MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • முகத்தை ஜொலிக்க வைக்கும் பப்பாளி!! எப்படி யூஸ் பண்ணனும்?

முகத்தை ஜொலிக்க வைக்கும் பப்பாளி!! எப்படி யூஸ் பண்ணனும்?

வெயில் காலத்தில் முகம் பளபளக்க பப்பாளியை வைத்து இந்த ஃபேஸ் பேக்களை வீட்டிலேயே முயற்சி செய்து பாருங்கள்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Mar 24 2025, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Homemade Papaya Face Pack For Glowing Skin  : பப்பாளி ஆரோக்கியமான பழங்களின் பட்டியலில் ஒன்றாகும். இதில் நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பப்பாளி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சரும ஆரோக்கியத்தை பற்றி பேசினால் பப்பாளி சருமத்திற்கும் நன்றாக வேலை செய்யும். இதில் உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பப்பாளியை சாப்பிடுவதை தவிர அதை ஃபேஸ் பேக்காக முகத்தில் போடலாம். பப்பாளி ஃபேஸ் பேக் சருமத்திற்கு பளபளப்பை கொடுப்பது மட்டுமின்றி இறந்த செல்களில் அகற்றவும், துளைகளை திறக்கவும், முகப்பருவை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. இப்போது வீட்டில் தயாரிக்கப்பட்ட சில பப்பாளி பேஸ் பேக் பற்றி இங்கு பார்க்கலாம். 

35
பப்பாளி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்:

பப்பாளி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்:

பப்பாளி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் பப்பாளியை மசித்து கொள்ளுங்கள். அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி பத்து நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.

இதையும் படிங்க:  பப்பாளி இலைக்கு இவ்வளவு நல்லதா? முகத்தின் பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கும்!!

45
பப்பாளி மற்றும் சந்தன ஃபேஸ் பேக்:

பப்பாளி மற்றும் சந்தன ஃபேஸ் பேக்:

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் பப்பாளி மசித்து கொள்ளுங்கள். அதில் சந்தன பொடி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் தயாரிக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இதையும் படிங்க:  கோடை வெயிலால் முகத்தின் நிறம் மாறுகிறதா? அப்போ இந்த பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க..!

55
வாழைப்பழம், வெள்ளரிக்காய் மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக்:

வாழைப்பழம், வெள்ளரிக்காய் மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக்:

வெள்ளரிக்காய் மற்றும் வாழைப்பழம் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும்.   வெள்ளரிக்காய் சிறிய துண்டுகளாக வெட்டி பப்பாளி மற்றும் வாழைப்பழத்துடன் மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் போல் தயாரிக்கவும். அந்த பேஸ்ட்டை உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
அழகு
வாழ்க்கை முறை
பளபளப்பான சருமத்திற்கான குறிப்புகள்
பப்பாளி பேஸ் பேக்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pumpkin Seeds: முகப்பருவை விரட்ட பூசணி விதை உதவுமா? நிபுணர்கள் சொல்வது இதுதான்!
Recommended image2
Hair fall Solution : இனி முடி கொட்டுற பிரச்சனையே இல்ல! 2026-ன் பெஸ்ட் சிகிச்சை முறைகள் இதோ!
Recommended image3
கோடையில் பளபளப்பான சருமம் பெற சர்க்கரை ஸ்க்ரப் பயன்படுத்துவது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved