ஒளிரும் சருமத்தை பெற குங்குமப்பூவுடன் இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க!
குங்குமப்பூ சருமத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குங்குமப்பூ சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் சுருக்கங்களை நீக்க உதவுகிறது.
பொதுவாகவே, நாம் அனைவரும் அழகாக இருப்பதை விரும்புகிறோம். அதிலும் குறிப்பாக பெண்கள் சொல்லவே தேவையில்லை. அவர்கள் தங்கள் அழகிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
சருமத்தைப் பாதுகாப்பதிலும் குங்குமப்பூ முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக குங்குமப்பூ சருமத்தை வயதாகாமல் பாதுகாக்கிறது. குங்குமப்பூ சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் சுருக்கங்களை நீக்க உதவுகிறது. குங்குமப்பூவை புளிப்பு தயிர் மற்றும் தேனுடன் கலந்து முகத்தில் தடவினால் சருமம் பளபளக்கும்.
குங்குமப்பூவில் குரோசின் மற்றும் குரோசெடின் ஆகிய இரண்டு சேர்மங்கள் உள்ளன. இவை நிறமி பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. குங்குமப்பூவில் அதிக அளவு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது. முகப்பரு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் குறைவற்ற அழகு கிடைக்கும்.
இதையும் படிங்க: குங்குமப் பூ நிறத்துக்கும் மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் மந்திர பூ!
அதுமட்டுமின்றி, குங்குமப்பூவின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காயங்களை ஆற்றுவதற்கும் புதிய செல்களை உருவாக்குவதற்கும் உதவுகிறது.
இதையும் படிங்க: Saffron Tea: தினந்தோறும் குங்குமப்பூ டீ குடித்தால் உடல் எடை குறையுமா?
குங்குமப்பூவை கண்களைச் சுற்றி தடவினால் வீக்கம் மற்றும் கருவளையம் குறைகிறது. குங்குமப்பூ துளைகளை சுத்தம் செய்கிறது. சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது. குங்குமப்பூ இயற்கையான சரும டோனராக செயல்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
குங்குமப்பூவை பாலில் ஊறவைத்து சிறிது தேன் சேர்த்து முகத்தில் ஃபேஸ் பேக்காக தடவவும். குங்குமப்பூவுடன் இந்த பேக்கை வாரம் ஒருமுறை தடவி வந்தால் முகம் பொலிவாக மாறும்.saffron