MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • முடி உதிராமல்,கன்னாபின்னான்னு வளர இதை செய்து பாருங்க!அப்பறம் நீங்களே முடி வளர்வதை கண்ட்ரோல் பண்ண நினைப்பீ ங்க

முடி உதிராமல்,கன்னாபின்னான்னு வளர இதை செய்து பாருங்க!அப்பறம் நீங்களே முடி வளர்வதை கண்ட்ரோல் பண்ண நினைப்பீ ங்க

பாசிப்பயிறை பயன்படுத்துவதால் கூந்தலுக்கு என்னென்ன நன்மைகள், எப்படி பயன்படுத்துவது போன்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம்

2 Min read
Author : Dinesh TG
Published : Apr 01 2023, 11:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நம்மில் அதிகமானோர் பச்சை பயறு எனப்படும் பாசிப்பயிறை உணவில் சேர்த்து கொள்வோம். உணவில் சேர்ப்பதால் உடலுக்கு ஆரோக்கிய நலன்களை வழங்குகிறது. ஆனால் பாசிப்பயிறு உடலுக்கு மட்டுமல்லாமல் கூந்தலுக்கும் பல்வேறு விதமான நன்மைகளை தருகிறது. பாசிப்பயிறை பயன்படுத்துவதால் கூந்தலுக்கு என்னென்ன நன்மைகள், எப்படி பயன்படுத்துவது போன்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

முடி ஆரோக்கியத்திற்கு பச்சை பயறு :

நம்மில் பலருக்கும் முடி உதிர்தல், பொடுகு பிரச்னை, கூந்தல் வலுவில்லாமல் இருப்பது என பல்வேறு கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகளை சந்தித்து வருவீர்கள். இதற்கு மிக முக்கிய காரணம் கூந்தலுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லாத போது இப்படி நேரிட வாய்ப்புகள் அதிகமாக காணப்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை பெற வீட்டில் இருக்கும் பச்சைப்பயறு ஒன்று போதும். இது கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை கொடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவித்து விரைவு படுத்தும்.

முடி வளர்ச்சி ஹார்மோன் :

பச்சை பயறு முடிக்கு போதுமான வளர்ச்சியை ஊக்குவித்து, முடி வலிமை பெற உதவுகிறது. முடி வளர்ச்சிக்கு ரசாயனம் கலந்த மருந்துகளை எடுப்பதற்கு பதிலாக பச்சை பயிறை உபயோகித்து பலன் பார்க்கலாம். இதை வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. தவிர அதிலுள்ள அமிலத் தன்மை மயிர்க்கால்களை இறுக்க உதவி முடி உதிர்தலைக் கட்டுப் படுத்துகிறது.

முடி வரட்சியை தடுக்க :

பச்சைபயிறில் இருக்கும் இரும்பு சத்து முடியின் அடியில் இருக்கும் தோலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி வரட்சியை முற்றிலும் நீக்கி பளபளப்பான மற்றும் அடர்த்தியான கூந்தலை வளர செய்கிறது.

முடி வளர்ச்சிக்கு பச்சை பயறு :

முடி நீளமாகவும்,அடர்த்தியாகவும் வளர பச்சை பயறு ஒரு பெஸ்ட் சாய்ஸ் ஆகும்.

34

முடி வலிமை பெறுவதற்கு :

பச்சைப் பயரில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் கூந்தலின் ஈரப்பதத்தை பராமரித்து, முடியை வலிமை பெற செய்கிறது. தவிர ஃப்ரீ ரேடிக்கல்களால் உண்டாகும் சேதத்தை குறைத்து கூந்தலின் வேர்களை மேம்படுத்தி குடி உதிர்வதை குறைக்கிறது.

முடி பாதுகாப்பு :

பச்சை பயிறில் காணப்படும் யூவீ ( UV) கதிர்வீச்சு வடிகட்டியாக செயல்படுவதால் கூந்தலை பாதுகாக்கிறது.

முடி வளர்ச்சிக்கு பச்சை பயறு ஹேர் மாஸ்க் :

கூந்தலை நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர பச்சை பருப்பை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பயித்தம் பருப்பு மாவினை ஒரு சின்ன பௌலில் 5 ஸ்பூன் அளவு எடுத்து 1 ஸ்பூன் கிரீன் டீ, 1/2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் , 1/2 ஸ்பூன் பாதாம் ஆயில் , 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முடியின் வேர்ப்பகுதியில் இருந்து தடவி சுமார் 1/2 மணி நேரம் பிறகு தலைக்கு தண்ணீர் ஊற்றி அலசலாம்.

44

பச்சை பயறு ஹேர் மாஸ்க் செய்முறை 2:

பச்சை பருப்பை வேக வைத்து அரைத்து எடுத்துக் கொண்டு அதில் முட்டையின் மஞ்சள் கரு, 1/2 ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் அளவு தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து அதனை உச்சந்தலை மற்றும் முடியில் தடவி 1/2 மணி நேரத்திற்கு பிறகு ஷாம்பூ போட்டு தலை குளிக்க வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வந்தாலே முடி அடர்த்தியுடன், நீளமாக வளருவதை நீங்கள் காண முடியும்.

வீட்டில் பணம் சேர உழைத்தால் மட்டும் போதாது! இதையும் சேர்த்து செய்ங்க!செலவும் குறையும் ,பணமும் பெருகும்!

About the Author

DT
Dinesh TG
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
56 வயதிலும் யங் ஹீரோயின் போல் ஜொலிக்கும் குஷ்புவின் அழகு ரகசியம்! தினமும் முகத்துக்கு என்ன போடுறாங்க?
Recommended image2
Moringa Powder Benefits: முகம் 10 வயசு குறைஞ்ச மாதிரி தெரியணுமா? முருங்கை இலை செய்யும் மாயாஜாலம்..!
Recommended image3
Wet Hair: ஈரத்தலையோடு தூங்குற பழக்கம் இருக்கா? உஷார்! முடிக்கு மட்டுமல்ல; தலைக்கும் ஆபத்து!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved