MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • Hair Fall: கொத்துக்கொத்தாக முடி கொட்டுதா? இந்த தவறுகளை உடனே நிறுத்துங்க!

Hair Fall: கொத்துக்கொத்தாக முடி கொட்டுதா? இந்த தவறுகளை உடனே நிறுத்துங்க!

Hair Fall: முடி அதிகமாக கொட்டுகிறதா? முடியை இறுக்கமாக கட்டுவது, அதிக Heat, Chemical Straightening உள்ளிட்ட தவறுகள் hair damage-ஐ அதிகரிக்கலாம். இது குறித்து ஆய்வுகள் கூறுவது என்ன? என்பதை இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 01 2026, 12:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
முடி ரொம்ப கொட்டுதா?
Image Credit : magnific

முடி ரொம்ப கொட்டுதா?

பெண்கள் எதையும் தாங்கும் இதயம் என்று என்னதான் டயலாக் பேசினாலும், தலை சீவும்போது சீப்பில் கொத்துக்கொத்தாக முடி இருப்பதையும், குளிக்கும்போது கை நிறைய முடி உதிர்வதையும் பார்த்தால் மனசே உடைந்துபோய்விடுவாங்க. முன்னாடி இருந்த மாதிரி இப்போ நமக்கு முடி இல்லையே என்ற கவலை பலருக்கும் இருக்கும்.

ஆனால், முடி உதிர்வதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்காது. மரபியல், ஹார்மோன் மாற்றங்கள், ஊட்டச்சத்து குறைபாடு, உடல்நலப் பிரச்சினைகள், மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் முடி உதிரலாம். அதுமட்டுமில்லாமல், நாம் அன்றாடம் செய்யும் சில hair-care பழக்கமும் முடி உதிர்வை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
முடியை இறுக்கமாக கட்டாதீங்க
Image Credit : pinterest

முடியை இறுக்கமாக கட்டாதீங்க

தலைக்கு குளித்துவிட்டு முடி ஈரமாக இருக்கும்போதே கொண்டை அல்லது tight ponytail போட்டால் முடியின் வேர்ப்பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படலாம். இதனால் traction alopecia எனப்படும் முடி உதிர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக National Institutes of Health (NIH) வெளியிட்டுள்ள ஆய்வுத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
Hair Fall: முடி உதிர்வதைத் தடுக்கும் 5 வகை எண்ணெய்கள்... இதோ லிஸ்ட்!
Related image2
Hair Health: ஆண்களுக்கு தலைமுடி உதிர்வா? தலைமுடி ஆரோக்கியத்தை பாதிக்கும் 5 முக்கிய காரணங்கள்
36
அதிக சூட்டில் Hair Dryer பயன்படுத்தாதீங்க
Image Credit : pinterest

அதிக சூட்டில் Hair Dryer பயன்படுத்தாதீங்க

முடி சீக்கிரம் காய வேண்டும் என்பதற்காக Hair dryer மற்றும் straightener, curling iron போன்றவற்றை அதிக சூட்டில் அடிக்கடி பயன்படுத்தினால் முடி உடைவதற்கு வாய்ப்புள்ளது. அதிக வெப்பம் முடியின் surface-ஐ damage செய்யலாம் என்று ஆய்வுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

46
அடிக்கடி chemical treatment செய்யாதீங்க
Image Credit : pinterest

அடிக்கடி chemical treatment செய்யாதீங்க

முடியில் சிக்கு இருக்கும்போது சீப்பு வைத்து இழுப்பது, அடிக்கடி hair straightening, relaxing, colouring, perming போன்ற chemical treatment செய்வதாலும் முடி பாதிக்கப்படலாம். மேலும், முடிக்கு எண்ணெய் வைத்த உடனே இறுக்கமாக சீவி பின்னல் போடுற பழக்கமும் நல்லதில்லை. இப்படி செய்யும்போது முடியின் வேர்ப்பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது.

56
ஷாம்பூவை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள்
Image Credit : pinterest

ஷாம்பூவை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள்

harsh chemicals அதிகம் உள்ள ஷாம்பூவை அடிக்கடி பயன்படுத்துவது, சூடான நீரில் முடியை அலசுவது, குளித்த பிறகு துணியால் முடியை பலமாக தேய்ப்பது, துணியால் முடியை அடிப்பது போன்ற பழக்கங்களும் முடியை சேதப்படுத்தலாம்.

மேலும், முடி ஈரமாக இருக்கும்போதே சீப்பால் வேகமாகவும், அழுத்தமாகவும் சீவினாலும் முடி உடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால், மென்மையான shampoo பயன்படுத்தி, குளித்த பிறகு ஈரமான முடியை அவசரப்படாமல் மெதுவாக கையாள வேண்டும் என்று dermatologists அறிவுறுத்துகின்றனர்.

66
Hair growth supplements எடுக்கலாமா?
Image Credit : pinterest

Hair growth supplements எடுக்கலாமா?

Hair growth supplements எடுத்தால் உடனே முடி வளரும் என்று நம்புவது தவறானது. கடந்த 2024-ல் வெளியான systematic review ஒன்றில் iron, zinc, vitamin D உள்ளிட்ட micronutrient குறைபாடுகள் முடி உதிர்வுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே, deficiency இருக்கிறதா? என்பதை கண்டறிந்து, முறையாக மருத்துவரின் ஆலோசனை பெற்று supplements பெறுவது நல்லது. முக்கியமாக, முடி உதிர்வு திடீரென அதிகரித்தாலோ, scalp-ல் வழுக்கைப் பகுதிகள் தோன்றினாலோ உடனடியாகன் தோல் மருத்துவரை அணுகுவது அவசியம்.

About the Author

V
Vishnupriya
முடி உதிர்தல் தடுப்பு
முடி வளர்ச்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Turmeric : பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பது ஏன்? பின்னணியில் இருக்கும் ரகசியம் இதுதான்!
Recommended image2
Collagen Foods: நம்ம உடம்புல கொலாஜன் அதிகரிக்க இந்த 6 உணவுகள் போதும்!
Recommended image3
Homemade Face Masks: பளபளப்பான இளமைத் தோற்ற சருமத்திற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய 5 இயற்கை ஃபேஸ் மாஸ்க்
Related Stories
Recommended image1
Hair Fall: முடி உதிர்வதைத் தடுக்கும் 5 வகை எண்ணெய்கள்... இதோ லிஸ்ட்!
Recommended image2
Hair Health: ஆண்களுக்கு தலைமுடி உதிர்வா? தலைமுடி ஆரோக்கியத்தை பாதிக்கும் 5 முக்கிய காரணங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved