ஜொலிக்கும் முகத்துக்கு கற்றாழை ஜெல்.. கூடவே 'இதை' கலந்து யூஸ் பண்ணுங்க!!
உங்கள் முகத்தின் பொலிவை இரட்டிப்பாக ரோஸ் வாட்டரை இந்த 2 வெவ்வேறு வழிகளில் பயன்படுத்துங்கள்.

Ways To Use Rose Water For Face : பொதுவாக நம்முடைய முகத்தில் ரோஸ் வாட்டரை நாம் பயன்படுத்துவோம். ஏனென்றால் இது முகத்தை குளிர்ச்சியாகவும், ஈரமாகவும் வைக்க உதவும். ரோஸ் வாட்டரை பயன்படுத்துவதன் மூலம் உங்களது முகம் இறுக்கமாக மாறும். எந்த வகையான சருமத்திலும் இதை பயன்படுத்தலாம். இதனால் சருமத்திற்கு எந்தவித பிரச்சனையும் வராது. இத்தகைய சூழ்நிலையில், உங்களது முகத்தில் ரோஸ் வாட்டரை 2 வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். இதனால் சருமம் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி முகம் பளபளப்பாக மாறும். அது என்ன? அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரோஸ் வாட்டர் மற்றும் கற்றாழை ஜெல்:
இதற்கு ஒரு கிண்ணத்தில் ரோஸ்வாட்டரை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது அல்லது காற்றாலை ஜெல் மற்றும் கிளசரின் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு உங்களது முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது உங்களது சருமத்தின் ஆரோக்கியமாக வைக்கும்.
இதையும் படிங்க: தினமும் முகத்திற்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது நல்லதா? என்னன்னு தெரிஞ்சுக்க இதை படிங்க..!!
ரோஸ் வாட்டர் பேஸ் மாஸ்க்:
ரோஸ் வாட்டரைக் கொண்டு தயாரிக்கப்படும் பேஸ் மாஸ்க் உங்களது முகத்தில் பளபளப்பை கொண்டு வரும். இதற்கு ஒரு கிண்ணத்தில் ரோஸ் வாட்டர் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் முல்தானி மிட்டி அல்லது சந்தன பொடியை சேர்த்து நன்றாக கலந்து, அது உங்களது முகத்தில் தடவி, நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ் உங்களது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்களை அகற்றி, முகத்தை ஜொலிக்க வைக்கும்.
இதையும் படிங்க: முகப்பரு, கருவளையங்கள் நீங்க ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க!
நினைவில் கொள் :
- நீங்கள் ரோஸ் வாட்டர் தினமும் கூட உங்களது முகத்தில் பயன்படுத்தலாம். இது சருமத்தின் நீரேற்றமாக வைக்க உதவும்.
- அதுபோல குளிக்கும் நீரில் ரோஸ் வாட்டரை சேர்க்கலாம்.
- எந்த வகையான சருமத்திற்கும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம்.