பியூட்டி பார்லருக்கு போகாம "டல் ஸ்கின்னை டால் அடிக்கும் ஸ்கின்னாக" மாற்றலாமா! இதோ இதனை ட்ரை பண்ணி பாருங்க!
வீட்டில் இருந்த படியே மிகக் குறைந்த நேரத்தில் எளிய முறையில் பேசியல் ப்ளீச் எப்படி செய்வது என்ற அழகு குறிப்பு தான் இன்று நாம் காண உள்ளோம். வீட்டிலேயே ப்ளீச் செய்யவது எப்படி பார்க்கலாம் வாங்க!
முகத்தை வெள்ளையாக மாற்ற பியூட்டி பார்லருக்கு சென்று தான் ஃபேசியல் அல்லது பிளீச் போன்றவை செய்தால் தான் முடியும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் உள்ளது. இப்போது இருக்கும் கோடைகாலத்திற்கு நமது சருமம் அடிக்கடி டல்லாக தோற்றம் அளிக்கும் .இதனை சரி செய்ய நம்மால் அடிக்கடி பியூட்டி பார்லருக்கு செல்ல இயலாது. மேலும் நேரமும், பணமும் அதிகமாக செலவாகும்.
இன்றைய நவீன உலகத்தில் ஆண்கள்,பெண்கள் என்று அனைவரும் வேலைக்கு செல்வதால் சண்டே மட்டும் தான் பெரும்பாலோனோர் வீட்டில் இருக்கின்றனர். அல்லது வாரத்தில் ஏதோ ஒரு நாள் மட்டும் தான் வீக்லி ஆஃப் கிடைக்கிறது. அந்த ஒரு நாளும் வீட்டில் ரெஸ்ட் தான் எடுக்க அனைவரும் விரும்புவார்கள். அப்படி வீட்டில் இருந்த படியே மிகக் குறைந்த நேரத்தில் எளிய முறையில் பேசியல் ப்ளீச் எப்படி செய்வது என்ற அழகு குறிப்பு தான் இன்று நாம் காண உள்ளோம். வீட்டிலேயே ப்ளீச் செய்யவது எப்படி பார்க்கலாம் வாங்க!
தேவையான பொருட்கள்:
முட்டை வெள்ளை கரு – 3 ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்
லெமன் ஜூஸ் – 1 ஸ்பூன்
கான்பிளவர் – 1 ஸ்பூன்.
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
எண்ணெய் சருமத்தில் இருந்து விடுபட... இதோ 5 வழிமுறைகள்..!!
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு சிறிய பவுலில் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து அதனை விஷ்க் வைத்து நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். முட்டையில் சிறிய அளவிலான பபுள்ஸ் வருவதை காணலாம். பின் அதில் தேன்,,லெமன் ஜூய்வே மற்றும் பேக்கிங் சோடா ஆகியவை சேர்த்து மீண்டும் நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் கார்ன் பிளார் சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு பீட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது நமக்கு ஒரு ஃபேஸ் பேக் ரெடியாகி விட்டது. இந்த ஃபேஸ் பேக்கினை ஒரு பிரஷ் உபயோகித்து முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
முதலில் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் சுத்தமாக கழுவி நன்கு வைப் செய்து விட வேண்டும். பின் இந்த பேக்கினை பிரஷால் டிப் செய்து முகத்தின் நெற்றி, கண்களுக்கு கீழே, என முகத்தின் அனைத்து பகுதியிலும் ,பின் கழுத்து பகுதியிலும் அப்ளை செய்து ஸ்ப்ரெட் செய்து கொள்ள வேண்டும். சுமார் 5 முதல் 7 நிமிடங்களில் முகமானது அப்படியே இறுகக் தொடங்கும். முட்டையின் வெள்ளைக் கருவால் ஸ்கின் டைட்டன் ஆக மாற்றும்.
பின் மீண்டும் இதே போன்று இரண்டாவது முறை இந்த பேக்கை முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து மீண்டும் சுமார் 10 நிமிடங்கள் வரை ஸ்கின் ட்ரை ஆக செய்யுங்கள். முகம் நன்கு ட்ரை ஆன பிறகு பேக் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை அலசி வைப் செய்து பாருங்கள். முகமானது ப்ளீச் செய்தது போல் ப்ரைட்டாக மாறி இருப்பதை காணலாம்.
வாரத்தில் 1 முறை இதனை செய்து வந்தால் உங்களுடைய முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளையாக மாறுவதை உங்களால் உணரா முடியும். திடீரென்று ஃபங்ஷன் அல்லது பார்ட்டி போன்றவற்றிக்கு போவதற்கு முன்னால் இதனை செய்து கொள்ளலாம். மேலும் இதனை வாரத்தில் ஒரு முறை செய்வதால் வெயிலினால் ஏற்படும் சண் டேன் நீங்கும். இதில் வீட்டில் இருக்கும் பொருட்களை உபயோகிப்பதால் பக்க விளைவு எதுவும் ஏற்படாது. நீங்களும் இந்த ஃபேஸ் பேக்கை வீட்டில் செய்து முகத்தில் வித்தியாசத்தை பாருங்க!