலைகளை எடுத்து மென்மையான பேஸ்ட் செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தலைமுடியில் சுமார் ஒன்றரை மணி நேரம் விடவும். மா இலைகளால் செய்யப்பட்ட இந்த ஹேர் பேக் படிப்படியாக வெள்ளை முடியை கருப்பாக்கி, முடி அடர்த்தியாக வளரும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மாம்பழ இலைகளை கூந்தலில் தடவுவதற்கான மற்றொரு வழி, மா இலையை தண்ணீரில் கொதிக்க வைக்கு வேண்டும்.தண்ணீர் நிறம் மாறியதும், அடுப்பில் இருந்து அதனை இறக்கி ஆறிய பின், இந்த நீரை முடியின் வேர் முதல் நுனி வரை தடவவும். இந்த நீரை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி கருப்பாக மாற ஆரம்பிக்கும்.
மூன்றாவது முறை, இந்த இலைகளை வெயிலில் காயவைத்து மென்மையாக அரைத்து எடுத்து கொள்ளவும். இவற்றுடன் கருப்பு தேநீர்( சர்க்கரை சேர்க்காமல் டீ) சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த பேஸ்டில் நீங்கள் விருப்பப்பட்டால் மருதாணியையும் சேர்க்கலாம். இதன் மூலம் நீங்கள் இன்னும் சிறந்த முடிவுகளைக் காண்பீர்கள்.