- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- பப்பாளி இலைக்கு இவ்வளவு நல்லதா? முகத்தின் பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கும்!!
பப்பாளி இலைக்கு இவ்வளவு நல்லதா? முகத்தின் பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கும்!!
Papaya Leaves For Face : முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகளைப் போக்கி, முகப்பொலிவை அதிகரிக்க பப்பாளி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

பப்பாளி இலைக்கு இவ்வளவு நல்லதா? முகத்தின் பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கும்!!
பப்பாளி சுவையான மற்றும் சத்தான பழங்களில் ஒன்றாகும். பப்பாளி பழத்தில் மட்டுமல்ல, அதன் இலைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன தெரியுமா? ஆம், பப்பாளி இலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பப்பேன் போன்றவை உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. இது தவிர, இது சருமம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கவும் உதவுகின்றன. பப்பாளி இலையில் இருக்கும் வைட்டமின்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கின்றன. பப்பாளி இலையை முகத்தில் பயன்படுத்தினால் பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். கூடுதலாக, முகத்தை பொலிவாகவும் வைக்க உதவும். சரி இப்போது பப்பாளி இலையை முகத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
முகம் பளபளக்க..
முகம் பளபளக்க பப்பாளி இலை சாற்றை முகத்தில் தடவ வேண்டும். இதற்கு இரண்டு அல்லது மூன்று இலைகளை எடுத்துக் கொள்ளவும். அவற்றை நன்றாக அரைத்து அதில் இருந்து சாற்றை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை உங்களது முகத்தில் தடவி சுமார் 10 நிமிடம் கழித்து குளிர்ந்து நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் நல்ல பலன்களை காண்பீர்கள்.
இதையும் படிங்க: தினமும் பப்பாளி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
முகப்பருக்கள் கரும்புள்ளிகள் நீங்க..
பப்பாளி இலையை பேஸ்ட் போலாக்கி அதை உங்களது முகத்தில் தடவி சுமார் 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் உங்களது முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள், கறைகள் மற்றும் நிறமிகள் விரைவில் நீங்கி, முகம் பளபளப்பாக மாறும். இது தவிர முகத்தில் இருக்கும் சுருக்கங்ககும் நீங்கும்.
இதையும் படிங்க: பப்பாளி இலை சாப்பிட்டால் டெங்கு குணமாகுமா? டெங்கு குறித்து 5 கட்டுக்கதைகள் நீங்கள் அறியாதவைஇதோ..!!
பப்பாளி இலை ஃபேஸ் பேக்:
பப்பாளி இலை ஃபேஸ் பேக் போட முதலில் இரண்டிலிருந்து மூன்று இலைகளை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் தேன் அல்லது கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அந்த பேஸ்ட்டே உங்களது முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை பயன்படுத்தினால் உங்களது முகம் பளபளப்பாக மாறுவது மட்டுமல்லாமல், முகத்தில் இருக்கும் பருக்கள் கரும்புள்ளிகள் மறைய ஆரம்பிக்கும்.