- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- K-Beauty Hair Secrets : கொரிய பெண்களை போல பளபளக்கும் கூந்தலுக்கு நச்சுனு '4' டிப்ஸ்
K-Beauty Hair Secrets : கொரிய பெண்களை போல பளபளக்கும் கூந்தலுக்கு நச்சுனு '4' டிப்ஸ்
கொரியன் பெண்களைப் போல உங்கள் கூந்தலும் பட்டு போல மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க விரும்பினால் கீழே குறிப்பிட்ட கூந்தல் பராமரிப்பு முறைகளை மட்டும் பின்பற்றினால் போதும்.

K-Beauty Hair Secrets
இன்றைய காலகட்டத்தில் கொரிய அழகு சாதன பொருட்கள் மற்றும் சரும பராமரிப்பு நடைமுறைகள் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. கொரியன் மக்கள் தங்கள் பளபளக்கும் சருமம் மற்றும் பட்டுப் போல மென்மையான கூந்தலுக்கு பெயர் போனவர்கள். அவர்களைப் போல உங்களுடைய கூந்தலும் பட்டு போல மென்மையாக பளபளக்க விரும்பினால் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்துடன் சில கூந்தல் பராமரிப்பு முறைகளையும் பின்பற்றி வந்தால் நீங்களும் கொரியன் பெண்களைப் போல பளபளப்பான கூந்தலை பெறலாம். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கெமிக்கல் இல்லாத ஷாம்பு :
கொரியர்கள் தங்களது உச்சந்தலையில் இருக்கும் எண்ணெயை அகற்றாமல் தலைமுடியை சுத்தம் செய்வதற்கு கெமிக்கல் இல்லாத மென்மையான ஷாம்புவை பயன்படுத்துகிறார்கள். அதாவது சல்பேட் இல்லாத ஆர்கன் அல்லது சியா எண்ணெய் போன்ற ஈரப்பதமூட்டும் பொருட்கள் கொண்ட ஷாம்புவை பயன்படுத்துகிறார்கள். இந்த ஷாம்பு தலைமுடி உடைவதை, வறட்சியாவதை தடுத்து, கூந்தலை பட்டு போல மென்மையாக மாற்ற உதவும்.
கொரிய ஹட்ரேட்டிங் ஹேர் மாஸ்க் :
கொரியா ஹைட்ரேட்டின் ஹேர் மாஸ்க்கானது உச்சந்தலைக்கு நீரேற்றம் மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இந்த ஹேர் மாஸ்க் தலைமுடியை பட்டு போல மென்மையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. எனவே கொரியன் போல உங்களது தலைமுடியும் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற விரும்பினால் வாரத்திற்கு 2 முறை ஹைட்ரைடிங் ஹேர் மாஸ்க் பயன்படுத்துங்கள். அதிகபட்ச நன்மைகளை பெற தேங்காய் எண்ணெய், அவைகேடோ, தேன் போன்ற பொருட்கள் கொண்ட ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது ரொம்பவே நல்லது.
உச்சந்தலை பராமரிப்பு :
ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு உச்சந்தலை பராமரிப்பு ரொம்பவே முக்கியம். கொரிய கூந்தல் பராமரிப்பு வழக்கத்தில் அவர்கள் உச்சந்தலையில் நறுமணச்சாறு எண்ணெயை தடவி மசாஜ் அல்லது ஸ்க்ரப் செய்வார்கள். உச்சந்தலையை பராமரிப்பதன் மூலம் முடியின் வேர் முதல் நுனிவரை மென்மையாகவும், வலுவாகவும் இருக்கும்.
ஹீட் ஸ்டைலின் கருவிகள் வேண்டாம்!
இது உங்களது தலைமுடியை வறட்சியக்குவது மட்டுமல்லாமல் முடி உடைவதற்கு வழிவகுக்கும். எனவே முடிந்தவரை இதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை இதை பயன்படுத்தினால் அதற்கு முன் சீரம் பயன்படுத்த மறக்காதீர்கள்.
தலைக்கு எண்ணெய் தேய்த்தல் :
கொரிய பெண்கள் கூந்தல் பளபளப்பாக இருப்பதற்கு முக்கிய காரணம் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதாகும். எனவே, உங்களது தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க விரும்பினால் கண்டிப்பாக எண்ணெய் தேய்க்க வேண்டும். அதுவும் குறிப்பாக, அர்கன் அல்லது ஜோ ஜோ என்னைப் போன்ற பொருள்கள் கொண்ட எண்ணெய்களை பயன்படுத்துவது ரொம்பவே நல்லது. இவை தலைமுடிக்கு கூடுதல் பளபளப்பை வழங்கும்.

